ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழிசை நாடகத் தேஇசைந் தானே. திரு - 2737
ஏழாகும் சக்கரத்தில் ஏழாக இறங்கி எழுந்து ஏழினில் ஒன்றாய் இறங்கி அமைந்து ஒன்றாகி ஏழினில் ஆறு வழிகள் எங்கள் பரஞ்சோதி ஏழிசை நாடகத்தில் இசைவு பெற்றானே. பின்குறிப்பு – சக்கரங்களும் சுரங்களும் ஏழாக இசைந்தது பரஞ்சோதி அருளே.
மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
மூன்றின்இலக்கம் முடிவாகி முந்தியே
மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே.திரு - 2738
சூரியன் சந்திரன் பூமி என்ற மூன்றினில் பஞ்சாங்கமாக ஆகி முந்நூற்று அறுபதாய் ஆகிறது. மூன்றில் ஆறு பருவ காலமாகி முதற்பண்ணீர் மூலதாய் மூன்றின் இலக்கம் முடிவாகி முன்னமே மூன்றிலும் மோகாந்தக் கூத்தை ஆடினான். பின்குறிப்பு – காலமாகி மோகாந்தக் கூத்தை ஆடுகிறான் ஏகன்.
ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட
இன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆட
அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. திரு - 2736
ஒன்பதாக உரைத்த வேதங்கள் ஆட இருகலையில் ஒன்றான பதினாறு ஆட அன்பை போதிக்கும் மார்கம் ஆறும் உடன்பட்டு ஆட இன்பம் அடையும் ஏழில் எழும் ஐம்பத்தாறும் ஆட அன்பால் ஆடனான் ஆனந்த கூத்தே. பின்குறிப்பு – அன்பால் அனைத்தும் ஆட ஏகன் ஆடினான்.
ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட இன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆட அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. திரு - 2736 ஒன்பதாக உரைத்த வேதங்கள் ஆட இருகலையில் ஒன்றான பதினாறு ஆட அன்பை போதிக்கும் மார்கம் ஆறும் உடன்பட்டு ஆட இன்பம் அடையும் ஏழில் எழும் ஐம்பத்தாறும் ஆட அன்பால் ஆடனான் ஆனந்த கூத்தே. பின்குறிப்பு – அன்பால் அனைத்தும் ஆட ஏகன் ஆடினான். #திருமந்திரம் |
ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக் கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி நீடிய நாதம் பராற்பர நேயத்தே ஆடிய நந்தி புறம்அகந் தானே. திரு - 2735 ஆடுவதற்கு உறுப்பாக உள்ள பதினொன்றும் அடையக்கூடிய பாதச் சிலம்பும் கையில் உள்ள துடியும் நீடிய நாதம் கொண்டு அனைத்தும் ஆதரிக்கும் நேயமுடன் ஆடிய நந்தி புறத்திலும் அகத்திலும் நிகழ்கிறது. பின்குறிப்பு – புறத்தே குரு குறித்த ஆடல் அகத்தில் நிகழ்கிறது. #திருமந்திரம் |
அங்கி தமருகம் அக்குமா லைபாசம் அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம் தங்குஉ பயந்தரு நீல மும்உடன் மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.திரு - 2734 வெப்பம், அசைதல், உலா வருதல், உணர்தல், சிக்குதல், பாய்தல், நிலைத்தல் உடன் ஞானம், தங்குவதல் உதவிடும் நீலமுடன் பெண்மையை ஒரு பாகமாக சிறந்த நடம் ஆடுமே. பின்குறிப்பு – எட்டு வகை செயல்பாடுகளுடன் நிலைக்க இடம் நீலம் என்றும் பெண்மையை பாகமாகவும் கொண்டு இறை நடம் இருக்கிறது. #திருமந்திரம் |
திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது உண்டார்க்கு உணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும் கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக் கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.திரு - 2733 தாங்கமுடியா தள்ளாட்டம் ஏற்பட்டு திண்டாடி விழ்வது சிவனாந்த அனுபவம். முன்னமே உண்ட உணவை மீண்டும் காண்கையில் உமிழ்நீர் சுரந்து இன்பம் ஏற்படும் அதுபோல் கொண்டாடி மகிழும் இடத்தில் திருக்கூத்தை கண்டார்களுக்கு வரும் குணம் போல் கண்டவர் பேச்சை கேட்பவருக்கும் இது பொருந்துமே. பின்குறிப்பு – சிவானந்தம் அடைந்தவரைக் கண்டால் நாமும் சிவானந்தம் அடையலாம். #திருமந்திரம் |
புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல் களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம் துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும் ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே. திரு-2732. புளிப்பு சுவை மிகுந்த புளி கண்டால் எச்சில் ஊறுவது போல் மகிழ்ச்சி உண்டாகும் திருக்கூத்தை கண்டவர்களுக்கு எல்லாம், கண்ணீர் துளிர்த்து அருளால் நெஞ்சம் உருகும், பிரகாசமுடன் ஆனந்த அமுதூறும் உள்ளத்தே. பின்குறிப்பு – இறை உணர்ந்தவர் கண்கள் ஈரம் நிறைந்து எழிலுடன் இருக்கும். #திருமந்திரம் |
அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள் தெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள் புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக் கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே. திரு - 2731 அறியப்படும் அண்டத்திலும் அதைக் கடந்தும் தேவர்கள் இருக்கிறார்கள், தெரியும் திசை சார்ந்த பூமியிலும் தேவர்கள் இருக்கிறார்கள், இவர்கள் சுரக்கும் சுனை பொன்னாக வெளிப்படும் பலவித கூத்தை கண்டு சேவித்து கதி பெறுகிறார்கள். பின்குறிப்பு – பேரண்டத்தில் உள்ள உயர்ந்தவர்கள் உண்மை பொருள் அறிந்து சேவித்து நற்கதி அடைந்தார்கள். #திருமந்திரம |
கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள் பாடிய வாறுஒரு பாண்டரங் காமே.திரு - 2730 இணைந்த திண், முழவம், குழல் என்ற இசைக்கருவிகள் ஓம் என இசைக்க அதை உணர்ந்து ஆடிய மனிதர் ஆதி நாயகன் என நாடிய நற்கணம் வட்டமிடும் பல பூதங்கள் பாடியவாறு இருப்பது ஒரு பாண்டரங்கமே. பின்குறிப்பு – இந்த பிரபஞ்சம் உடல் என்ற திண், மனம் என்ற முழவம், உயிர் என்ற குழல் கொண்டு இசைக்கப்படும் பாண்டரங்கம் ஆகும். #திருமந்திரம் |
அம்பல மாவது அகில சராசரம் அம்பல மாவது ஆதிப் பிரானடி அம்பல மாவது அப்புத்தீ மண்டலம் அம்பல மாவது அஞ்செழுத் தாமே.திரு - 2729 வெளிப்பட்டு இருப்பது அனைத்து வரிசைபடுவதும், வெளிப்பட்டு இருப்பது ஆதி நாயகனின் அடியே, வெளிப்பட்டு இருப்பது நீரும் நெருப்பும் நின்ற மண்டலம், வெளிப்பட்டு இருப்பது ஐந்து எழுத்தாமே. பின்குறிப்பு – வெளிப்பட்டு இருப்பது ஐந்து எழுத்தில் அடங்கும். #திருமந்திரம் |
ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன் ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண் மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே.திரு - 2728 ஆகாயமாகும் இந்த உடல் அகத்துள் அடைய முயல்பவருக்கு, ஒன்றே என நிற்கும் திசைகள் எட்டும் திரு உடைய கண் கொண்டால், ஆர்வம் கொள்ளும் முக்கண் மூன்று ஒளி தானாகவே ஆகாயம் என்ற அரங்கில் நடனம் செய்கின்றானே. பின்குறிப்பு – எங்கும் ஏகனின் நடனமே என்று அறியலாம். #திருமந்திரம் |
அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி அண்ட நடஞ்செயும் ஆலயம் தானே. திரு - 2727 விரிந்த அண்டம் கோடியாக எழுந்துள்ளது, அடங்கிய உடலும் கோடியாக எழுந்துள்ளது,ஆகையால் தெரியும் திசைகள் கோடியாக எழுந்துள்ளது. எண்ணிக்கையால் சூழ்ந்த இலிங்கம் கோடியாக எழுந்துள்ளது. அண்டம் நடனம் செய்யும் ஆலயம் ஆகும். பின்குறிப்பு – விரிந்த அண்டத்தின் அத்தனையும் இறையின் நடனமாடும் ஆலயம் ஆகும். #திருமந்திரம் |
மன்று நிறைந்த விளக்கொளி மாமலர் நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை சென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுள நின்றது தான்நெடு மண்டல மாமே. திரு - 2726 எங்கும் நிறைந்த விளக்கொளியாகும் மாமலர் நன்மை பயக்க வல்லது இதன் இதழ் நாலொடு நூறக சென்று அதுவே இரு நூறாக நின்றது அதுவே நெடு மண்டலம் ஆகும். பின்குறிப்பு – மூலதாரத்தில் இருந்து புருவ மத்திவரை விரிந்த நெடு மண்டலம் போன்றே அண்டங்கள் யாவும் உள்ளன. #திருமந்திரம் |
அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம் தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம் தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. திரு - 2725 கோள்கள் ஏழும் தத்துவமாக சதாசிவம் தண்டினில் சாத்தம் சாம்பம் ஆதனம் என்ற அனைத்திலும் எழும் ஏழும் சிவனின் ஆசனமாக கொண்டு பரஞ்சோதி கூத்து ஆடுகிறான். பின்குறிப்பு – ஏழு பண்களில் ஈசன் ஆடுகிறான். #திருமந்திரம் |
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம் சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே. திரு - 2724 நெற்றிக்கு நேராகவும் புருவதின் இடைவெளியிலும் உற்று உற்ப் பார்த்திட ஒளிவிடும் மந்திரம் மனதில் வளர்த்திட பற்றுக்கு இடம் தராத பரமன் இருக்கும் இடத்தை சிற்றம்பலம் என்று சேர்ந்துக் கொண்டேன். பின்குறிப்பு – முகத்திற்கு முன் இருக்கும் மூலனை அறிந்து இணைந்தேன். #திருமந்திரம் |
சத்தி வடிவு சகல ஆனந்தமும் ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம் சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே. திரு - 2723 சகல வடிவம் கொண்ட சத்தி ஆனந்தம் தருவதற்கே அப்படி இருக்கிறது. நம்முடன் ஒத்திசைந்து ஆனந்தம் தருவது உமையாளின் அருளான இந்த உடலே. சத்தி வடிவு சகளத்திலும் எழுந்து இரண்டு என்ற நிலையில் ஒத்து ஆனந்தம் அடைவது ஒரு நடனம் ஆகும். பின்குறிப்பு – பலவான சத்தி வடிவில் இரண்டு ஒன்றாக இணைந்து ஆடுதல் ஆனந்த நடனம். #திருமந்திரம் |
இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும் நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம் அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே. திரு - 2722 இடத்தை அடைத்துக் கொள்ளும் சத்தியும் என் தந்தையாகிய தலைவனும் நடனத்துடன் நின்றதை நானும் அறிந்தேன். பலவித வடிவம் கொண்டு நிற்கும் பல உயிர்களுக்கு எல்லாம் உள்ளே அடங்கியும் தான் என்றும் ஆடுகின்றாரே. பின்குறிப்பு – எல்லா உயிராக இருந்து செயல்படும் ஒன்றாக ஏக இறையை இருக்கிறது. #திருமந்திரம் |
கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும் கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம் கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக் கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே. திரு - 2721 திருநடம் செய்யும் கூத்தன் கோலம் பல செய்யும் சுற்றி விளையாடும் அவளுடன் கலந்து குறையற்ற ஆனந்தம் அருளும் குறையற்ற உலகத்தில் கூத்தனும் கூத்தியும் கூத்தாகவே இருக்கின்றனர். பின்குறிப்பு – ஆடிடும் திருக்கூத்திற்கு இரண்டு ஆதாரமாக இருக்கிறது. #திருமந்திரம் |
தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும் ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம் மாயைமா மாயை கடந்துநின் றார்காண நாயகன் நின்று நடஞ்செய்யும் ஆறே. திரு - 2720 ஒளி பரப்பும் தீ முதல் பூதங்கள் ஐந்தும் திசைகள் எட்டும் மேல் கீழ் என எல்லாவற்றையும் ஆராயும் அறிவுள்ளவனுக்கு அடுத்து கிடைப்பது ஆனந்தம். மாயை மாமாயை கடந்து நின்றவர்கள் காண நாயகன் நின்று நடஞ்செய்யும் விதமே. பின்குறிப்பு – பூதங்களை கடந்து உணர்பவரே மாமாயை கடந்தவர். #திருமந்திரம் |
வளிமேகம் மின்வில்லு வானகஓசை தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல் களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய் ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே. திரு - 2719 காற்றில் ஆடும் மேகம் மேகம் உரச ஏற்படும் மின்னல் மற்றும் வானத்து ஓசை தெளிவுடன் தூய வானத்தில் திகழ்வதைப்போல் ஐம்பூதமுடன் ஒளி என ஆறும் கலந்தாலும் வேறாய் ஒளி உரு தருவது போல் மறைந்து நின்றானே. பின்குறிப்பு – உருவம் அற்ற ஒளி போல் ஒளிந்தே இறை இருக்கிறது. #திருமந்திரம் |
திருவழி யாவது சிற்றம் பலத்தே குருவடி வுள்ளாக்குனிக்கும் உருவே உருஅரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்கு அருள்வழி யாவதும் அவ்வழி தானே. 2717 உயர்ந்த வழி என்பது சிறியதாக வெளிப்பட்டதின் வழியே குருவின் வடிவம் உள்ளத்தே தங்கி அருபமானதை உற்று உணர்ந்தவருக்கு அருள் வழியாவதும் அந்த வழிதானே. பின்குறிப்பு – உபதேசம் பெற்று உற்று உணர்பவருக்கு உள்ளத்தில் குரு வடிவம் தங்கும் வாய்ப்பமைந்த வழியை அருவம் அறியப்படும். #திருமந்திரம் |
குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம் அருவுரு வாவது அந்த அருவே திரிபுரை யாகித் திகழ்தரு வாளும் உருவரு வாகும் உமையவள் தானே திரு - 2716 குரு உருவத்தை கடந்து அறியும் உருவம் அருவம் ஆகும். அருவத்தில் இருந்து திரிந்து வளமான தோற்றம் பெறும் வரை உள்ள உருவங்கள் யாவும் உமையவள் தானே. பின்குறிப்பு – அருவமான சிவத்தில் இருந்து உருவமான சத்தி பிறக்கிறது. #திருமந்திரம் |
இருதயம் தன்னில் எழுந்த பிராணன் கரசர ணாதி கலக்கும் படியே அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன் குரவனயாய் எங்கணும் கூத்துகந் தானே.திரு - 2715 இருதயத்தில் இருந்து உற்பத்தியாகும் பிராணன் சரத்தின் காரணமாக எங்கும் கலக்கும் அப்படியே அரங்கமாக நிற்கும் மாணிக்க கூத்தன் கொடுக்கும் குரவன்னாக எங்கும் கொடுக்கும் கூத்தை உகந்து அளித்தானே. பின்குறிப்பு – எங்கும் வியாபித்தவன் எல்லாம் அசைவு பெற உகந்து அளிக்கிறான். #திருமந்திரம் |
ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும் பாடிய பாட்டும் பலவான நட்டமும் கூடிய கோலம் குருபரன் கொண்டாடத் தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே. திரு - 2714 அங்கும் இங்கும் ஆடிடும் பாதமும் அதின் எழும் சிலம்பு ஓசையும் பாடிய பாட்டும் பலவகை நாட்டமும் கூடி மகிழும் கோலமும் குருவான இறைவன் கொண்டாட அதை தேடி அதையே எனக்குள் கண்டு திருப்பதி அடைந்தேன். பின்குறிப்பு – அனுபவம் பெற்ற குருவை அடைந்து நானும் அனுபவம் பெற்றேன். #திருமந்திரம் |
அம்பலம் ஆடரங் காக அதன்மீதே எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள் தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. திரு - 2713 வெட்டவெளியே ஆடும் அரங்கமாகக் கொண்டு அதன்மீதே என் தலைவன் ஆடுகிறான் அந்த ஆட்டத்தில் இரண்டு பாதத்தின் இருந்தும் இரண்டு ஒளி இந்த உம்பரமாக இருந்து ஐந்துவித நாதத்துடன் தானே வார்தையாக வந்து நின்று தானாகவே அருளுமே. பின்குறிப்பு – வெட்டவெளியான ஆதார சோதி விளக்கும் விளங்கும் என இருசோதியாக வந்து அருளும். #திருமந்திரம் |
ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும் கூறு சமயக் குருபரன் நானென்றும் தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே. திரு - 2712 ஆறாக பெருகும் முகத்தில் அதிபதியாக நான் என்றும் கூறப்படும் சமயங்களின் குருபரன் நான் என்றும் தேறியவர்களின் தென்பகுதி அம்பலத்துள்ளே வேறுபாடு இல்லாமல் அண்ணல் விளக்கமாக நின்றான். பின்குறிப்பு – நான் என்ற நாயகனாய் எதிலும் விளக்கமாய் நிற்பது இறை. #திருமந்திரம் |
தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி மூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப் பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக் கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே. திரு - 2711 தேவர்களுடன் ஆடி திருவுடையதுடன் வெளிப்படையாக ஆடி மூவருடன் ஆடி முற்படும் மனிதர்களுடன் ஆடி பண் கலந்த இசையாகும் பாவுடன் ஆடி பராசத்தியுல் ஆடி தலைமையுடன் ஆடிடும் கூத்தின் நாயகன். பின்குறிப்பு – சிறந்தவற்றுடன் ஆடுகிறான் கூத்தின் தலைவன். #திருமந்திரம் |
நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடி வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி போதத்தில் ஆடி புவனம் முழுதாடும் தீதற்ற தேவாதி தேவர் பிரானே. திரு - 2710 நாதத்தினால் ஆடி நான்கு வார்த்தைக்கு ஆடி வேதத்தில் ஆடி முடிவான நிழல் தந்து ஆடி முடிவில் ஆடி பாகுபாட்டுடன் ஆடி புவனம் முழுவதும் ஆடிடும் தீமைகள் இல்லாத தேவாதி தேவர் தலைவனே. பின்குறிப்பு – நாதத்தில் நான்கு வேதத்தில் போதத்தில் ஆடிடும் தீமை இல்லாதவன் தலைவன். #திருமந்திரம் |
ஈறான கன்னி குமரியே காவிரி வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள் பேறான வேதா கமமே பிறத்தலான் மாறாத தென்திசை வையகம் சுத்தமே. திரு - 2709 இரண்டாக இருக்கும் இளமையே கன்னி குமரி காவேரி என்பது வேறான நவதீர்த்தம் மிகுதியான தனித்தனியாக இருக்கும் ஏழுள் உண்டான வேதாகமமே பிறந்தது இதற்கு மாறான தென்திசை வைகம் சுத்தமாய் இருக்கிறது. பின்குறிப்பு – மதன நீரும் மாசால் (அழுக்கால்) ஆன நீரும் வரும் இடம் சுத்தமாக இருக்கிறது. #திருமந்திரம் |
இடைபிங் கலைஇம வானோடு இலங்கை நடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை கடவும் திலைவனம் கைகண்ட மூலம் படர்பொன்றி என்னும் பரமாம் பரமே. திரு - 2708 இடப்பக்க வலப்பக்க சுவாசத்தை இமவனோடு இலங்கை என்றும் நடு நின்ற சுழுமுனை என்றும் உருவகம் செய்து கடைந்தபடி உள்ள தில்லைவனம் கைகண்ட மூலம் ஆகும். அடுத்த ஒன்றுடன் படராமல் இருந்து அறிவதே பரமாகும் பரம். பின்குறிப்பு – நான் என்ற பற்று அற்று இருக்க பரத்தை அறியலாம். #திருமந்திரம் |
மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழு சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு நாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம் பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே. திரு - 2707 மேம்பட்டு தோன்றியது மூவேழ் கடந்து இருப்பினும் அண்டம் ஒர் ஏழு என இருப்பினும் சாதமாக அமைக்கப்பட்ட சமயங்கள் நூற்றெட்டு ஆகும். நாத அனுபவமாகும் இறுதியுடன் நடன ஆனந்தம் நல்ல பாதம் பாதி உடன் ஆடிடும் பரன் இருபாதமே. பின்குறிப்பு – உபதேசப் பொருளும் நாத அனுபவமே சரியானதை காட்டும். #திருமந்திரம் |
கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம் அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம் செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால் உம்பரம் மோனஞா ஞானந்தத்தில் உண்மையே. திரு - 2706 வணங்கி பணிந்திட வெளிப்பட்டு ஆடிய தலைமை நடனம் பரத்து நாயகன் ஆடும் அனைத்து அண்ட நடனமாம் செழுமையான பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்து உணர்ந்தால் தேவர்கள் அடையும் மோன ஞான ஆனந்தத்து உண்மையே. பின்குறிப்பு – உலகில் ஆடும் ஆட்டமே தலைமை நடனம் ஆகும். #திருமந்திரம் |
ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட ஓதும் சடையாட உன்மத்த முற்றாடப் பாதி மதியாடப் பாரண்ட மீதாட நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே. திரு - 2705 ஆதியிலேயே வியாபித்த பரன் ஆட அதன் நின்று எழுந்த கனல் ஆட ஓதும் சடை ஆட உள்ள அனைத்தும் ஆட பாதி என வளர்ந்து தேயும் மதி ஆட பார்க்கும் அண்டம் அசைந்து ஆட நாதத்துடன் ஆடினான் நாதத்தை இறுதியக கொண்டு நாட்டம் வைத்தவன். பின்குறிப்பு – நாத வடவானவன் எல்லாமுமாய் ஆடுகின்றான். #திருமந்திரம் |
குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம் சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து புரானந்த போகனாய்ப் பூவையும் தானும் நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே. திரு - 2704 குரு அருளிய ஆனந்த கீற்றாய் நுண்ணிய குணம் அடைந்து சிரசில் இன்பம் பெருக பூரித்து தென்திசை சேர்ந்து முழுமையையும் அனுபவித்தவனாய் புவையும் தானும் நிரந்தர ஆனந்தமாய் முடிவுறச் செய்தானே. பின்குறிப்பு – குரு அருளால் நிரந்தரம் அடைந்தேன். #திருமந்திரம் |
அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப் பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத் தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக் கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. திரு - 2703 அண்டங்கள் ஒருங்கே எழுந்தாலும் அதற்கு தனிச் சிறப்பான பதியாகவும் முன்னர் ஆகாசத்தின் ஐந்தும் பதியாக தற்சமயம் சத்தியே திரு அம்பலமாக கொண்டு பரஞ்சோதி கூத்து விரும்பி ஆடுகின்றான். பின்குறிப்பு – அண்டங்கள் அனைத்துடன் பூதங்களாகவும் சத்தியாகவும் திருக்கூத்து இறை ஆடுகிறது. #திருமந்திரம் |
பூதல மேருப் புறத்தான தெக்கணம் ஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம் பாதி மதியோன் பயில்திரு அம்பலம் ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே. திரு - 2702 பூமிப் பந்தில் மலைகள் வெளிப்பட்டது எங்ஙணம் சுவாசம் ஓதும் இடை பிங்கலை ஒன்றும் சுழுமுனையாம் போல் சூரிய சந்திர ஈர்ப்பும் வெப்பம் அடைந்து ஏதுமற்ற காலத்தில் பூதலத்தில் எல்லையற்ற மாற்றம் அடைந்தது. பின்குறிப்பு – உடல் மாற்றம் அடைவது போல் பூமியும் மாற்றம் அடைகின்றது. #திருமந்திரம் |
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கனல் கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும் சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு ஏறும் கழுமுனை இவைசிவ பூமியே. திரு - 2701 மேருவை வந்தடையும் நடு நாடியில் அதிகம் ஆகும் இடைகலை பிங்கலை பிங்கலையில் கனல் உண்டாகிடும் விளக்கமாய் இதை வானில் கூறிட இலங்கையை குறியாக்கிடலாம் மேலும் இதை சார்ந்த திலைவனம் தண்மாமலை ஏறும் கழுமுனை என இவைகள் சிவபூமியே. பின்குறிப்பு – இயற்கையின் அமைப்பாகிய பூமியும் சிவத்தின் தன்மையில் இருக்கிறது. #திருமந்திரம் |
காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக் கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி நாளுற அம்பலத் தேயாடும் நாதனே. திரு - 2700 காளி என்ற வெற்றிடமாய் ஆடி காடும் நீரும் கலந்து ஆடி சிதைவுகளுடன் ஆடி குவலயத்தே ஆடி வளரும் நீர் தீ காற்று நீண்ட வானம் என இவைகளின் இடையே ஆடி நாளும் அம்பலத்தே ஆடும் நாதனே. பின்குறிப்பு – எதிலும் இறை நடனமே நடக்கிறது. #திருமந்திரம் |
தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள் வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன் ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே. திரு - 2699 தேடி அறிய நினைக்கும் சிந்தை திகைப்புறும் இந்த உடலில் வாட்டத்தை போக்கும் சுவாசமும் புதியதாக வரும் நீர் ஒட்டு மொத்த ஆசையும் முடிந்து உள்ளத்தே ஆனந்தம் அதிகப்படும் நாடகத்தை காணவே. பின்குறிப்பு – சிந்தை தெளிந்து கண்ணிர் பெருக ஆனந்த நாடகத்தில் ஆவல் மிகைப்படும். #திருமந்திரம் |
விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும் தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும் செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள் அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே. திரு - 2698 அழுகையால் விம்முவதும் வெருவுவதும் விழுவதும் எழுவதும் உடல் சோர்வும் தன்னையும் மறந்து அறியாதவர் நான்கையும் துறக்க செம்மை சிறந்த திரு அம்பலக் கூத்துள் அந்த மலர் பொற்பாதத்தில் அன்பு வைப்பவர்களுக்கே. பின்குறிப்பு – மலர் இடத்தில் ஏறி நின்றவரே தன்னை மறந்து செம்மை அடைவார்கள். #திருமந்திரம் |
மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப் பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச் சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே. திரு - 2697 மாணிக்கம் வைத்து ஆடும் கூத்தனை திடமான தில்லை கூத்தனை பூ போல் மலர்ந்த அரங்கத்தில் விரிந்த வணங்கா முடியுடன் ஆடும் கூத்தனை குழைந்தைப் போன்ற சோதி கொண்ட சிவானந்த கூத்தனை ஆணிப்பொன் கூத்தனை யார் அறிந்து உரைப்பாரோ. பின்குறிப்பு – அதிசியம் பல நிகழ்த்தும் கூத்தனை யார் அறிந்து எடுத்தியம்புவார்களோ. #திருமந்திரம் |
உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச் செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச் சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே. திரு - 2696 தேவர்களில் கூத்தாடும் தேவாதி தேவனை உத்தமக் கூத்தனை செம்மையும் பொன்னும் போன்ற திருமன்றுள் சேவை செய்யும் கூத்தனை ஒத்திசையும் சம்பந்தக் கூத்தனை தற்பரக் கூத்தனை இன்புற நாடி என் அன்பில் வைத்தேனே. பின்குறிப்பு – சிறப்புகள் பலவற்றை விளையாட்டாய் அருளும் உத்தமக் கூத்தனை என் உள்ளத்தில் இன்பம் தங்க வைத்தேன். #திருமந்திரம் |
அடங்காத என்னை அடக்கி அடிவைத்து இடம்காண் பரானநத்தத் தேஎன்னை இட்டு நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன் படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே.திரு - 2695 அடங்காத என்னை அடக்கி அடி வைத்து இடம் இது என்று காட்டி ஆனந்தத்தை எனக்கு இட்டு நடக்கச் செய்யும் நந்தி ஞானக்கூத்தன் படம்தான் செய்து உள்ளுக்குள் படிந்திருந்தானே. பின்குறிப்பு – நல்ல குருவின் உருவம் உள்ளுக்குள் படிந்து ஞான நடனம் செய்கிறது. #திருமந்திரம் |
அடிஆர் பவரே அடியவர் ஆமால் அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே அடியார் அரனடி ஆனந்தம் கண்டோ ர் அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர். திரு - 2694 இறையின் திருவடியை ஆள்பவரே அடியவர் அப்படிப்பட்ட அடியார் பொன் அம்பலத்து ஆடல் கண்டவர். அடியார் அரனது அடி ஆனந்தம் கண்டோர் அடியார் ஆனவர் அத்தகைய அருள் உற்றோர். பின்குறிப்பு – திருவடி அறிந்தவரே இறை அருள் பொற்றோர். #திருமந்திரம் |
தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில் அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும் ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள் தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.திரு - 2693 திசைகள் நான்குடன் மேலான உச்சியில் அற்புதமான தலையின் அஞ்சு முகத்தில் ஒப்பில்லாத பேரின்பம் அடைய உதவியான உதவிப் பொருளில் தற்பரன் நின்று தனி நடனம் செய்யுமே. பின்குறிப்பு – முகத்தில் தனி நடனம் செய்யும் தற்பரன் இருக்கிறது. #திருமந்திரம் |
மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும் தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும் தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும் ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே. திரு - 2692 வான்மேல் நிலைக்கும் மேகங்கள் ஏழும் விரிந்த கடலில் உள்ள தீவுகள் ஏழும் தேகத்தில் எல்லாம் சூழும் சிவபாற்கரன் ஏழும் தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும் நந்தியாகும் ஒருவருக்கு அடங்குமே. பின்குறிப்பு – நந்தி என ஆனால் சிலவற்றை அடக்கி ஆளலாம். #திருமந்திரம் |
சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும் முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும் சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும் சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே. திரு - 2691 சத்திகள் என்ற பூதங்கள் ஐந்தும் உயரின் பேதங்கள் ஐந்தும் முத்திகள் எட்டும் முதலாகும் (உயிர் எழுத்து) வார்த்தைகள் எட்டும் சித்திகள் எட்டும் நாடி சுத்திகள் எட்டும் என ஈசன் நித்தம் நடனம் ஆடுகின்றான். பின்குறிப்பு – என்றேன்றும் ஈசனே ஆட்டிவைத்து ஆடுகிறான். #திருமந்திரம் |
ஆனநந்தி யாடிபின் நவக் கூத்தாடிக் கான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடி மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே. திரு - 2690 உண்டான உளவெப்பதாகும் நந்தி ஆடி அதன்பின் புதுமைக் கூத்தாடி உணரும் நந்தி ஆடி கருத்தினில் தரித்து ஆடி மூன்று வட்டம் இருக்கும் இடத்தில் ஆடி முடிவற்ற ஞானத்துள் ஆடி முடித்தான் நாதனே. பின்குறிப்பு – படிப்படியாக ஆடி முடித்து நாதத்தினில் கலந்திடலாம். #திருமந்திரம் |
அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில் தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில் சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல் பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே. திரு - 2689 குத்தி இழுக்கும் அங்குசம் போன்ற வளர்ந்து எழும் மாறுபாட்டில் தங்கியபடி இருக்கும் தொந்தி என்ற தாள ஒத்தினில் அழிந்து போகும் ஆற்றலாக இருப்பவன் மூல நாடிக்குள் தரித்து ஆடல் பொங்கிய காலத்தில் போகத்திற்கு புகல் இல்லையே. பின்குறிப்பு – யோகி மேல் நோக்கி நகரும் தருணத்தில் போகம் தடைபெறுகிறது. #திருமந்திரம் |
பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம் பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன் பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம் பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே. திரு - 2688 இருக்கும் அனைத்து உலகிலும் பராசத்தியின் பாதமே ஊடுருவுகின்றது. இருக்கும் அனைத்து உலகிலும் ஈசன் ஒளி படர்ந்து ஊடுருவுகின்றது. இருக்கும் அனைத்து உலகிலும் நாதமே படர்ந்து ஊடுருவுகின்றது. இருக்கும் அனைத்து உலகிலும் பரன் நடனமே ஊடுருவுகின்றது. பின்குறிப்பு – அகில அண்டத்திலும் சத்தியும் ஒளியும் நாதமுமாய் பரன் நடனம் அமைந்திருக்கிறது. #திருமந்திரம் |
கொடிகட்டி பாண்டுரங் கோடுசங் காரம் நடம் எட்டோ டு ஐந்துஆறு நாடியுள் நாடும் திடம்உற்று ஏழும்தேவ தாருவும் தில்லை வடம் உற்ற மாவனம் மன்னவன் தானே. திரு - 2687 கொடி கட்டி பாண்டு அரங்கு கோடு சங்கு ஆரம் நடம் என்ற எட்டு வகை நடனத்துடன் ஐந்தாக வழி நடக்கும் நாடியுள் நாடிட திடம் பெற்ற ஏழும் தேவரும் தில்லை வடம் பெற்ற மாவனம் மன்னவன் தானே. பின்குறிப்பு – ஆடிடும் நடனத்தையும் தனக்குள் ஓடிடும் நாடி நிலையையும் ஒருங்கே அறிந்து நடப்பவர் மன்னருக்கு ஒப்பானவர். #திருமந்திரம் |
அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால் உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல் கண்டம் கரியான் கருணை திருவுருக் கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே.திரு - 2686 ஒட்டி இருக்கும் ஏழு அண்டங்களுக்கு அப்புறத்திற்கு அப்பால் உண்டு என்று அறியும் சத்தி நிலைத்த சிவத்தின் உச்சிக்கு மேல் கருப்பான வட்டத்தில் கருணை திருவுருக் கொண்டு மனம் அடங்கிய ஊமை காணும்படி கூத்தை உகந்து அளித்தான். பின்குறிப்பு – மெய்ப்பொருளாய் நின்று மனம் அடங்கிட ஆடுகின்றான். #திருமநதிரம் |
தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர் மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள் தாபதர் சத்தர் சமயம் சராசரம் யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே. திரு - 2685 தேவர்கள் வீரர்கள் மனிதர்கள் சித்தர்கள் வித்தை அறிந்தவர்கள் மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள் உருபாக்குபவர்கள் திடமானவர்கள் சமயம் சராசரம் என யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே. பின்குறிப்பு – இறை விருப்பத்தால் மட்டுமே யாவும் ஆடுகிறது. #திருமந்திரம் |
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில் வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில் ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப் போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே. திரு - 2684 பூதங்கள் ஐந்திலும் பொறிகள் என விரிந்த புலன்கள் ஐந்திலும் வேதங்கள் ஐந்திலும் உயர்ந்த ஆகமத்திலும் ஓதப்படும் கலையில் காலத்தில் காலமற்றம் தரும் ஊழியில் அண்டத்துப் போதங்கள் ஐந்தில் கூடி ஆடுபவன் சித்தனே. பின்குறிப்பு – ஏக இறை எல்லாவற்றிலும் கூடி ஆடுவதை சித்தமாக கொண்டு இருக்கிறது. #திருமந்திரம் |
வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக் கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப் பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே.திரு - 2683 வேதங்கள் வார்த்தைகளின் அசைச் சொற்றகளால் ஆடசிறந்த ஆகமங்கள் ஆட புகழ்ந்துப் பாடும் கீதங்கள் ஆட உண்டான அண்டமும் கிளர்ந்து ஆட பூதங்கள் ஆட புவனம் முழுவதும் ஆட நாதத்தை கொண்டே ஆடினான் ஞானாந்தக் கூத்தனே. பின்குறிப்பு – நாதம் எழுப்பிய படி எல்லாவற்றிலும் ஞானம் அருள்பவன் ஆடுகிறான். #திருமந்திரம் |
பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்ட மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட தாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்து ஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே. திரு - 2682 பூதங்களாக ஆண்டு பேதங்களாக ஆண்டு போகங்களாக ஆண்டு யோகங்களாக ஆண்டு தேகங்களாக ஆண்டு தான் என்று ஆண்டு ஐந்து கருமத்தை ஆண்டு தன் படைப்பின் பரத்தே தனிமையாக ஏகாந்தமாக பிரமாண்டமாக இருக்கவே. பின்குறிப்பு – அனைத்திற்கும் ஏகமான ஒன்று மட்டுமே ஆதாரமாக இருக்கிறது. #திருமந்திரம் |
ஆன நடம்ஐந்து அகள சகளத்தர் ஆன நடமாடி ஐங்கரு மத்தாக ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே தேன்மொழி பாகன் திருநட மாடுமே. திரு - 2681 நடனம் செய்ய ஆனவைகள் ஐந்து அதில் இருந்து தோன்றிய நிலைத்த என அனைத்தும் நடமாடி ஐந்து செயல்களாக செய்யும் அருளால் தேன்மொழி பாகன் திரு நடனம் ஆடுதே. பின்குறிப்பு – ஆன எல்லாம் இறையின் திரு நடனத்திற்கே. #திருமந்திரம் |
ஒளியாம் பரமாம் உளதாம் பரமும் அளியார் சிவகாமி யாகும் சமயக் களியார் பரமும் கருதுறை யந்தக் தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.திரு - 2680 ஒளியாக வெளிப்பட்டதே இந்த பரம் அதனால் பரம் வெளிபட்டு இருக்கிறது. கொடுக்க ஆசை கொண்ட சிவனை நேசிப்பவள் சமயக் கோட்படுகளுடன் களிப்பவருக்கு கருத்தை அளிக்கிறாள். அவர்கள் தெளிய ஏற்ற வழி சினாந்த நடனத்தை அறிவது அதனால் அவர்கள் சித்தி பெறலாம். பின்குறிப்பு – வெளிப்பட்ட உலகை உணர சிவனாந்தமே சித்தி தரும். #திருமந்திரம் |
ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள் ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம் ஆனந்தம் ஆக அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே. திரு - 2679 ஆனந்தமே ஆடும் அரங்கான இந்த பூ உலகம். ஆனந்தமே இங்கே எழும் ஓசை நயமான பாடல்கள். ஆனந்தமே ஒத்திசைதல், ஆனந்தமை வாசித்து மகிழ்தல், ஆனந்தமே என்கிறது அகில சராசரம். ஆனந்தமே ஆனந்த கூத்தில் திளைப்பவனுக்கு. பின்குறிப்பு – ஆனந்தமே மனித வாழ்வின் இலக்கு. #திருமந்திரம் |
தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல் தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர் ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே. திரு - 2678 தனக்கு ஒரு முடிவு இல்லாத நித்திய ஆனந்த சத்தியின் மேல் தேன் சுரக்கும் ஆனந்த மா நடம் கண்டவர்களே ஞானத்தையும் கடந்து நடனம்ஆடும் உண்மைக்கு ஆனந்த கூத்து ஆடாவே இந்த உடல் ஆடல் அரங்கமாக ஆனது. பின்குறிப்பு – இறைவனின் இசைக்கு இசைந்து ஆடுவதற்கே இந்த உடல் எடுத்தது. #திருமந்திரம் |
திருமேனி தானே திருவரு ளாகும் திருமேனி தானே திருஞான மாகுந் திருமேனி தானே சிவநெய மாகும் திருமேனி தானே தெளிந்தார்க்கு சித்தியே.திரு - 2677 நாதம் அனுபவமாக பெற்ற இந்த உடலே திருமேனி ஆகையால் அது திருவின் அருளாகிறது. திருமேனியே திரு ஞானம் அடைகிறது. திருமேனியே சிவ நேயமாகிறது. திருமேனியே தெளிர்ந்தவர்களின் சித்தி. பின்குறிப்பு – அருளால் ஞானம் அடைந்து நேயத்துடன் நடப்பது இந்த திருமேனியில் தான். #திருமந்திரம் |
திருமந் திரமே சிதம்பரந் தானும் திருமந் திரமே சிறந்த உபாபங்கத் திருமந் திரமே திருக்கூத்தின் செய்கை திருமந் திரமே திருமேனி தானே.திரு - 2676 திருமந்திரமே ஈரம் நிறைந்தவன் தானாக அருளியது திருமந்திரமே சிறந்த துணையாக பங்களிக்கும் திருமந்திரமே திருவின் விளையாட்டின் வெளிப்பாடு திருமந்திரமே திருமேனி. பின்குறிப்பு – திருமந்திரம் என்பது யோக சாதனையின் இறுதிப் பேறான நாதம் அடைவது. அது ஏகமான ஒன்றான இறை. #திருமந்திரம் |
சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச் சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப் பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யார்அறி வாரே.திரு - 2675 சிறப்பு நிறை பரஞ்சோதியை சிவானந்தக் கூந்தனை சொல்பதம் கடந்த சுந்தரக் கூத்தனை பொருள் பொருத்தும் ஆடலரசனை உயர் பொருளாக்கும் ஆடலழகனை அற்புதம் நிகழ்த்தும் நடிகனை யார் அறிவாரோ. பின்குறிப்பு – ஐந்தொழில் செய்யும் ஆடலழகனை யார் அறிவார்களோ, #திருமந்திரம் |
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. திரு - 2674 குறிப்பிட்ட இடம் என்று இல்லாமல் எல்லா இடத்திலும் அவனது திருமேனியே எல்லா இடத்திலம் சிவசத்தியே எல்லா இடத்திலும் ஈரம் சூழ்ந்தே உள்ளது எல்லா இடத்திலும் திரு நடனமே எல்லா இடத்திலும் சிவமாய் இருப்பதால் எல்லா இடத்திலும் சிவனருள் நிறைந்து அவனது விளையாட்டே நடக்கிறது. பின்குறிப்பு – எங்கும் எதிலும் எல்லாமாய் இருப்பது இறை அருளே. #திருமந்திரம் |
பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர் எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே. திரு - 2673 முழுமை அடையந்த ஐந்தும் பழைமையான மறையுள்ளே விழித்தும் உறங்கியும் இருக்கும் செயல்களை அறிபவர் இல்லை எழுத்தை மட்டுமே படித்து அறிந்துக் கொண்டோம் என்பார்கள் ஏதுமற்றவர்கள் எழுத்தையும் அழுத்தும் எழுத்தை அறியவில்லையே. பின்குறிப்பு – தனக்குள் உள்ள ஆதார நாதத்தை அறியாமல் படித்தே அறிந்தவர் போல் நடிப்பவர்களே உள்ளார்கள். #திருமந்திரம் |
நாயோட்டு மந்திரம் நான்மறை நால்வேதம் நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம் நாயோட்டு மந்திரம் நாதாந்த மாம்சோதி நாயோட்டு மந்திரம் நாமறி யோமே.திரு - 2672 நான் மதிக்கும் மந்திரம் நான்மறை நால் வேதம் நான் மதிக்கும் மந்திரம் நாதன் இருப்பிடம் நான் மதிக்கும் மந்திரம் நாத முடிவான சோதி நான் மதிக்கும் மந்திரம் நாம் எல்லோரும் அறிவதில்லை. பின்குறிப்பு – நல்ல மந்திரத்தை எல்லாரும் அறியவில்லை. #திருமந்திரம் |
அங்கமும் ஆகம வேதமது ஓதினும் எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால் அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே. திரு - 2671 உடல் ஒத்திசைந்து ஆகமவேதங்களை படித்து உச்சரித்தாலும் எங்கள் தலைவன் எழுத்து ஒன்றில் இருப்பது சாங்கு அதை கேட்டு அந்த எழுத்தை சாதித்தால் சேருத் கரை சேர்ந்த அருமையான கலமாகும். பின்குறிப்பு – நாத அனுபவம் நற்கரை சேர்க்கும். #திருமந்திரம் |
செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம் அஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டு துஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே. திரு - 2670 சிவந்த வண்ணம் தோன்றும்படி மனதினை நிலை நிறுத்தி பயத்தை போக்கும்படி ஏறி வழியை அடைந்து ஒய்ந்து அவன் சொன்ன காலத்து இருக்க இறைவனை நெஞ்சில் நீங்காதபடி நிலைபெறச் செய்யலாம். பின்குறிப்பு – சிவப்பு வண்ணம் தோன்றும் அளவு கவனமுடன் இருக்க இறைவனின் நினைப்பு நெஞ்சில் விலகாது நிலைக்கும். #திருமந்திரம் |
சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே. திரு - 2669 சிவாய நம என்றபடி மனதின் எண்ணத்தை ஒடுக்கி அழிவை அழித்திட எண்ணத்தை தன்வசப்படுத்தி சிவாய சிவசிவ என்றபடி மனதில் அழித்திடும் எண்ணம் கெட்டிட ஆனந்தம் ஆகும். பின்குறிப்பு – சிவாய நம என்று மனதை அடக்கிட ஆனந்தம் நிகழும். #திருமந்திரம் |
நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச் சிவமென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப் பவமது தீரும் பரிசும்அது அற்றால் அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ. திரு - 2668 நம என்ற நாமத்தை நாவில் ஒடுக்கி சிவ என்ற நாமத்தை மனதில் ஏற்றிட பாவம் தீரும் பரிசும் அதுவே ஆகும். அதுமட்டுமின்றி அவதி ஒழிந்து பிறப்பு அறுபடும். பின்குறிப்பு – நம சிவ என்பதை உச்சரிக்கும் விதம் அறிந்து உச்சரிக்க பிறப்பு அறுபடும். #திருமந்திரம் |
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே. திரு - 2667 சிவசிவ என்று சொல்வதற்கு முயல்வதில்லை தீய வினை செய்தவர்கள், சிவசிவ என்று சொல்வதால் நீய வினைகள் அழியும் சிவசிவ என்றிட தேவராகலாம் சிவசிவ என்றால் சிவகதி வாய்க்கும். பின்குறிப்பு – சிவசிவ என சொல்வதால் குற்றம் அழிந்து சிவகதி கிடைக்கும். #திருமந்திரம் |
சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர் சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச் சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள் சிவசிவ ஆகும் திருவருள் ஆமே.திரு - 2666 சிவம் என்ற சிவமே உயிர் என்று தெளிவதில்லை ஊமர்கள் சிவசிவ என்று காற்றை தேர்ச்சியுடன் அடங்கிடச் செய்து சிவசிவ என்று ஆய்ந்து தெளிவில் உள்ளார்கள் சிவசிவ என ஆவது திருவருள் தானே. பின்குறிப்பு – காற்றும் நெருப்புமாய் உயிர் உள்ளதை ஊமர்கள் அறிந்து தெளிவதில்லை. #திருமந்திரம் |
அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில் ஒருவனை ஈன்றவர் உள்ளுறும் மாயை திரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும் அருவினை தீர்fப்பதும் அவ்வெழுத் தாமே. திரு - 2665 அருள் தரும் ஆலயம் அதில் இருக்கும் தலைவன் என்பது தம்முள்ளேதான். ஒருவனை ஈன்றவர் உள்ளே தான் என எண்ணும் மாயை மும்மலத்தை நீங்கீச் சிவாய என்று ஓதும் அழியா வினைகளையும் தீர்க்கும் அவ்வெழுத்தாகும். பின்குறிப்பு – உள்ளே நின்று அருள்பவனின் ஔ என்ற நாதமே எல்லா வினைகளையும் தீர்க்கும். #திருமந்திரம் |
நமாதி நனாதி திரோதாயி யாகித் தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச் சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவே நமாதி சமாதி சிவமாதல் எண்ணவே.திரு - 2664 நாம் எல்லோரும் ஆதி என்ற ஒன்றில் இருந்தே நான் என்று திரிந்து வந்தாலும் தான் என்ற ஒன்றாய் தாய் என்று நிற்க அதை அடைய சமாதித் துரியம் தமது அகம் ஆகவே நாம் ஆதி சமம் ஆதி சிவமாதல் என எண்ணலாம். பின்குறிப்பு – நாம் துரியத் தன்மையால் சிவமாதலை சாதிக்கலாம். #திருமந்திரம் |
தெள்ளமு தூறச் சிவாய நமவென்று உள்ளமு தூற ஒருகால் உரைத்திடும் வெள்ளமு தூறால் விருப்பிஉண் ணாதவர் துள்ளிய நீர் போற் சூழல்கின்ற வாறே.திரு - 2663 தெளிந்த அமுது ஊறிட சிவாய நம என்று உள்ளம் அமுது ஊற ஒருகால் உரைத்துடும் வெள்ளம் போன்ற அமுது ஊறுவதை விரும்பி உண்ணாதவர் துள்ளிய நீர் போல் சூழல்கின்றவாறே. பின்குறிப்பு – உள்ளம் உருக சிவாய நம என்று சொல்லாதவர் சூழல் நீராக போகிறார். #திருமந்திரம் |
ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ் ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால் தீதில் சிவஞான யோகமே சித்திக்கும் ஓதும் சிவாயமலமற்ற உண்மையே. திரு - 2662 தன்னை முன் நிறுத்தி ஓதிய மலத்தை ஒழித்திட்டால் ஆதியும் தன்னை விட்டு இறையருள் சத்தியால் தீதற்ற சிவஞான யோகமே சித்திக்கும் ஓதும் சிவாயம் மலமற்றது உண்மையே. பின்குறிப்பு – சிவாய மந்திரம் சிவஞான யோகம் தரும். #திருமந்திரம் |
சிவன்அரு ளாய சிவன்திரு நாமம் சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை சிவன்முத லாகச் சிறந்து நிரோதம் பவமது அகன்று பரசிவன் ஆமே. திரு - 2661 சிவன் அருளாக இருப்பது சிவனது நாமம் சிவன் அருளே ஆன்மா திரோதம் மலம் மாயை என்பது சிவனை முன் நிறுத்த நிரோதமாகி சிறக்கலாம். பவம் அகன்று பரசிவன் ஆகலாம். பின்குறிப்பு – சிவனை முன் நிறுத்தி சிவாய நம என்று சொல்ல பவம் அழியும். #திருமந்திரம் |
சிவன்சத்தி சீவன் செறுமல மாயை அவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச் சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே. திரு - 2660 சிவன்சத்தி சீவனில் சேர் மலம் அவம் சேர்ந்த பாசம் என்ற ஐந்து மலத்தை அகற்றிட சிவன் சத்தி தன்னுடன் சீவனார் சேர அவம் சேர்ந்த பாசம் அணுகாது போகும். பின்குறிப்பு – சிவசத்தியுடன் சீவனார் சேர அவம் விலகும். #திருமந்திரம் |
எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த் தெளிய ஒதிச்சிவாயநம என்னும் குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே. - 2659 எளிமையாக வாதம் செய்து எங்கள் ஈசனை மறுப்பார்கள் ஒளியை உள்ளத்தால் கவனித்து உருகும் மனம் உள்ளவராக தெளிய சிவாயநம என ஓதி குளிகை இட்டு பொன்னாங்குவேன் இந்த உடல் என்ற கூட்டையே. பின்குறிப்பு – உணர்வு தரும் மந்திரம் இதனால் உடல் வளம் பெறும். #திருமந்திரம் |
பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர் பராமுற்றும் கீழோடு பல்வகை யாலும் அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே.திரு - 2658 தலைவன் தந்த ஐந்தின் பெருமையை உணராமல் இல்லாத பொருள் கொள்வார்கள் ஏழை மனிதர்கள் உலகம் முழுவதிற்கும் அதற்கும் கிழான பலவகைகளுக்கும் பாம்பு அடைக்கலாம் ஆகும் இடம் போன்ற பாதுகாப்பான அகலிடம் தானே. பின்குறிப்பு – ஐந்தெழுத்தே சிறந்த அகலிடம் ஆகும். #திருமந்திரம் |
நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று மஞ்சு தவழும் வடவரை மீதுரை அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே. திரு - 2657 நெஞ்சில் நினைத்தபடி வாயால் தலைவன் என்று உறங்கும் பொழுதும் உனது திருவடியே சரண் என்று மஞ்சத்தில் வீழும் வளமானவர் அளவற்ற ஐந்து எழுத்து உரைத்து இறைவன் அருள் பெறலாம். பின்குறிப்பு – இறை நாமாமாக ஐந்தொழுத்தை உறங்கையிலும் உச்சரிப்பவர் இறை அருள் பெறுவர். #திருமந்திரம் |
வெறிக்க வினைத்துயிர் வந்திடும் போது செறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும் குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும் குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே. திரு - 2656 வேதனை தரும் வினைத்துன்பம் வந்திடும் பொழுது மாற்றிடச் செய்யும் நந்நி திரு எழுத்து ஓதும் குறிப்பினில் உனக்குள் நல்வழி காட்டும் அந்த குறிப்பை உணர்பவர் தவத்தின் தலைவன் உருவானவர். பின்குறிப்பு – இறை குறிப்பை உணர்பவர் தவத்தின் தனிச்சிறப்பு உள்ளவர். #திருமந்திரம் |
குருவழி யாய குணங்களில் நின்று கருவழி யாய கணக்கை அறுக்க வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு அருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே. திரு - 2655 குருவின் வழியாக குணங்களில் பின்பற்றி நின்று கருவழியாக பிறக்கும் கணக்கை அறுக்க வரும் வழியை அளவிட்டு மறுக்க வல்லவார்களுக்கு அருள் வழி காட்டுவது ஐந்து எழுத்தாகுமே. பின்குறிப்பு – குரு நல்வழி செல்ல ஐந்தெழுத்தின் அருமையை உணர்த்துவார். #திருமந்திரம் |
ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில் ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலார் சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும் வாயுறு ஓதி வழுத்தலும் ஆமே.திரு - 2654 சூரியனும் சந்திரனும் ஆளும் காலத்தில் ஆய்ந்து அறியும் மந்திரத்தை யாரும் அறிவது இல்லை ஒன்றை ஒன்று பெற்றெடுத்த பிணைப்பான ஐந்து எழுத்தை வாய் விட்டு கூறாமல் மனதில் ஓதி வெற்றி பெறுவது ஆகும். பின்குறிப்பு – ஐந்து எழுத்து மந்திரத்தை அறிந்து ஓதுபவர் குறைவு. #திருமந்திரம் |
கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக் கரணங்கள் விட்டுயிர் தானெழும் போது மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும் அரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே. திரு - 2653 நெருப்பு எரியும் பொழுது மறைந்து இருக்கும் வண்ணங்கள் ஏழு கிளர்ச்சியுடன் பொங்கிட உடலின் கருவிகளை விட்டு உயிர் எழுந்திடும் போது மரணம் கைவைத்து உயிர் மாற்றிடும் போதும் அரணாக கைகூட்டுவது ஐந்தெழுத்து ஆகும். பின்குறிப்பு – உயிர் உடலின் இருந்து பிரியும் பொழுது அஞ்செழுத்து இறைவனுடன் கூட்டிவைக்கும். #திருமந்திரம் |
அகராதி ஈரெண் கலந்த பரையும் உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன் சிகராதி தான்சிவ வேதமே கோணம் நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே. திரு - 2651 அகரத்தை முதலாக கொண்ட மெய் எழுத்துக்கள் பதினாறும் உகரத்தின் சத்தியாக உள்ளொளி ஈசன் சிகரத்தை முதலாக கொண்டது சிவ வேதம் காட்டும் நகரத்தை முதலாக கொண்டதே மூல மந்திரம் நண்ணும். பின்குறிப்பு – எழுத்துக்களின் ஓசைகள் உள்ளொளியை வளர்க்க நகர எழுத்தின் ஓசையே மூலமந்திரம். #திருமந்திரம் |
அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி உகார முதலாக ஓங்கி உதித்து மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி நகார முதலாகும் நந்திதன் நாமமே. திரு - 2650 அகாரம் முதலாக இணைந்து ஐம்பத்தொன்றாகிறது உகாரத்தை முதலாக கொண்டு ஓங்கி உதயமாகி மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி நகாரத்தை முதலாக அடையும் நந்தியின் நாமமே. பின்குறிப்பு – அகார உகார மகாரம் மாய்ந்து மாறி நகாரமாகி நிற்கிறது. #திருமந்திரம் |
ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும் ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும் ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின் ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே. திரு - 2649 ஐம்பது எழுத்துக்களே அனைத்து வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின் ஐப்பது எழுத்தே அஞ்செழுத்தாகும். பின்குறிப்பு – ஆதாரங்களுக்குள் நிலைக்கும் ஐம்பது எழுத்துக்களே ஐந்து எழுத்துக்களாக இருக்கிறது. #திருமந்திரம் |
தானே யிருக்கும் அவற்றில் தலைவனும் தானே யிருக்கும் அவனென நண்ணிடும் வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப் பானாய் இருக்கப் பரவலும் ஆமே. திரு - 2648 நான் என்ற ஒன்றாக தானே இருக்கும் அவற்றில் தலைவனாய், தானே இருக்கும் அவனே என நண்ணிடும் வானாய் இருக்கும் இந்த மா இரண்டு ஞாலத்துப்பானாய் இருக்கப் பரவலும் ஆமே. பின்குறிப்பு – நான் என்று உணரும் ஒன்றை கடக்க இருப்பே ஈசன். #திருமந்திரம் |
ஈசன்நின் றான்இமை யோர்கள் நின் றார்நின்ற தேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர் பாசம்ஒன் றாகப் பழவினை பற்றற வாசம்ஒன் றாமலர் போன்றது தானே. திரு - 2647 ஈசன் நின்கின்றான் இமையாதவர்களும் நிற்கின்றார்கள் தான் வாழும் தேசத்தின் தன்மைக்கு ஏற்ப ஒன்றி திகைத்து தன்னை இழக்கின்றார்கள் பாசம் என்ற ஒன்றால் பழவினை பற்று அறுபடாமல் இருப்பதால் வாசம் ஒன்றா மலர் போல் ஈசன் இருக்கிறான். பின்குறிப்பு – ஈசன் இருந்தும் தான் கொண்ட பாசத்தால் ஈசனை உணர்பவர்கள் இல்லை. #திருமந்திரம் |
ஒளி பவ ளத்திரு மேனிவெண் ணீற்றன் அளிபவ ளச்சொம்பொன் ஆதிப் பிரானும் களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி ஒளிபவ ளத்தென்னோடு ஈசன் நின் றானே. திரு - 2646 ஒளியாக நின்றவன் மேனி பவளம் என்றாலும் வெண்ணீற்றன் பவளச் செம்பொன் அளிக்கும் ஆதிபிரானும் களியாய் உண்டான பவளத்தின் காரிருள் நீங்கிடச்செய்து ஒளி பவளத் தென்னாடு ஈசன் நின்றானே. பின்குறிப்பு – வண்ணமற்ற ஒளியானவன் தெரியும் அனைத்திற்கும் ஆதாரமாய் நிற்கிறான். #திருமந்திரம் |
சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கே படருறு காட்சிப் பகலவன் ஈசன் அடருறு மாயையின் ஆரிருள் வீசில் உடலுறு ஞாலத் துறவியின் ஆமே. திரு - 2645 சுடர் அடர்ந்த ஒருங்கிய ஒளிகொண்ட பகலவன் படரும் பொழுதே காட்சிகள் அறியப்படும். அப்படியே ஈசனால் இந்த உலகம் உணர்த்தப்படுகிறது. அடங்காத மாயையின் ஆரிருள் விசிடில் உடலில் நின் ஞாலத் துறவி என அறிவிப்பவன் போன்றது. பின்குறிப்பு – ஒட்டி ஒட்டாதபடி வாழும் துறவியப் போன்றது ஈசன் ஒளி. #தி்ருமந்திரம் |
உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிது பண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல் கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில் விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே. திரு - 2644 உண்டு இல்லை என்பதே இந்த உலகத்து இயல்பு முன்பு இப்படி இல்லை என்றபடியான பரகதியும் உண்டு அளவுகோல் ஒன்று இல்லை மனிதர்கள் கண்ட கருத்திற்கு இதைக் கடந்த ஒன்று இல்லை உள்ளே விளக்கும் ஒளியாக உள்ளதை. பின்குறிப்பு – இறை என்ற சுய அனுபவமான ஒன்றிற்று அளவுகோல் இல்லை. #திருமந்திரம் |
போது கருங்குழற் போனவர் தூதிடை ஆதி பரத்தை அமரர் பிரானொடும் சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளி நீதியின் நல்லிருள் நீக்கிய வாறே. திரு - 2643 இளம் மலர் சூடிய கருங்குழல் அணிந்தவர் தூதாக போவதுபோல் ஆதி பரத்தை அமரர் தலைவன் உடன் சோதியும் அண்டத்து அப்பால் உள்ள தூய ஒளியும் உண்மையாக இருந்து நல்லிருளை நீக்கியவர் அறிவார். பின்குறிப்பு – நல்லிருள் நீங்கும் அளவிற்கு உண்மையானவர் ஆதிபிரானை அறிவார்கள். #திருமந்திரம் |
விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக் களங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆட விளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே. திரு - 2642 அறியும் ஒளியாக நின்ற வேறுபட்டவன் வெளிப்பட்ட ஒளியாய் பாசத்து இருளில் சேராது இருக்க களம் இருள் நட்டமாக கண்ணுதல் ஆட அறியும் ஒளியாய் மனதுள் ஒன்றி நின்றானே. பின்குறிப்பு – உபதேசம் அறிந்து கண்ணுதல் செய்வதால் விளங்கும் ஒளியாய் மனதுள் ஒன்றுகிறான். #திருமந்திரம் |
உலங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன் வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி வளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே. திரு - 2641 உள்ளத்து ஒளியாக ஆவது என் உள் நின்ற சீவன் வளம் தரும் ஒளியாக நின்ற மாமணி சோதி விளங்கும் ஒளியாய் மின்னி விண்ணில் ஒடுங்கி வளம் தரும் ஒளியாய் ஆயத்தப்பட்டு நின்றானே. பின்குறிப்பு – ஒளி என இருப்பவன் நான் என தோன்றி மீண்டும் ஒடுங்குகிறான். #திருமந்திரம் |
இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன் துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி உளங்கொளி யுள்ளே ஒருங்கிகின் றானே. திரு - 2640 தானாக இயல்புடன் இருக்கும் ஒளி எவ்வொளியோ அதுவே ஈசன் உணர்த்தும் ஒளி போன்றது அழியாத சத்தி அறியும் ஒளியாக மூன்றே விரிசுடர் தோன்றி உள்ளத்தில் உள்ளே ஒளியாக ஒருங்கி இருக்கின்றானே. பின்குறிப்பு – ஒளியாக இருந்து உணர்த்தும் ஒளியாக நிலைத்து அறியும் ஒளி என மூன்றானது உள்ளத்தில் ஒருங்கி இருக்கின்றது. #திருமந்திரம் |
விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும் துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான் அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும் களங்கொளி ஈசன் கருத்தது தானே. திரு - 2639 அறிய உதவும் ஒளி அவ்வொளியே இருளையும் வழங்கும் வெளிப்பட்ட ஒளியானவனே தொழுபவர்க்கு ஒளியானவன் எங்கும் வியாபித்த ஒளியே ஆரமுதாகி நஞ்சை அறுக்கும் மறைவான ஒளியாக இருக்கும் ஈசன் என்று சொல்வதின் விளக்கம் இதுதானே. பின்குறிப்பு – ஒளியாக இருந்து மறைந்தும் அருள்வதே ஈசன். #திருமந்திரம் |
மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி பன்னிய ஞானம் பரந்து பரத்தொளி துன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும் உன்னிய வாறுஒளி ஒத்தது தானே. திரு - 2638 மின்னலாக வெளிப்படும் தூய்மையான ஒளி மேன்மையான செவ்வொளி உணர்த்திய ஞானம் பரந்து விரிந்த பரத்தொளி துட்பமான ஆறு ஒளி தூய மொழியாக நடுகள் எல்லாம் கவனிக்கும் விதத்தில் ஒத்ததாக இருக்கிறது. பின்குறிப்பு – ஒளியாக இருந்து உணர்த்தி உணரும்படியாக எல்லா நாட்டவருக்கும் இருக்கிறது. #திருமந்திரம் |
மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி பன்னிய ஞானம் பரந்து பரத்தொளி துன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும் உன்னிய வாறுஒளி ஒத்தது தானே. திரு - 2637 மின்னலாக வெளிப்படும் தூய்மையான ஒளி மேன்மையான செவ்வொளி உணர்த்திய ஞானம் பரந்து விரிந்த பரத்தொளி துட்பமான ஆறு ஒளி தூய மொழியாக நடுகள் எல்லாம் கவனிக்கும் விதத்தில் ஒத்ததாக இருக்கிறது. பின்குறிப்பு – ஒளியாக இருந்து உணர்த்தி உணரும்படியாக எல்லா நாட்டவருக்கும் இருக்கிறது. #திருமந்திரம் |
மேல்ஒளி கீழ்அதன் மேவிய மாருதம் பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம் நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும் மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே. திரு - 2636 மேலான ஒளி அதன் கீழ் மேவிய காற்று பால் ஒளி அங்கியாய் பரந்த ஒளி ஆகாசம் நீரில் ஒளியாக செய்து நெடுமையாக நின்று பூதங்கள் மேல் இருக்கும் ஒளி ஐந்தும் ஒன்றிடும் ஒளி ஆகும். பின்குறிப்பு – ஒளியாக இருந்து பூதங்களாக விரிந்து கூடுவதும் ஒளியே. #திருமந்திரம் |
இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள் வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே. திரு - 2635 எங்கும் இயங்கும் ஒளியாக இருக்கும் ஈசன் பிறப்பு என ஒன்று இல்லாதவன் அறியும் ஒளி சூரிய சந்திரன் என்பது கண்கள் வளம் தரும் ஒளி என்பது மறைந்தபடி இருக்கும் நெற்றிக்கண். விளக்கமாக ஒளிதருவது உடல்கொண்டதே ஆகும். பின்குறிப்பு – சூரிய சந்திரன் மற்றும் வளந்தரும் ஒளி என உடலில் ஒளியாக இறை இருக்கிறது. #திருமந்திரம் |
விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன் துளங்கொளி பெற்றன சோதி யருள வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு களங்கொளி செய்து கலந்து நின்றானே. திரு - 2634 அறியும் ஒளியாக சூரிய சந்திரன் இருக்க அதை உணரும் ஒளி பெற்றன சோதியின் அருளே. சோதியின் அருளால் வளப் பெற்றதே பேரோளி அருளே ஆகும் மறைமுக ஒளியாகவும் இறை கலந்து நிற்கின்றது. பின்குறிப்பு – ஒளியாக இருந்து அறியவும் அறியாதபடி இருக்கவும் இறையே செய்கிறது. #திருமந்திரம் |
புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும் அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும் பகல்ஒளி செய்தும் அத்தா மரையிலே இகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே. திரு - 2633 ஒளியின் துணையுடன் புகுவது எளிமையானதாக எட்டும் பல புவனங்கள். உள்ளத்தே ஒளியாய் இருக்க இருள் அழுக்கு அழியும்படி் வீசும். வெளிப்படையாக ஒளி செய்தும் அத்தாமரையில் இகல் ஒளி செய்தும் எம் தலைவன் இருந்தானே. பின்குறிப்பு – ஒளியின் துணையுடன் பலவற்றை அறியச் செய்து ஒளிக்குள் இறை இருக்கிறது. #திருமந்திரம் |
ஒளியை அறியில் உருவும் ஒளியும் ஒளியும் உருவம் அறியில் உருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக உடனிருந் தானே. திரு - 2632 ஒளியை அறிய ஊடி உருவும் ஒளியும், ஒளியையும் உருவமாக அறிந்தால் ஒளியும் உருவமே ஒளியின் உருவமாக இருப்பதும் ஒளியே ஒளியும் உருக அதன் உடன் இருந்தானே. பின்குறிப்பு – ஒளி ஒளிர்வதற்கான காரணப் பொருளாக இறையே இருக்கிறது. #திருமந்திரம் |
சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்கு ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற் கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து ஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே.திரு - 2631 நட்புடன் வழிகாட்டும் ஆறு மதமும் அறிந்தவருக்கு ஆடிய இரண்டு ஆறின் அந்தமும் பதிநான்கில் கூடிய அந்தமும் கோதண்டமும் கடந்து ஏறியே ஞான ஞேயத்து இருக்கவே. பின்குறிப்பு – மத நுட்பம் அறிந்து தன் அந்தம் புரிந்து கோதண்டம் கடப்பதற்கு காரணம் ஞானத்தில் திளைக்கவே. #திருமந்திரம் |
மலையும் மனோபவம் மருள்வன ஆவன நிலையில் தரிசனம் தீப நெறியாம் தலமும் குலமும் தவம்சித்த மாகும் நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே. திரு - 2630 மலைத்து நிற்கும் மனோபாவம் மருள் அறிவு ஆகும். நிலையான தரிசனம் தீப நெறியாகும் நிற்கும் தலமும் குலமும் தவத்தின் சித்தத்தால் ஆகும் நலம் அருள்வது சன்மார்க்க உபதேசம் தானே. பின்குறிப்பு – மருள் அறிவு மலைத்தும் அருள் அறிவு நிலைத்தும் இருக்கும். #திருமந்திரம் |
வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும் அருக்கம் சராசரம் ஆகும் உலகில் தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனி சுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே.திரு - 2629 வருக்கம் சுகமானது அது பிரமத்தின் ஏற்பாடு ஆகும் அருக்கம் சராசரம் ஆகின்ற உலகில் வாய்த்த ஆதாரம் எல்லாம் தன் மேனி சருக்கமாகும் குறையற்ற ஞானம் இதை நன்கு தொகுத்து உணர்ந்தோர்க்கே. பின்குறிப்பு – வர்க்க பேதம் பற்றிய அறிவு உள்ளவர் தெளிந்த ஞானம் உள்ளவர். #திருமந்திரம் |
ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே.திரு - 2628 ஓம் என்ற ஓங்காரத்தின் இருந்தே பூதங்கள் ஐந்து உருவாகிறது. ஓங்காரத்தின் உள்ளே இருந்து உதித்த சராசரம் ஓங்காலத்தின் உள்ளே அதீதமாய் உயிர் மூன்றும் நின்றன. ஓங்காரம் சீவ பரசீவ உருவமே. பின்குறிப்பு – ஓங்கார நாதத்தில் இருந்த பூதமும் உயிர்களும் தோன்றின. #திருமந்திரம் |
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே. திரு - 2627 ஓம் என்ற ஒலியாக நிற்கும் ஓங்காரத்தின் உள்ளே ஒரு மொழி என்ற புரிதல் உண்டாக்கும் வார்த்தை இருக்கிறது. ஓம் என்ற ஓங்காரத்தின் உள்ளே உருவமும் அருவமும். ஓம் என்ற ஓங்காரத்தின் உள்ளே பலவகை பேதம் பிறக்கிறது. ஓம் என்ற ஓங்காரத்தின் மூலம் ஒண்முத்தியும் சித்தியும் உண்டாகிறது. பின்குறிப்பு – ஓம் என்ற நாதமே முத்திக்கு ஆதாரமானது. #திருமந்திரம் |
தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை பாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண் சூலித்த முத்திரை ஆங்கதிற்காரணம் மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே. திரு - 2626 சொல்லப்படும் பிரணவ மந்திரம் சொரூபானந்த பேருரை அடுத்து அனுபவம் பெறுவது சூக்கும மேலைப் சொரூபப் பெண் காட்டிக் கொடுத்த முத்திரை ஆங்கதிர் காரணம் மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே. பின்குறிப்பு – பிரணவ மந்திரம் வேதாந்த வீதி உலா வர செய்யப்பட்டது ஆகும். #திருமந்திரம் |
கோவணங் கும்படி கோவண மாகிப்பின் நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான் தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம் போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே.திரு - 2625 மன்னன் வணங்குப்படி மன்னன் என மாற்றி நான் வணங்குப்படி நந்தி அருள் செய்தான். தேவர்களை வணங்கவேண்டியது இல்லை இனிச் சித்தம் தெளிந்தோம் முன்னர் போய் வணங்கும் ஒரு பொருளாக இருந்தோமே. பின்குறிப்பு – மன்னராக மாற்றிய நந்தியால் சித்தம் தெளிந்தோம். #திருமந்திரம் |
அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில் தம்பர மல்லது தாமறியோம் என்பர் உம்பருள் வானவர் தானவர் கண்டிலர் எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே. திரு - 2624 வெளிப்பட்டு நிற்கும் நாதன் இருக்கும் இடம் நீளும் அழகிய இடம் என்பார்கள் அவ்விடம் செல்லாமல் நாம் அறிவது இயலாது என்பார்கள் மேலானவர்களுக்கும் வானவர்கள் கூட அறியமுடியாத எம்பெருமான் அருள் பெற்றிருந்தாரே. பின்குறிப்பு – தேவர்களுக்கும் கிடைக்காத நாத அனுபவம் இவ்வுலகில் பெற்றவர்கள் இருக்கவே செய்கிறார்கள். #திருமந்திரம் |
பரசு பதியென்று பார்முழு தெல்லாம் பரசிவன் ஆணை நடக்கும் பாதியால் பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு உரிய பதியும்பா ராக்கி நின்றானே. திரு - 2623 பரசு என பதி உலகம் முழுவதும் இருந்து பரசிவன் என ஆணை நடக்கும் பகுதியாக இருப்பதால் பெரிய பதி என செய்து பின்னும் அடியார்க்கு உரிய பதியாக்கி உலகில் நின்றானே. பின்குறிப்பு – தலைவனாக இருந்து அடியார்க்கும் அடுத்தவருக்கும் வேறுபட்டு இருக்கிறது. #திருமந்திரம் |
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க் கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது மண்ணு நீரனல் காலொடு வானுமாய் விண்ணு மின்றி வெளியானோர் மேனியே. திரு - 2622 எண்ணங்களால் எண்ணும் இடமாகவும் திடமான இருப்பிடமாகவும் அதில் மறைந்த உயிராகவும் கண்ணுமாக யோகக் கடவுள் இருக்கிறது. மண் நீர் கனல், காற்று,வான் என கடந்த விண்ணும் இன்று வெளியானோர் மேனியே. பின்குறிப்பு – எங்கும் வியாபித்ததே கடவுள். #திருமந்திரம் |
வந்த மரகத மாணிக்க ரேகைபோல் சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம் இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே. திரு - 2621 நமக்கு வாய்த்த மரகத மாணிக்க ரேகையைப் போல் வெளிப்படும் நல்ல சொற்கள் சற்குரு சன்மார்க்கம் ஆகும் இந்த ரேகையே இலாடத்தில் மூலம் மற்றும் சுந்தர சோதியின் சோதி ஆகுமே. பின்குறிப்பு – உபதேசப் பொருளின் கவனம் செய்வதை குறித்து குரு சொல்வது. #திருமந்திரம் |
நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கி நிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித் திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளே புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே. திரு - 2620 செயல்கனை நான் என்று நிகழ்த்துவதை ஒழித்தவர் நாதனை அறிந்து மகிழ்ந்தார். எம்பிரானை கூடித் நடப்பதின் பெருமைகொள்வதை ஒழித்தார்கள் தங்கள் நினைவில் உள்ளே புகழப்படும் வழிகாட்டி புகுந்து நின்றானே. பின்குறிப்பு – மனதில் இறை நாட்டம் உள்ளவர் நான் என்ற ஆணவம் ஒழித்தார்கள். #திருமந்திரம் |
தலைப்படும் காலத்துத் தத்துவம் தன்னை விலக்குறின் மேவை விதியென்றும் கொள்க அனைத்துஉல காய் நின்ற ஆதிப் பிரானை நினைப்புறு வார்பத்தி தேடிக் கொள்வாரே. திரு - 2619 இறை உணர தலைப்படும் காலத்தில் தத்துவத்தின் மேல் விசாரம் செய்வதையும் விலக்கு வைக்கமுடியவில்லை என்றால் முன்னை வினை என்று கொள்க. அனைத்து உலகத்திற்கும் ஏகமான இறையான ஆதிபிரானை நினைபில் வைத்து உருகுவார் பத்தி தேடிக்கொள்வாரே. பின்குறிப்பு – தத்துவம் கடப்பதால் மட்டும் பத்தி நிலைபெறும். #திருமந்திரம் |
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச் சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத் தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும் கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே. திரு - 2618 நினைவில் இறை நாட்டம் உள்ளவரை நினைப்பில் நிலைக்கச் செய்பவரை வளமான இடத்தில் மலர்ந்த மலரான சோதியன் தினையை காட்டிலும் சிறுமையானவராக இருப்பினும் கனத்த மனதுடன் இருப்பவர் உயர்ந்தவரே. பின்குறிப்பு – மனதில் இறை நாட்டம் உள்ளவரே யாரிலும் உயர்ந்தவர். #திருமந்திரம் |
தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப் பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டு நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில் தலைப்பட லாகும் தருமமும் தானே. திரு - 2617 உண்மை அறிய தலைப்படலாம் எங்கள் குருவின் தத்துவங்களை அதனால் பலப்படும் பாசத் அறுத்து நிலையாக நாடி நினைப்புகளு இல்லாதபடி இருக்க தலைப்படுதல் சாத்தியம் ஆகும் அதுவை தர்மம். பின்குறிப்பு – எங்கள் குருவின் கருத்தை அறிந்தால் தர்மம் உணரலாம். #திருமந்திரம் |
மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி உருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும் கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே. திரு - 2616 முரண்பட்டு பிரியமுடியாத எங்கள் மாநந்தி உருவம் நினைக்க உள்ளே நின்று உருக்கும் கருவில் பரந்து உள்ளம் காண வல்லவர்க்கு இங்கே முன் வினை அழிந்து சோர்வுபடும் அழிப்பவர் அகத்தே. பின்குறிப்பு – உபதேசம் அறிந்து உள்ளம் உருகுபவர்களுக்கு முன் வினை அழியும். #திருமந்திரம் |
தானான வண்ணமும் கோசமும் சார்தரும் தானாம் பறவை வனமெனத் தக்கன தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில் தாமாம் தசாங்கமும் வேறுள்ள தானே. திரு - 2615 தனது இருப்பு நிலையை பிரிந்து வளந்த கோசத்தை சார்ந்து இருக்கச் செய்யும் தான் என்ற பறவை தனித்து வனத்தில் திரியும் தகுதியுடையது. தனக்கே உரித்தான நட்பு பாராட்டும் மார்க்கத்தில் நின்றால் தான் என நிற்கும் பத்து அங்கமும் வேறு ஒன்று இல்லை என ஆகும். பின்குறிப்பு – இறை எல்லவற்றிலும் தனது சாயலை வெளிப்படுத்தும். #திருமந்திரம் |
மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழ நிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச் சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்க வனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே.திரு - 2614 யாவரின் மனதிலும் புகுந்தான் உருவாகும் உலகம் எல்லாம் மகிழ நிலம் புகுந்தான் விரிந்த வானத்தை தாங்கி சினமாகவும் புகுந்தான் திசைகள் எட்டும் நடுங்க வனம் புகுந்தான் ஊர் வடக்கு என்பதாலே. பின்குறிப்பு – சஎங்கும் எதிலும் இறையே ஆற்றலாய் இருக்கிறது. #திருமந்திரம் |
சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக் கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும் பந்தம் இலாத பளிங்கின் உருவினள் பந்தம் அறுத்த பரம்குரு பற்றே.திரு - 2613 குளிர்ந்த இருப்பிடமான தன் புருவத்தின் இடையே உள்ளே கந்த மலரில் இரண்டு இதழ் கன்னியும் பந்தம் இலாத பளிங்கின் உருவமும் உள்ளதாய் இருந்து பந்தம் அறுத்த பரம குரு தானே. பின்குறிப்பு – உபதேசப் பொருளே பந்தம் அறுக்கும் பரம்குரு. #திருமந்திரம் |
தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும் மான்ற அறிவு மறிநன வாதிகள் மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே. திரு - 2612 முன் தோன்றிட அதை அறிதலும் தெரியவேண்டியவை மறைத்தலும் ஏற்படும் அறிவு கடக்கும் நனைவுவாதிகள் மூன்று துரியத்து அனுபவமும் நீங்கும் என முன்பே அறிய செய்த நந்தி உயர் மோனத்தானே. பின்குறிப்பு – சும்மா இருப்பதில் உயர்ந்தவன் என இல்லை எனினும் நந்தி அதை சாதித்தவன். #திருமந்திரம் |
கருடன் உருவம் கருதும் அளவில் பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல் குருவின் உருவம் குறித்த அப் போதே திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே. திரு - 2611 கருடனின் உருவம் எண்ணத்தில் தோன்றிய உடனே பாதுகாப்பான இடத்தை அடைந்து பயத்தை அழிக்கும் அதுபோல் குருவின் உருவத்தை மனதில் நினைக்க மூன்று குற்றங்கள் அழிந்து சிவனாக ஆகலாம். பின்குறிப்பு – நல்ல குருவின் வடிவம் எண்ணங்களை அழித்து சிவனைக் காட்டும். #திருமந்திரம் |
ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன் வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன் காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன் சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே.திரு - 2610 ஆராய்ந்து தேர்ந்த நந்தி அடிக்கு என் தலையை பெற்றேன் நன்றாக வாய்த்த என் நந்தியை வாழ்த்த என் வாய் பெற்றேன் உடல் கொண்ட நந்தியை காணவே கண் பெற்றேன் பிள்ளை போன்ற நந்திக்கு என் சிந்தை பெற்றேனே. பின்குறிப்பு – நல்ல குருவை கண்டு மகிழ்ந்து பாராட்டவே நான் பிறந்தேன். #திருமந்திரம் |
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி அரிய பரசிவம் யாவையும் ஆகி விரிவு குவிவுஅற விட்ட நிலத்தே பெரிய குருபதம் பேசஒண் ணாதே.திரு - 2609 துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிரும் சோதி அரிதான பரசிவம் என எல்லாமாய் ஆகி விரிதல் குறைதல் இல்லாமல் நிலைத்தே நிற்கும் நிலத்தே பெரிய குரு பதம் பேச இயலாது. பின்குறிப்பு – குருவின் பாதம் அரிய உண்மையை விளக்கும். #திருமந்திரம் |
ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில் கூறக் குருபரன் கும்பிடு தந்திடும் வேறே சிவபதம் மேலாய் அளித்திடும் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே. திரு - 2608 புலன்களும் புலன்களுடன் இணைந்தும் இருக்கும் தத்துவமாக சொல்லப்படும் முப்பத்தாறும் அடங்கும் குருபரனை வணங்கி தொழுதவுடன் மேலும் சிவ பதத்தை மேன்மையுடன் அளித்திடும் சொல்லமுடிய ஆனந்தம் கொடுக்கும் தொடர்ந்து வளரவே. பின்குறிப்பு – நல்ல குருவை பணிந்தாலே சிறந்த அனுபவங்கள் வாய்க்கும். #திருமந்திரம் |
மாயை இரண்டும் மறைக்க மறைவுறும் காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியே தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள் ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே. திரு - 2607 நன்மை தீமை என்ற இரண்டுபடும் மாயை மறைக்க முயன்றால் மறையும். உடலின் புலால் ஐந்தையும் மறுத்தவன் ஆனால் தூய பரஞ்சுடர் தோன்றும் அந்த சொருபத்துள் இருந்து ஆய்பவர் ஞானாத்தின் மோனத்தாரவார். பின்குறிப்பு – புலால் மறுத்தவர் மோன நிலையால் ஆராய்ந்து கருமத்தை வெல்கிறார். #திருமந்திரம் |
அகமுக மாம்பீடம் ஆதார மாகும் சகமுக மாம்சத்தி யாதன மாகும் செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும் அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.திரு - 2606 உள்முகமாக இருப்பதற்கு ஆதாரம் ஆவது பீடம். யாருக்கும் சத்தி அளிப்பது ஆதனம் ஆகும். உலகில் உள்ளோர்க்கு தெய்வம் உள்ளே இருக்கும் சிவமாகும். அகத்தே கண் கொண்டு ஆய்ந்தவர்க்கே இந்த அறிவு விளக்கும். பின்குறிப்பு – உள்ளே ஆராயும் அறிவு உள்ளவரே தனக்குள் இறை உணர்வார். #திருமந்திரம் |
முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம் அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி அகம்பர மாதனம் எண்எண் கிரியை சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே. திரு - 2605 முகம் எண்ணங்களை பலி இட ஏற்ற பீடம் அதன் அடுத்த அமைத்தே உடல் மடம். உள்ளே எழும் மாற்றங்களே ஆட்சி செய்யும் காட்சி, உள்ளே பரமன் ஆசனம் எண்ணிக்கை அற்ற கிரியைகள் நடக்கின்றது. ஈரமாக உள்ளதே தற்குகை ஆதாரம். பின்குறிப்பு – குரு அடைந்தவர் எளிதில் விளக்கம் பெறலாம். #திருமந்திரம் |
இயம்புவன் ஆசனத் தோடு மலையும் இயம்புவன் சித்தக் குகையும் இடமும் இயம்புவன் ஆதாரத் தோடு வனமும் இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே.திரு - 2604 எடுத்து இயம்புவன் ஆசனங்களுடன் இரண்டு மலையும் இயம்புவன் சித்தமுடன் இறை அருளிய குகையும் இடமும் எடுத்து இயம்புவன் ஆநாரத்துடன் வளமும் இயம்புவன் இரண்டு ஆற்றை ஆண் பெண் என ஆன இருநிலத்தோர்க்கே. பின்குறிப்பு – ஆண் பெண் என இருவருக்கும் உபதேசம் எடுத்து இயம்புவன் குரு. #திருமந்திரம் |
நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின் கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி தேட அரியன் சிறப்பிலி எம்இறை ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே. திரு - 2603 நாடவேண்டிய பெருந்துறையை நான் கண்டு அடைந்தபின் கூடும் சிவனது கொய்யமுடிய மலர் சேவடி தேட அரியவன் சிற்பிற்கு நிகர் அற்றவன் எம் இறை நிலைக்காது ஓடும் உலகிற்கு உயிராகி நின்றானே. பின்குறிப்பு – உபதேசம் அறிந்து வெற்றி பெற்றபின் உலக உயிர்களாய் இருப்பதை அறியலாம். #திருமந்திரம் |
இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும் அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே. திரு - 2602. இவன் என்பதே இல்லம் அதைக்கடந்து இறைவனுக்கு வேறு இல்லம் அங்கே இல்லை. அவனுக்கு வேறு இல்லம் உண்டா என அறிந்தபின் அவனுக்கு இவனே இல்லம் என்னு அறித்தும் அவனை புறம் என்று அரற்றுகின்றாரே. பின்குறிப்பு – இறை தனக்குள் குடி இருக்க புறத்தே உள்ளது என அரற்றுகிற்றாரே. #திருமந்திரம் |
பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும் ஈசன் தனக்கென்ற உள்கிக் குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த் தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.திரு - 2601 பலிபிடமும் வேதனைக்கு தீர்வும் வாசனையான புகையும் மணியின் ஒலியும் ஈசன் எனக்கானவன் என்று உருகும் மனத்தவர் நிறைந்தும் இருக்கும் குருமடத்தை கண்டவர் தாமாக போய் தளிரும் மலரடி சார்ந்து நின்றாரே. பின்குறிப்பு – நல்ல குருமடத்தை அடைத்தவர் உபதேசப் பொருளை சார்ந்து இருப்பார். #திருமந்திரம் |
அந்தக் கருவை யருவை வினைசெய்தற் பந்தம் பணியச்சம் பல்பிறப் பும்வாட்டிச் சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனை சந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே. திரு - 2600 இயல்பாய் இருந்த கருவை உருவமான ஒன்றை தன் வினைக்கு ஏற்ப பந்தம் பணித்து பல பிறவி கொடுத்து வாட்டி சிந்தையை திருத்தி திருந்தாவிடின் தீராத சோதனை தர அதை சந்தித்து வெல்லுதல் ஆகும் சதுரர்க்கே. பின்குறிப்பு – நான்கு மறை அறிந்தவரும் சோதனை கடந்தே இறை உணர முடியும். #திருமந்திரம் |
ஆதிப் பிரான்தந்த வாள்ங்கைக்கொண்டபின் வேதித்து என்னை விலக்கவல் லாரில்லை சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம் ஆதிக்கட் டெய்வ மவனிவ னாமே. திரு - 2599. உலகம் படைத்த நாயகன் தந்த வாள் என் கை அடைந்ததால் வேதியல் மாற்றம் செய்து என்னை இறை இடத்தில் இருந்து விலக்க முடிந்தவர் இல்லை. அப்படி வருபவரை சோதித்து சுவடும் ஏற்படாதபடி காத்துக் கொள்ளும் இவன் அவன் என்ற ஆதிக்கண் உள்ளவனே. பின்குறிப்பு – இறைப் பற்றால் எதையும் வென்று நிறைவாய் வாழ்ந்து தெய்வமாகலாம். #திருமந்திரம் |
எறிவது ஞானத் துறைவாள் உருவி அறிவது னோடேயவ் வாண்டகை யானைச் செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப் பறிவது பல்கணப் பற்றுவி டாரே. திரு - 2598 விட்டு எறிவதற்காக ஞானத்து உறைவாள் உருவி அறிவது உடனே அந்த ஆண்டகையானை செம்மை செய்வது தேவர்க்குத் தேவர் தலைவனை பறிதவிக்கச் செய்யும் பல போக்கின் பற்றை விட்டாரே. பின்குறிப்பு – ஞான வாளால் அறியாமையை அழிக்கலாம். #திருமந்திரம் |
அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள் இவ்வழி தந்தை தாய் கேளியான் ஒக்குஞ் செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும் இவ்வழி நந்தி இயல்பது தானே.திரு - 2597 சரியான வழியை காட்டும் அமரருக்கும் அரும்பொருள் இந்த வழி தந்தை தாய் உறவோர் என யாருக்கும் உயர்ந்தது. இந்த செம்மையான வழியை சேர்பவர் சிவலோகம் சேர்வர் இந்த வழி நந்தியின் இயல்பு ஆகும். பின்குறிப்பு – இறை உணரும் வழி தாய் தந்தை உறவோர்களை கடந்த மேலானது. #திருமந்திரம் |
தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போது தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே படர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தை கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே. திரு - 2596 எம்மை சோதிக்கும்பொழுதும் தொடர்ந்து நின்றான். அப்படி தொடரவில்லை என்றால் நாதன் இல்லை. மாறாக படர்ந்து நின்றான் பராபரன் என் தந்தையானவன் கடந்து நின்றான் நல் வழிகாட்டுகின்றானே. பின்குறிப்பு – நாதனாகவும் பராபரனாகவும் என்னை பற்றி நிற்பவன் கடந்து போவது நல்வழி காட்டவே. #திருமந்திரம் |
தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப் புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின் பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே. திரு - 2595 தன்மையில் வல்லவனை தத்துவங்களில் நலமானவனை நன்மை அருளும் வல்லவனை இணைக்க நடு நின்ற நந்தியை புதிமையை பொய் என எண்ணாமல் புனிதனை நாடுங்கள் பலவகையில் உண்மையான பரிசு செய்வானே.பின்குறிப்பு – என்றும் புதியவனான இறையை நாட நன்மைகள் பலவகையில் வரும். #திருமந்திரம் |
நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து வந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ள எந்தைவந் தானென் றெழுந்தேன் எழுதலுஞ் சிந்தையி லுள்ளே சிவனிருந் தானே. திரு - 2594 நல்வெப்பமான நந்தி பெருமான் நடுவே நின்று அனைத்துமாக வியாபித்தவன் என் அகத்தே கோயில் கொண்டான். எதிர்கொள்ள வந்தான் அவன் என்று எழுந்திட சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே. பின்குறிப்பு – எல்லவற்றை இயக்கும் இறை பத்தியுள்ளவர் சிந்தையில் இருக்கின்றது. #திருமந்திரம் |
விருப்பொடு கூடி விகிர்த்னை நாடிப் பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார் நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே. :இரு - 2593 விரும்பம் பெருகிட ஒன்றாய் கூடி விகிர்தனை நாடிட பொருப்பாக அகத்தே சேர்ந்திடும் பொற்கொடி போல இருப்பவர் மனத்தில் எங்கள் தலைவன் நெருப்பின் வடிவாய் நிகழ்ந்து நின்றாரே. பின்குறிப்பு – பக்தி உள்ளவர் மனதில் நெருப்பை போல் இறை உள்ளது. #திருமந்திரம் |
காலினில் ஊருங் கரும்பினில் கட்டியும் பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும் பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை காவலன் எங்குங் கலந்துநின் றானே. திரு - 2592 காற்றில் ஊருதலாகவும் கரும்பினில் வெல்லக் கட்டியாகவும் பாலினுள் நெய்யாகவும் பழத்தினில் சாராகவும் பூவினுள் வாசனையாகவும் இருக்கும் ஒன்றாக எம் இறை காவலனாக எங்கும் கலந்து இருக்கிறான். பின்குறிப்பு – உட் பொருளாய் எங்கும் உள்ளதே இறை. #திருமந்திரம் |
குறியாக் குறியினிற் கூடாத கூட்டத் தறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய் நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றுஞ் செறியாச் செறிவே சிவமென லாமே.திரு - 2591 குற்ப்பிட முடியா குறிப்பில் கூடிட இயலாத கூட்டத்தை அறியமுடியா அறிவில் முடிச்சுகளை அவித்திட சித்தமாய் நெறியாகும் பரா நந்தி நீண்ட அருள் ஒன்றுஞ் செறியா செறிவே சிவம் எனலாமே. பின்குறிப்பு – அறிவைக் கடந்த அறிவில் அனுபவம் கடந்த அனுபவமாகும் ஒன்றே சிவம். #திருமந்திரம் |
அறிவுடை யானரு மாமறை யுள்ளே செறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன் பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த குறியுடை யானொடுங் கூடுவன் நானே.திரு - 2590 அறிவு உடையவன் மாமறையில் செறிவு உடையவன் சிறந்த தேவர்களுக்கும் தேவன் பொறிகள் உடையவன் புலன்கள் ஐந்தையும் கடந்து குறியை உணர்ந்தவன் அவனை அறிந்து கூடினேன் நான். பின்குறிப்பு – உண்மை அறிந்த நந்தியை நாடி கூடி மகிழ்ந்தேன் நான். #திருமந்திரம் |
பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து அம்மா நடிதந் தருட்கடல் ஆடினோம் எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச் சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே. திரு - 2589 பெருமைக்கு உரியவன் சிறந்த நந்தி பேசுவதற்கை இல்லாத பேரின்பத்து படைப்பவன் நாடி அருளிய கடலில் ஆடினோம் எந்தவிதமான மாயமும் என்னை விட்டு விலகிடச் செய்து சும்மா இருந்திட சோதனை ஆகுமே. பின்குறிப்பு – சும்மா இருக்கும் சுகத்தை சோதித்து அறியச் செய்தார் நந்தி. #திருமந்திரம் |
வளங்கனி தேடிய வன்றாட் பறவை உளங்கனி தேடி யுழிதரும் போது களங்கனி யங்கியிற் கைவிளக் கேற்றி நலங் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே.திரு - 2588 வளமான கனியை தேடிய கொடிமையான பறவை உள்ளத்தில் இருக்கும் கனி தேடி அடைந்த பொழுது அந்த களத்திற்கு அங்கியால் துணையான விளக்கு ஏற்றி நலம் அடைந்த நால்வரும் நாடுகின்றாரே. பின்குறிப்பு – உண்மை அறிந்தவுடன் நால்வரும் உதவி செய்ய நாடுகின்றார்கள். #திருமந்திரம் |
முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத் தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப் பத்தியி லுற்றோர் பரானந்த போதரே.திரு - 2587 முத்தியினால் அத்தனையும் ஆன அத்தன் அருள் பெற்று தத்துவ விளக்கம் அடைந்து தனது பணி மெய்தவம் செய்தல் என வினை விட்டு மெய் உண்மை பத்தியில் வாழ்பவர் பரானந்த போதர். பின்குறிப்பு – முத்தி பெற்று பக்தியில் வாழ்பவர் பரானந்தம் அடைந்தவர். #திருமந்திரம் |
நிலைபெறு கேடென்று முன்னே படைத்த தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம் மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும் உலையுளும் உள்ளத்து மூழ்கிநின் றேனே. திரு - 2586 நிலைத்தே இருப்பது கேடு என்று முன்னே படைத்த தலைவனை நாடித் தயங்கும் என் உள்ளம் மலை உள்ளேயும் காடுகளுக்கு உள்ளேயும் புறத்தும் உடலாகிய உலை உள்ளேயும் உள்ளத்தால் மூழ்கி நின்றேனே. பின்குறிப்பு – நேற்று இருந்தார் இன்று இல்லை என்பதே சிறப்பு என படைத்தவனை உள்ளும் புறத்தும் என் உள்ளத்தால் நினைத்து மகிழ்வேன். #திருமந்திரம் |
வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற தானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக் கானவன் என்றுங் கருவரை யானென்றும் ஊனத னுள்நினைந் தொன்றுபட் டாரே. திரு - 2585 தேவர்களின் துன்பத்திற்கு காரணமானவரை முப்புரத்திற்கு ஒதுக்கிய தலைவனை சுடுகாட்டில் நின்றவன் என்றும் கருவரையான் என்றும் ஊனாகிய உடலில் நினைத்து ஒன்றுபட்டார்களே. பின்குறிப்பு – ஏகனை உடலில்இருப்பதை உணர்ந்து வழிபடலாம். #திருமந்திரம் |
உறுதுணை நந்தியை உம்பர் பிரானை பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின் செறிதுணை செய்து சிவனடி சிந்தித் துறுதுணை யாயங்கி யாகிநின் றானே. திரு - 2584 உற்ற துணையான நந்தியை தேவர்களின் தலைவனை பெறுகின்ற துணையாக்கி பிறப்பை அறுத்து வெற்றி பெறுங்கள் . செழுமையான துணையாக சிவனடியை சிந்தித்து இருக்க எங்கும் எதிலும் அவனே துணையாகி நின்றானே. பின்குறிப்பு – சிவனடி அறிந்து துணையாக்கிக் கொண்டால் எங்கும் அவன் துணையாக இருக்கும். #திருமந்திரம் |
உறுதுணை நந்தியை உம்பர் பிரானை பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின் செறிதுணை செய்து சிவனடி சிந்தித் துறுதுணை யாயங்கி யாகிநின் றானே. திரு - 2584 உற்ற துணையான நந்தியை தேவர்களின் தலைவனை பெறுகின்ற துணையாக்கி பிறப்பை அறுத்து வெற்றி பெறுங்கள் . செழுமையான துணையாக சிவனடியை சிந்தித்து இருக்க எங்கும் எதிலும் அவனே துணையாகி நின்றானே. பின்குறிப்பு – சிவனடி அறிந்து துணையாக்கிக் கொண்டால் எங்கும் அவன் துணையாக இருக்கும். #திருமந்திரம் |
பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாகப் குறவஞ் சிலம்பக் குளிர்வரை யேறி நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால் இறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே. திரு - 2583 பறவையான தன் கார்பமாக முழுமையடைந்த முட்டையை சுமக்கும் அது போல் தனக்குள் உபதேசப் பொருளை சுமந்தும் பாம்பு போன்ற வெளிச்சத்தை உடம்பாக கொண்டும் மெலிதாய் சிலம்பின் ஓசையுடனும் குளிர்ந்த அரை ஏறி மணம் வீசா மலர் கொண்டு நந்தியை அல்லாமல் இறைவன் இவன் என்று பிறவற்றை என் மனம் போற்றாதே. பின்குறிப்பு – குரு அருளால் பெற்ற தெளிவால் இறை உணர்ந்தேன் பிறவற்றை போற்றேன். #திருமந்திரம் |
பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலான் முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால் அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற் பத்திப்பட் டோ ர்க்குப் பணியொன்றும் இல்லையே. 2582 மந்தப்பட்டு இருப்பது உன் பணி இல்லை பிறப்பு தன்வசம் இல்லை என்பதால். முத்தியும் உன் பணி இல்லை முறைகள் தன்வசம் இல்லை என்பதால். இரண்டும் அவரவருக்கு அருளுடன் அளிப்பதால் பத்தியில் இருப்பவருக்கு பணி ஒன்றும் இல்லையே. பின்குறிப்பு – பத்தி உள்ளவர் தான் என்ற ஆணவம் அற்று செயல்படுகிறார் எனவே செயல்களின் வினைகள் அவருக்கு இல்லை. #திருமந்திரம் |
ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல் நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனை வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள் ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் தானே. திரு - 2581 ஆ என்ற பசுவின் கன்று தேடி அழைக்கும் அது போல நான் கன்றாய் இருந்து நாடி அழைத்தேன் என் நாதனை. வான் அகன்று அதற்கும் அப்பாலும் நின்ற மறைப்பொருள் ஊன் என்ற உடலில் கன்றைப் போல் நாடி வந்து புகுந்தானே. பின்குறிப்பு – பசு கன்று உறவு போல் உடல் நின்று அருள் தருகிறான் இறை. #திருமந்திரம் |
ஒத்துல கேழும் அறியா ஒருவனென் ற்த்தன் இருந்திடம் ஆரறிவார்சொல்லப் பத்தர்தம் பத்தியிற் பாற்படில் அல்லது முத்தினை யார்சொல்ல முந்துநின் றாரே. திரு - 2580 உலகம் ஏழிலும் ஒத்து இருக்கும் ஒருவன் இருப்பிடம் யார் அறிவார். பக்தர்கள் தனது பக்தியில் உணரலாம் அல்லது முத்தினை யார் சொல்ல முந்தி நின்றாரே. பின்குறிப்பு – பக்தியால் இறைவனை அறியலாம். #திருமந்திரம் |
நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும் ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர் பாரிற் பயனாரைப் பார்க்கிலும் நேரியர் ஊரில் உமாபதி யாகிநின் றானே. திரு - 2579 நீரில் குளிர்ச்சியாய் நெருப்பில் சூடாய் இருக்கும் நந்தியை தெளிவாக யார் அறிவார். அப்படி அறிபவர் உலகில் பயனடைபவரைப் பார்க்கிலும் நேர்த்தியானவர்கள். ஊரில் உமாப்பியாகி நின்றானே. பின்குறிப்பு – சிவசத்தியாய் ஊரில் நிறைந்திருப்பவன் இறைவன். #திருமந்திரம் |
அடியார் அடியார் அடியார்க் கடிமைக் கடியவனாய் நல்கிட் டடினையும் பூண்டேன் அடியார் அருளால் அவனடி கூட அடியா னிவனென் றடிமைகொண் டானே.திரு - 2578. அடியாரின் அடியார் ஒருவரின் அடியாருக்கு அடியாராக இருக்கும் நல்வாய்ப்பு அடைந்தேன். அடியார் அருளால் இறைவனது அடி கூட அடியான் இவன் என் அடிமை என ஆட்கொண்டான். பின்குறிப்பு – குரு வழி வந்தவர் அருளால் உபதேசம் அறிந்து இறை அடிமை ஆனேன். #திருமந்திரம் |
முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும் அத்தனை மாயா அமரர் பிரான்தனைச் சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப் பத்தர் பரசும் பசுபதி தானென்றே. திரு - 2577 முத்தி தரும் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும் நாயகனை மாயா அமரர் தலைவன் தன்னை சுத்தமானாவனை தீய நெறியாய் நின்ற சோதியை பத்தர் பரவுவது பசு பதி தான் என்றே. பின்குறிப்பு – பாசம் அறிந்தவர் பசு பதி தனக்குள் என உணர்வார்கள். #திருமந்திரம் |
கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும் பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும் விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம் நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே. திரு - 2576 வெப்பத்தால் கொதிப்பதும் வெப்பம் தணிந்து குளிர்வதும் என இது இந்த பாரில் முற்றும் விதிப்பதை செய்யும் ஐவரை வேண்டாது உடலுக்குள் நொதிக்கின்ற ஒன்றை நூல் ஒன்று போதுமே. பின்குறிப்பு – உடலுக்குள் பக்தியால் நொதிக்கச் செய்யும் நூல் ஒன்று போதும் இறை உணர. #திருமந்திரம் |
அவனிவன் ஈசனென் றன்புற நாடிச் சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார் பவனிவன் பல்வகை யாமிப் பிறவி புவனிவன் போவது பொய்கண்ட போதே. திரு - 2575 அவனை இவனை ஈசன் என்று தன்னை கடந்து புறத்தே நாடி சிவன் இவன் ஈசன் என்ற உண்மையை உணராதவர் உலகில் இவன் அவன் என்று பலவகையாக இருக்காமல் மாற்றம் காண்பது பொய்யை கண்ட பொழுதே. பின்குறிப்பு – பொய்யை அறிந்தும் உண்மையை அடையலாம். #திருமந்திரம் |
உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம் பெண்மயற் கெட்டறப் பேறட்ட சித்தியாம் திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால் வண்மை யருள்தான் அடைந்தபின் ஆறுமே. திரு - 2574 உண்மை உணர்ந்து ஒன்றும் சித்தமே முத்தியாம். பெண் மயக்கம் அழித்துவிடல் அட்டமா சித்தியாம். திடமான ஞானி சிவகாயம் கைவிட்டால் வரும் வண்மை அருள்தான் அடைந்தபின் ஆறுமே. பின்குறிப்பு – திடமான ஞானி என்ற இறைப்பற்றில் திளைப்பவர் முடிவும் வழிகாட்டுவதாக அமையும். #திருமந்திரம் |
நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல் துந்தொழி லற்றுச் சுத்தம தாகலும் பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத் துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.திரு - 2573 முன்னே நின்ற வினையும் அதனால் வந்த பிணியும் தற்கால நெடுஞ்செயலின் துன்பம் தரும் செயலை செய்யாமல் சுத்தமானதை பின்னும் கருமம் சேரமால் பாதுகாப்புடன் அருளைப் நேர் பெற்று அதில் மூழ்குதல் ஞானிகளின் தூய்மையே. பின்குறிப்பு – நேர்மையாய் வாழ்ந்து எல்லா வினைப்பயனையும் அழித்து அருள்கடலலில் மூழ்குவது ஞானியின் செயல். #திருமந்திரம் |
நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல் துந்தொழி லற்றுச் சுத்தம தாகலும் பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத் துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.திரு - 2573 முன்னே நின்ற வினையும் அதனால் வந்த பிணியும் தற்கால நெடுஞ்செயலின் துன்பம் தரும் செயலை செய்யாமல் சுத்தமானதை பின்னும் கருமம் சேரமால் பாதுகாப்புடன் அருளைப் நேர் பெற்று அதில் மூழ்குதல் ஞானிகளின் தூய்மையே. பின்குறிப்பு – நேர்மையாய் வாழ்ந்து எல்லா வினைப்பயனையும் அழித்து அருள்கடலலில் மூழ்குவது ஞானியின் செயல். #திருமந்திரம் |
உவாக்கடல் ஒக்கின்ற வூழியும் போன துவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர் அவாக்கட லுட்பட் டழுந்தினர் மண்ணோர் தவாக்கடல் ஈசன் தரித்து நின்றானே. திரு - 2572 உவர்ப்பு நிறைந்த கடல் எவ்வளவு காலமானாலும் மாறாது. துவர்க்க முடியா கடலில் துஞ்சினார் வானோர். அவா என்ற ஆசைக்கடலில் அழிந்தனர் மண்ணோர். மாற்றம் அற்ற கடல் ஈசன் தரித்து நின்றானை. பின்குறிப்பு – கடல் போன்ற ஆசை அழிக்க ஈசன் அன்புக் கடலில் பற்றுக் கொள்ளவேண்டும். #திருமந்திரம் |
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே படுவழி செய்கின்ற பற்றற வீசி விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம் தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே. திரு - 2571 பதப்படுத்தும் பூதங்கள் ஐந்தும் உடனே பாழில் தள்ளாதபடி பாழான வழிகளை பற்றற விலக்கி வேட்கையை விடுவதே மெய் என்ற ஞானம். இப்படி தொடுவது தம்மை தொடர்தல் ஆகாது. பின்குறிப்பு – பற்று அற்றவரை பூதங்கள் காக்கும். #திருமந்திரம் |
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள் ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே. திரு - 2570 வேண்டும் வேண்டும் என வளரும் ஆசையை விடுங்கள் ஆசையை விடுங்கள் ஈசனை அறிந்தவராக இருப்பினும் ஆசையை விடுங்கள் ஆசைப் படப்பட அதன் பொருட்டே வளரும் துன்பங்கள் ஆசையை விடவிட ஆனந்தமாமே. பின்குறிப்பு – தேவைக்கும் ஆசைக்கும் இருக்கும் வேறுபாடு அறிந்து ஆசை விடவிட ஆனந்தம் வளரும். #திருமந்திரம் |
மாடத்து ளானலன் மண்டபத் தானலன் கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன் வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில் மூடத்து ளேநின்று முத்திதந் தானே. திரு - 2569. மாடத்தில் வைக்கப்படுபவன் இல்லை. மண்டபத்தில் இருப்பவன் இல்லை. கூடத்தில் நிற்க்கப்படுபவன் இல்லை வேடம் தரித்தவன் இல்லை வேண்டும் வேண்டும் என்ற எழும்பும் வேட்கையை விட்டார் நெஞ்சில் மறைந்தபடி நின்று முத்தி தந்தானே. பின்குறிப்பு – பக்தன் நெஞ்சில் இருப்பவன் மற்றபடி மதக் கூடாரத்தில் இருப்பது இல்லை. #திருமந்திரம் |
வாசியு மூசியும் பேசி வகையினால் பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம் எளிதாமே.திரு - 2568 வாசியும் மூச்சியையும் பற்றி பேசி பலவகையாக்கி அதை விளகிக்கொண்டு திரிவதால் பயன் இல்லை. ஆசையும் பற்றுக் கொள் அன்பும் அற்று இருங்கள் அப்படி ஆனபின்பு ஈசன் இருந்த இடம் எளிதாக விளங்கும். பின்குறிப்பு – வாசி மூச்சி பயிற்ச்சி என வகைவையாக பேசாது ஆசை கடந்தால் இறை இருப்பிடம் அடையலாம். #திருமந்திரம் |
நிற்ற லிருத்தல் கிடத்தல் நடைபோடல் பெற்றவா க்காலுந் திருவருள் பேராமற் சற்றியன் ஞானந்தத் தானந்தந் தங்கவே உற்ற பிறப்பற் றொளிர்ஞான நிட்டையே.திரு - 2567 நிற்றல் இருத்தல் கிடத்தல் நடைபோடல் என மாறிய முற்பிறவி பெற்ற வினையை வாக்கால் திருவருளை விலகாமல் சாற்றியவர் ஞானந்த ஆனந்தாத்தை தனக்குள் உரிமையாக்கி பிறப்பு அற்ற ஒளிர் ஞான நிட்டை அடையலாம். பின்குறிப்பு – இறைப் பற்று பிறப்பு நோய் நீக்கும். #திருமந்திரம் |
மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும் மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா மனவாக்கு கெட்டவர் வாதனை தன்னால் தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே. திரு - 2566 மனம் வாக்கு உடல் கொண்ட தாகத்தால் வலிமையான வினைகள் வந்து சூழும் மனமும் வாக்கும் நேராக நன்றால் வலிமையான வினை வராது. மனம் வாக்கு கெட்டவர் தனக்குள் வாதம் செய்து தன்னை மாற்றிக் கொண்டால் தகுந்த ஞானி ஆகலாம். பின்குறிப்பு – யாரும் தன்னை திருத்தி ஞானி ஆகலாம். #திருமந்திரம் |
தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள் பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள் சென்னியின் வைத்த சிவனரு ளாலே. திரு - 2565 தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் பழைய வினையின் காரணத்தை அறிந்து தீர்ப்பார்கள். அடுத்து வினை தொடராதபடி அடக்குவார்கள். சென்னி என்ற உபதேசப் பொருள்மீது வைத்த சிவன் அருளாலே. பின்குறிப்பு – உபதேசப் பொருளின் மகிமையால் வினைகளை தடுக்கலாம். #திருமந்திரம் |
முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர் பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள் தன்னை யறிந்திடுந் தததுவ ஞானிகள் நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே. திரு - 2564 செய்த பழைய வினை வந்தால் அதை முன்னே அறிவதால் அதிலிருந்து நீங்குவார்கள் அடுத்து வினை தொடராமல் செய்வார்கள் தன் புகழ் விரும்பம் இல்லாதபடி எதையும் பார்ப்பார்கள் தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள். நன்மையையே ஐம்புலன் கொண்டு நாடுவதாலே. பின்குறிப்பு – ஞானிகளுக்கு வினையிலிருந்து விடுதலை உண்டு காரணம் யாரும் நன்மை அடையும் வழியை தன் புலன் கொண்டு அறிய முற்படுவதால். #திருமந்திரம் |
மனமது தானே நினையவல் லாருக்குக் கினமெனக் கூறு மிருங்காய மேவற் றனிவினி னாதன்பால் தக்கன செய்யில் புனிதன் செயலாகும் போதப் புவிக்கே. திரு - 2563 மனமானது தானாகவே உண்மையை நினைக்க வல்லதாக மாறியவர்களுக்கு இசைந்து செயல்படும் உடல் மேலும் இனிமையான தகுந்தவற்றை செய்ய புனிதன் செயலாகும் இநுத புவிக்கே. பின்குறிப்பு – மனதிடம் கொண்ட இறைபற்றுள்ளவர்களின் செயல்கள் இந்த புவிக்கு நன்மை தரும். #திருமந்திரம் |
மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத் துயக்கறுத்தானைத் தொடர்மின்தொடர்ந்தால் தியக்கஞ் செய்யாதே சிவனெம் பெருமான் உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே. திரு - 2562 மயக்கி வைத்திருந்த ஐந்து புலன்களின் பாசத்தை அறுத்து கறுப்பான தூயவனை தொடருங்கள் தொடர்ந்தால் தாமதம் செய்யாத சிவன் என் பெருமான் வீடுபெறு அடை என மனம் ஒன்றிடச் செய்வித்தானே. பின்குறிப்பு – புலன் கடந்த இறைப் பற்றே வீடுபெறு தரும். #திருமந்திரம் |
வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு தம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டா தம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடிற் செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே. திரு - 2561 திடமான பழுத்த மலர்ப்பழம் ஒன்று உண்டு அதை பற்றிய பறவை அதில் மறைந்தபடி இருந்து நம்மை நாடமுடியாதபடி செய்கிறது அம்பு கொண்டு எய்திட செம்மையான பொற் சிவகதி சென்று எய்திடலாம். பின்குறிப்பு – உபதேசப் பொருள் அறிந்து வாசியால் சிவகதி அடையலாம். #திருமந்திரம் |
உய்யும் வகையால் உணர்வில் ஏத்துமின் மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப் பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே. திரு - 2560 வீடுபெறு அடையும் வகையில் உணர்வை போற்றி வாழ்த்துங்கள். மெய்யன் அரன் நெறி மிகையாகவே உண்டு எனவே திடமாக பொய்யின்றி புறத்தே பொலிவாக இருப்பவர் இடத்தே ஐயனும் அங்கே அமர்ந்திருந்தாரே. பின்குறிப்பு – உண்மை உள்ளவர் இடத்தே இறையும் குடி கொண்டிருப்பார். #திருமந்திரம் |
மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக் கைத்தாள் கொண்டாருந் திறந்தறி வாரில்லை பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டாம் கத்தாள் திறக்கில் அரும் பேற தாமே. திரு - 2559 உபதேசப் பொருளை உள்ளம் படியும் படி உணர்த்திய நந்தியை உடன்பட்டு உணரும் திறமையான அறிவு உள்ளவர் இல்லை. பொய்யான தாளை பற்றும் இடும்பையை பொய்யற விட்டுவிடுவதே நம்மை காக்கும் அருமையான திறவு கோல் ஆகும். பின்குறிப்பு – பொய்த்தாள் துறந்து மெய்தாள் உணர்ந்தால் துன்பம் அழிக்கலாம். #திருமந்திரம் |
கைகலந் தானை கருத்தினுள் நந்தியை மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப் பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப் பொய்யொழிந் தார்க்கே புகலிட மாமே .திரு - 2558 உடன்பட்டவனை கருத்தினுள் நின்ற நந்தியை மெய்யுடன் கலந்தான் தன்னை வேதமுதல்வனை பொய் கலந்தவரின் முன் புகாத புனிதனை பொய் ஓழித்தவர்க்கே புகலிடமாகும். பின்குறிப்பு – உண்மை உள்ளவர் இறைவனிடன் அடைக்கலமாகிறார். #திருமந்திரம் |
எய்துவ தெய்தா தொழிவ திதுவருள் உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி பொய்செய்புலன் நெறியொன்பதுந்தாட்கொளின் மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.திரு - 2557 வாய்த்தது வாய்க்காமல் ஒழிந்தது என அருள்பெற்றதை அருளினான் உத்தமன் சீர்நந்தி. பொய் செய்யும் புலன்களின் செயல்கள் யாவற்றையும் தடுத்தால் மெய்யன் புரவியை மேற்கொள்ளலாம். பின்குறிப்பு – அடைய வேண்டியதையும் அழிக்க வேண்டியதையும் அடைய பொய்யை தவிர்த்தால் சாத்தியமாகும். #திருமந்திரம் |
எய்திய காலத் திருபொழு துஞ்சிவன் மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும் பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில் ஐயனும் அவ்வழி யாகிநின் றானே.திரு - 2556 வாய்த்த நேரத்தின் இரு பொழுதும் சிவன் மீது பற்று கொள்ள விதி அமைத்துக் கொடுக்கும் பொய்யும் புலன்களும் புகழ்வதற்கு என்று இல்லாமல் அமைதியாக இருந்திடில் ஐயனும் அவ்வழியாகி நின்றானே. பின்குறிப்பு – வாய்ப்புகளை இறை உணர பயன்படுத்தினால் இறையும் தன்னை உணர்த்தும். #திருமந்திரம் |
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப் பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனை கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக் கைகலந் தார்க்கே கருத்துற லாமே. திரு - 2555 உண்மை கலந்தவருடன் உடன்பட்டு கலந்தவன் அளவற்ற பொய் கலந்தவருடன் இணையா புனிதனை கைகலந்து ஆவி எழ தொழுது அண்ணலைக் கைகலந்தவர்க்கே கருத்து உணர்த்தப்படும். பின்குறிப்பு – உண்மை உள்ளவர் கருத்து நிறைந்தவராகிறார். #திருமந்திரம் |
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னை பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை உய்கலந் தூழித் தலைவனுமாய் நிற்கும் மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே.திரு-2554 உடல் அடைந்தவருடன் உடன்பட்டவன் தன்னை பொய் கலந்தவருடன் புகதா ஒருவனை சிறப்புற கலந்து ஊழித் தலைவனாக நிற்கும் உடல் கலந்து இன்பம் விளைத்திடும் உண்மையானவர்க்கே. பின்குறிப்பு – உண்மை கலந்தால் உடல் கலந்தவன் இன்பம் அருள்வான். #திருமந்திரம் |
அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில் இருளற்ற சிந்தை இறைவனை நாடி மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவோர் தாமே.திரு - 2553 அருள்பெற்ற காரணம் எப்படி என கேட்க இருள் அற்ற சிந்தையுடன் இறைவனை நாடி மருள் இல்லாத சிந்தையாக மாற்றி அருமை பொருள் என உற்ற சேவடி போற்றுவார் தாமே. பின்குறிப்பு – உபதேசப் பொருள் அறிந்து போற்ற அருள் பெறலாம். #திருமந்திரம் |
தானே யுலகில் தலைவ னெனத்தகும் தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும் வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும் ஊனே யுருகிய வுள்ளமொன் றாமே. திரு - 2552 தானே உலகில் தலைவன் எனத்தகும். தானே உலகிற்கு தத்துவமாய் நிற்கும். வானம் வழங்கும் மாமழையைப் போல் மாமறை உணர்ந்தவர் ஊனே உருகி உள்ளம் ஒன்றாகின்றார்களே. பின்குறிப்பு – உள்ளம் உருக இறை உணர்வோர் இறையாகவே ஒன்றுவார்கள். #திருமந்திரம் |
எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில் எல்லாம் அறிந்த இறையென லாமே. திரு - 2551 எல்லாவற்றையும் அறிய முற்படும் அறிவை விட்டுவிடு எல்லாம் அறிந்தும் இலாபம் இங்கு இல்லை. எல்லாம் அறிந்த அறிவே நான் என்றால் எல்லாம் அறிந்த இறை நான் எனலாமே. பின்குறிப்பு – எல்லாம் அறிவது சாத்தியமில்லை. #திருமந்திரம் |
அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள் குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில் செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே.திரு - 2550 தேவையற்றதை உரைக்காமல் நல்லன அருளும் உபதேசங்கள் குற்றத்தை அறுத்து பொன் போன்ற கனல் இடையே அழித்திடச் செய்து மாற்றிடச் செய்தால் தேவையற்றது நீங்கி செழுமையான சுடராகும். பின்குறிப்பு – உண்மை உபதேசத்தால் தீமை எரிந்து நல் வெளிச்சம் உண்டாகும். #திருமந்திரம் |
அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன் தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன் நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தே நந்தி யிருந்தனன் நாமறி யோமே.திரு - 2549 முதலும் முடிவுமாய் ஆகும் பராபரன் அவரவர் பரம்பரன் தன்னிற் பரமுடன் நந்தமை உண்டு மெய் ஞான நேய அந்தத்தே நந்தி இருந்தனன் நாமறியோமே. பின்குறிப்பு – யாவருக்கும் எல்லா பரம்பரைக்கும் நந்தி நேயத்துடன் உதவ நின்றான். #திருமந்திரம் |
கரியுண் விளவின் கனிபோல் உயிரும் உரிய பரமுமுன் னோதுஞ் சிவமும் அரிய துரியமேல் அகிலமும் எல்லாம் திரிய விழுங்குஞ் சிவபெரு மானே.திரு - 2548 யானை ஆனது ஒடு ஒட்டாமல் பிரிந்த விளம் பழத்தை உண்ணுவது போல் உயிரும் உரிய பரமும் முன்னே நின்ற சிவமும் அரிய துரிய மேல் அகிலமும் எல்லாம் திரிய விழுங்கும் சிவபெருமானே. பின்குறிப்பு – சமூலமாய் ஏக இறையே மிண்டும் ஏற்க்கிறது. #திருமந்திரம் |
இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப் பரம்பர மான பரமது விட்டே உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி இருந்தஎன் நந்தி இதயத்து ளானே.திரு - 2547 இரும்பு ஏற்கும் நீர் போல் என்னை தன்னுடன் வாங்கிய பரம் பரமான பரத்தை விட்டே உரம் பெற முப்பாழ் ஒளியை விழுங்கி இருந்த என் நந்தி என் இநயத்துள் உள்ளானே. பின்குறிப்பு – பரத்துடன் என்னை பழுது இன்றி இணைத்த என் நந்தி என் இதயத்துள் இருக்கிறான். #திருமந்திரம் |
அளந்து துரியத் தறிவினை வாங்கி உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக் கிளர்ந்த பரஞ்சிவஞ்சேரக் கிடைத்தால் விளங்கிய வெட்ட வெளியனு மாமே.திரு - 2546 அளவுடன் துரியத்தின் அறிவை வாங்கி உள்ளம் கொள்ளும் பரத்தை உடல் கொள்ளும் அளவு தொழிற்படுத்தி கிளர்ந்த பரசிவத்தை சேர வாய்ப்பு கிடைத்தால் விளங்கிடும் வெட்ட வெளியனுமாமே. பின்குறிப்பு – உடல் கொண்ட ஆற்றலை இறை உணர பயன்படுத்தி இறையுடன் கலக்கலாம். #திருமந்திரம் |
பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்கும் திரனெங்கு மாகிச் செறிவெங்கு மெய்தும் உரனெங்கு மாயுல குண்டு உமிழ்க்கும் வரமிங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே.திரு - 2545 பரன் எங்கும் பரந்து உற்று நிற்கும் திரன் எங்கும் என ஆகி செறிவு ஒங்கிடச் செய்யும் உரன் எங்குமாய் உலகில் சுரக்கும் வரன் என கண்டு நான் வாழ்ந்து மகிழ்கிறேன். பின்குறிப்பு – எங்கும் எல்லாம் ஆன இறையை நாயகனாக கொண்டு வாழ்கிறேன். #திருமந்திரம் |
செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம் அவியின் றியமன மாதிகள் ஐந்துங் குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து தவிர்வொன் றிலாத சராசரந் தானே.திரு - 2544 காது உடல் வாய் கண் மூக்கு இவைகளுடன் இந்திரியம் மற்றும் அந்தக் கரணங்கள் சேர்ந்த ஐந்தும் குவிக்க முடியாமல் விரிந்து குவிந்து தவிர்க்கவும் முடியாமல் சராசரம் தானே. பின்குறிப்பு – சராசரம் என்ற சுவாச போக்கு வரத்து புலன்களுடன் அந்தகரணத்தை ஆள்கிறது. #திருமந்திரம் |
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற் படருஞ் சிவசத்தி தாமே பரமாம் உடலைவிட் டிந்த உயிரெங்கு மாகிக் கடையுந் தலையுங் கரக்குஞ் சிவத்தே.திரு - 2543 உடம்பும் உயிரும் தீர்க்கமாக ஒற்றி இருக்க படரும் சிவசத்தி தான் பரமாம். உடலைவிட்டு இந்த உயிர் எங்குமான முதலும் முடிவுமான சிவத்தே கரையும். பின்குறிப்பு – உடலோடு உள்ளபொழுதே உலகை உணரும் நான் என்ற சிவசத்தி. #திருமந்திரம் |
அழிகின்ற சாயா புருடனைப் போலக் கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில் எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப் பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே. திரு - 2542 அழியும் நிழல் நாயகனைப்போல் கழியும் நீர் குமிழியைக் பார்க்க தெரிந்து எரியும் தீயில் கரையும் கர்ப்பூரத்தை ஒத்தபடி எழில் பொழியும் இவ்வுடம்பில் இருந்து போகும் பரத்தே. பின்குறிப்பு – நிலையற்று போகும் இந்த நல்உடல். #திருமந்திரம் |
அழிகின்ற சாயா புருடனைப் போலக் தவ்வாய அந்தக் கரணம் அகில்மும் எவ்வா யியுரும் இறையாட்ட ஆடலாற் கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே.திரு - 2541 உடல் வாய் கண் மூக்கு செவி என்னும் உடல் தோற்றத்துடன் அத்தக் கரணம் அகிலமும் எல்லா உயிரும் இறை ஆட்ட ஆடுகின்றதே கை வாய் இல்லாமல் எங்கும் மெய் கண்டதே. பின்குறிப்பு – புலன்களும் புத்தியும் இறைவன் கை வாய் இன்றி ஆட்டி வைப்பதை அறிந்துக் கொண்டதே. #திருமந்திரம் |
துறந்துபுக் கொள்ளொளி சோதியைக் கண்டு பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே மறந்தறி யாவென்னை வான்வர் கோனும் இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே.திரு - 2540 நான் என்பதை துறந்து உள் நின்ற சோதியைக் கண்டு பறந்த என் உள்ளம் பணிந்து கிடந்தே இறையை மறந்து இருப்பதை அறியா என்னை வானவர் கோனும் இறந்து பிறவாமல் இருக்கமாறு ஈங்கு வைத்தானே. பின்குறிப்பு – மேலானவர் அரசன் இறந்து பிறக்காமல் இருக்கச் செய்தான். #திருமந்திரம் |
நின்மல மேனி நிமலன் பிறப்பிலி என்னுளம் வந்திவன் என்னடி யானென்று பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன் நின்மல மாகென்று நீக்கவல் லானே.திரு - 2539 அழுக்கற்ற உடல் கொண்ட நிமலன் பிறப்பு இல்லாதவன் என் உள்ளம் வந்து என் அடியான் என்று பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன் நீ மலமற்றபடி ஆகவேண்டும் என்று மலம் நீக்க வல்லானே. பின்குறிப்பு – ஏகமான இறை என்னை அழுக்கற்றவனாக்கினான். #திருமந்திரம் |
அடிதொழ முன்னின் றமரர்க ளத்தன் முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப் படிதொழ நீபண்டு பாவித்த தெல்லாங் கடிதொழ காணன்னுங் கண்ணுத லானே.திரு - 2538 அடியை தொழ முன்னால் நிற்கும் தேவர்களுக்கு முழுமையும் வணங்க ஈசனும் முன்னே நின்று அருளினான். இப்படி தொழ நீ முன்னர் பாவித்த எல்லாம் கடிந்து விட்டு தொழவே கண்ணுதலானே. பின்குறிப்பு – காட்சியான இறை சடங்கு கடந்து கண்ணுதலாக்கினான். #திருமந்திரம் |
அறிவார் அறிவன அப்பும் அனலும் அறிவார் அறிவன அப்புங் கலப்பும் அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால் அறிவான் அறிந்த அறிவறி யோமே.திரு - 2537 அறிபவர் அறிவது நீரும் நெருப்பும், அறிபவர் அறிவது நீரில் கலந்த கலப்பு ஆன வெப்பமும் அறிபவன் இருந்து அங்கே அறிவிக்கவில்லை என்றால் அறிவாது சாத்தியமில்லை என அறிவான் அறிந்த அறிவை நாம் அறிவது இல்லையாமே. பின்குறிப்பு – அறியச் செய்பவன் இறை என்று உணர்ந்தவரே அறிந்தவர். #திருமந்திரம் |
அறிவறி யாமை இரண்டும் அகற்றிப் செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப் பிறிவறி யாது பிரானென்று பேணுங் குறியறி யாதவர் கொள்ளறி யாரே.திரு - 2536 அறிவு அறியாமை என்ற இரண்டையும் அகற்றி செறிவான அறிவாய் எங்குத் நிறைந்த சிவனை பிறிவதை அறியாமல் தலைவன் என்று பேணுவேண்டும் அப்படி பேணும் குறிப்பு அறியாதவர் இறையை அறிந்துக்கொள்ள அறியமாட்டார். பின்குறிப்பு – அறிவு அறியாமை இரண்டும் கடந்தவர் இறைமையை அறிவார். #திருமந்திரம் |
வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில் ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்கும் தாய்நாடி யாதிவாக் காதி சகலாதி சேய்நா டொளியெனச் சிவகதி யைந்துமே.திரு - 2535 வாயாக இருப்பது நாசியே புருவமத்தியே மத்தகம் உச்சியில் ஆய நாசி உச்சி முதலவையாக நிற்கும் தாய்நாடி. ஆதி வாக்காதி சகலாதி சேய் நாடோளி என சிவகதி ஐந்தாக இருக்கிறது. பின்குறிப்பு – சுவாச கதியை ஐந்து சிவகதி என பிரித்து பார்க்கலாம். #திருமந்திரம் |
உயிர்பர மாக உயர்பர சீவன் அரிய சிவமாக அச்சிவ வேதத்து இரியிலுஞ் சீராம் பராபரன் என்ன உரிய உரையற்ற வோமய மாமே.திரு - 2534 உயிர் பரம் என இருக்க உயர்பர சீவன் அரிய சிவமாக அதை விளக்கும் சிவ வேதத்து முழுவதிலும் சீரான பராபரன் என்ன என உரியதை உரைசெய்ய ஓ என்ற மயமாமே. பின்குறிப்பு – உயிர் பரம் என அரிய நாத ஒலி என மாறுகிறது. #திருமந்திரம் |
நீயது வானா யெனநின்ற பேருரை ஆயது நானானேன் என்னச் சமைந்தறச் சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள் ஆயது வாயனந் தானந்தி யாகுமே.திரு - 2533 நீ அது ஆனாய் என நின்ற பேருரை கேட்டு ஆராய அதுவாக நானே ஆனேன் என்று பொருள் தந்து குழந்தையை சிவமாக்கும் சீர் நந்தியின் பேரருள் ஆராய ஆனந்த நந்தி ஆகுமே. பின்குறிப்பு – நான் கடவுள் என விளக்கிய நந்தி ஆனந்தமாய் ஆனந்தம் அருளினார். #திருமந்திரம் |
பூரணி யாது புறம்பொன்றி லாமையின் பேரணி யாதது பேச்சொன்றி லாமையின் ஓரணை யாததுவொன்றுமி லாமையிற் காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே.திரு - 2532 முற்று பெற்ற பூரணி என்பது வெளி இருக்கும் ஒன்றாக இருப்பது இல்லை. அடையாளப்படும் பேரணி கொள்ளவது இல்லை பேச்சு என ஒன்று இல்லாமையால். ஒன்றையும் சாராது ஒன்றும் இல்லாமையால் காரணம் இன்றியே காட்டும் தன்மையானதே. பின்குறிப்பு – இறை அனுபவம் மட்டுமே இதற்கு சரியான விளக்கம். #திருமந்திரம் |
நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்துப் பினமா மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத் தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி மனவா சகங்கெட்ட மன்னனை நாடே.திரு - 2531 நனவை முதலாக கொண்ட கனவு, சுழுத்தி, துரியம், அதீதம் என்ற ஐந்த் நிலையிலும் நாதாத்திலே வைத்து மாறுபடும் மலத்தை பின் வைத்து அடுத்து அனைத்தையும் சுத்தமாக வைக்க தான் அஞ்சி சிவகதியே செய்து மனதின் வாசனையை அழித்த மன்னனை நாடே. பின்குறிப்பு – ஆணவம் கடந்து நாத அனுபவம் பெற்ற மன்னனை நாடவேண்டும். #திருமந்திரம் |
வைத்த துரிய மதிற்சொரு பானந்தத் துய்த்த பிரணவ மாமுப தேசத்தை மெய்த்த விதயத்து விட்டிடு மெய்யுணர் வைத்த படியே யடைந்து நின்றானே. திரு - 2530 தான் அடைந்த துரியத்தின் சொருபானந்தமான பிரணவ உபதேசத்தை மெய்பித்த இதயத்து விட்டிடும் மெய்யுணர்வை வைத்தபடியே அடைந்து நின்றான. பின்குறிப்பு – பிரணவ உபதேசத்தை கொண்டு அடைந்த அனுபவத்தை விட்டிடாமல் காக்கலாம். #திருமந்திரம் |
தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம் நம்பிய முத்துரி யத்துமே னாடவே யும்பத மும்பத மாகும் உயிர்பரன் செம்பொரு ளான சிவமென லாமே.திரு - 2529 தொம்பதம் தற்பதம் உணர்த்தும் அசிபதம் நம்பிய முத்துரியத்தின் மேல் கடக்கவே உய்யும் பதம் ஆகும் உயிர்பரன் செம்பொருளான சிவம் எனலாமே. பின்குறிப்பு – பத விளக்கமாய் நிற்பது சிவமாகும். #திருமந்திரம் |
துவந்தத் தசியே தொந்தத் தசியும் அவைமன்னா வந்து வயத்தேகமான தவமுறு தத்துவ மசிவே தாந்த சிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே.திரு - 2528 இருமைப் படும் வாக்கியமே தொந்தத்தசியும் அவற்றை அடைந்து கடந்துவந்த வயத்தேகமான தவமுறு தத்துவமசியே வேதாந்த சிவமாவதும் சித்தாந்தம் ஆவதும் இதுவே. பின்குறிப்பு – வேத முடிவும் சித்தாந்த முடிவும் தத்வமசியே. #திருமந்திரம் |
ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம் ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப் பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து வீறான தொந்தத் தசிதத்வ மசியே.திரு - 2527 தத்துவம் முப்பத்தாறையும் கடந்த அணுவான சுத்தம் தொம்பதம், இறுதியான தற்பதம் அடையும் சாந்தத்துப் பெயராகும் சீவன் நீங்கி வெறிப் பொருளாகும் தொந்தத்தசி தத்வமசியே. பின்குறிப்பு – தத்துவம் கடந்து அனுபவப் பொருள் ஆவது தத்வமசி. #திருமந்திரம் |
சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார் தாவு பரதுரி யத்தனில் தற்பதம் மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத மோவி விடும் தத் துவமசி உண்மையே.திரு - 2526 சீவ துரியத்தின் பழைமையான வார்த்தை சீவனார். மாறும் பரதுரியத்தில் தாவு. சிவதுரியத்தில் தற்பதம் என மேவும். மெய்ப்பதமாகிடும் தத்துவமசி உண்மையே. பின்குறிப்பு – தத்துவமசி என்ற பதம் உண்மையின் விளக்கம். #திருமந்திரம் |
வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின் கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன வில்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக் கல்கலன் என்னக் கதிரெதி யாமே.திரு - 2525 வில்லின் விசையில் நாணை கோத்துப்பின் இலக்கை குறிப்பார்க்க கொல்லும் களிறு என்ற ஆண்யானை ஐந்தும் வெறி இழந்து சாய்ந்தது. வில்லின் இயக்கத்தை தெளிவாக கூறும் ஒருவற்கு திடமான கல்கலன் என்ன காற்றுப் போல ஆகுமே. பின்குறிப்பு – சூட்சுமத்தை உணர்ந்த ஒருவர் புலன்களை வெல்கிறார். #திருமந்திரம் |
விட்ட விலக்கணைதான்போம் வியோமத்துத் தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும் விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற் சுட்டு மிலக்கணா தீதஞ் சொருபமே.:இரு - 2524 விளக்க தவறவிட்டதை இலக்கணம் என்போம். அவை உறுதியாக தொட்டுவிடாததே உபசாந்தம் ஆகும். எதையும் விட்டுவிடாது மேவும் சத்தின் ஆதியை சுட்டும் இலக்கணம் அதீதச் சொருபமே. பின்குறிப்பு – உண்மையான இலக்கை உரைப்பதே சரியான இலக்கனம். #திருமந்திரம் |
மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்வார் தமக்குறப் பேசின தாரணை கொள்ளார் சினக்குறப் பேசின தீவினை யாளர் தமக்குற வல்லினை தாங்கிநின் றாரே.திரு - 2523 மயக்கும் பார்வை பார்த்தாலும் மாதவம் செய்பவர் தனக்கு உறவாக பேசின தாரணை கொள்ளமாட்டார்கள். சினத்துடன் பேசின தீவினையாளர் தமக்கே ஆன வல்வினையை தாங்கி நின்கின்றார்கள். பின்குறிப்பு – இறைப்பற்று கொண்டவர் தவத்தையும் தீவினையாளர் சினத்தையும் மேற்கொள்வார்கள். #திருமந்திரம் |
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள் போவார் குடக்கும் குணக்கும் குறுவழி நாவினின் மந்திர மென்று நடுவங்கி வேவது செய்து விளங்கிடு வீரே.திரு - 2522 செயல்கள் ஆவது தெற்கும் வடக்கும். தேவர்கள் போவர்கள் மேற்கும் கிழக்கும் குறிப்புகள் தரும் வழி நாவினின் மந்திரம் நடுவே அங்கி உண்டாக்கி தெளிவை அடைவீரே. பின்குறிப்பு – குருவை சந்தித்து விளக்கம் பெருக. #திருமந்திரம் |
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன் காடும் மலையுங் கழனி கடந்தோறும் ஊடும் உருவினை யுன்னிகி லாரே. திரு - 2521 முடிவுக்கு வராமல் மரணம் என்ற முடிவை அடையும் மனிதர்கள் இறுதியை அடைவர் நந்தியின் குறிப்பை உணர்ந்தவுடன் காடும் மலையும் கழனி தோறும் உள்ளே ஊடும் உருவினை உன்ன எல்லாரும் முயலுவதில்லை. பின்குறிப்பு – நந்தி குறிப்பு அறியும் யாவரும் பிறவி மூப்பு அடைவர்கள். #திருமந்திரம் |
தாமரை நூல்போல் தடுப்பார் பரந்தொடும் போம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர் காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள் தீநெறி செல்வான் திரிகின்ற வாறே. திரு - 2520 மாற்று வழி காட்டும் நூலான தாமரை நூல் போல் பரத்துடன் சேர்வதை தடுப்பவர் தனது வழி அறியாமல் புறம்பே போய் பிறக்கடலில் உழல்வர். காணும் வழி காட்டக் கண் காணாத கலதிகள் தீய வழிச் செல்பவர் போல் திரிகின்றவறே திருவர். பின்குறிப்பு – அர்தமற்ற நூல் படித்தவர் தேவையற்று திரிவார்கள். #திருமந்திரம் |
திடலிடை நில்லாத நீர்போல் ஆங்கே உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக் கடலிடை நில்லா கலஞ்சேரு மாபோல் அடலிடை வண்ணனும் அங்குநின் றானே. திரு - 2519 திடலில் நில்லாத நீர் போல் உடலில் நில்லா உறுபொருள் காட்டிக் கடலில் நில்லாமல் கரை சேரும் கலம் போல் அடலிடை வண்ணனும் அங்கு நின்றானே. பின்குறிப்பு – உண்டாக்கி மறையும் மறை பொருளாக மறைந்தும் உணர்த்தியும் இறை இருக்கிறது. #திருமந்திரம் |
புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில் திறப்பட்ட சிந்தையைப் தெய்வமென் றெண்ணி அறப்பட்ட மற்றப் பதியென் றழைத்தேன் இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே.திரு - 2518 வெளியே புறப்பட்டு போவதும் நெஞ்சில் உள்ளே புகுவதும் ஆன ஒன்றை திறம்பட சிந்தையில் தெய்வம் என எண்ணி அறத்துடன் இருக்கும் அதனை மாற்றம் இன்றி பதி என்றே அழைத்தேன் இதையே பற்றினேன் இதுதான் நான் என்று இறையே உணர்த்திதே. பின்குறிப்பு – சுவாசமுடன் கலந்தவனை கலந்து அறத்துடன் அறிந்தேன். #திருமந்திரம் |
பரகதி யுண்டென இல்லையென் போர்கள் நரகதி செல்வது ஞாலம் அறியும் இரகதி செய்திடு வார்கடை தோறும் துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே.திரு - 2517 பரத்தை அடைய வழி உண்டு என்றாலும் இல்லை என்பவர்கள் நரகத்தை அடைவதை உயர்ந்தவர் உலகம் அறியும். இரப்பதை அடைந்தவர்களும் இறுதியில் அதை தூர்க்க எண்ணத் தொடங்குவார் தாமே. பின்குறிப்பு – மறுப்பவர்களும் இறுதியில் இறை நாட்டம் அடைவது உறுதி. #திருமந்திரம் |
வினையா மசத்து விளைவ துணரார் வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார் வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார் வினையாளார் மிக்க விளைவறி யாரே.திரு - 2516 வினையால் சத்து விளைவை உண்டாக்குகிறது என்பதை உணர்வது இல்லை வினையால் ஞானம் அடைந்து வீடுபெறும் ஏகுவதில்லை வினையை கடக்க வீடேன்னும் வேதந்தத்தையும் அறிந்து தெளிவது இல்லை வினையில் சிக்கியவர் அதன் விளைவையும் அறியமாட்டாரே. பின்குறிப்பு – வினையின் நன்மை தீமையை வினையைக் கடப்பவர் மட்டுமே அறிவார். #திருமந்திரம் |
பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை அருளது போற்றும் அடியவ ரன்றிச் சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின் மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே.திரு - 2515 பொருளாக நின்ற புண்ணியன் என் தந்தை அவனது அருளை போற்றும் அடியவர்களுக்கு அன்றி சுரளாக நின்று துன்பத் சுழியில் சிக்கி மருளாகிய சிந்தையுடன் மயங்குகின்றாரே. பின்குறிப்பு – இறை அருளை போற்றாதவர் துன்பத்தில் சிக்கித் தவிக்கிறார். #திருமந்திரம் |
தூயது வாளா வைத்தது தூநெறி தூயது வாளா நாதன் திருநாமம் தூயது வாளா அட்டமா சித்தியும் தூயது வாளா தூயடிச் சொல்லே.திரு - 2514 தூய்மையாக வைத்தது அருளப்பட்ட நெறி. தூய்மையானது நாதன் திருநாமம். தூய்மையானது அட்டமா சித்தியும் தூய்மையானது தூய்மையுடனன் உச்சரிக்கும் சொல்லே. பின்குறிப்பு – வாய்மையே வெல்லும். #திருமந்திரம் |
தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும் தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத் தூய்மணி தூயனல் தூயவு மாமே.திரு - 2513 தூய்மையான மணி தூய்மையான அனல் தூய்மையான ஓளி விடும். தூய்மையான மணி தூய்மையான அனல் எது என குற்றம் இன்றி அறிபவர் இல்லை. தூய்மையான மணி தூய்மையான அனல் எது என குற்றம் இன்றி அறிபவர்களுக்கு தூய்மையான மணி தூய்மையான அனல் தூய்மையை அரிளும். பின்குறிப்பு – தூய அறிவு உள்ளவர்களுக்கு தூய்மையான மணி தூய்மையான அனல் தூய்மையைத் தரும். #திருமந்திரம் |
வழிபட்டு நின்று வணங்கு மவர்ககுச் சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும் குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள் கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே.திரு - 2512 வழிபட்டு நின்று வணங்குபவர்களுக்கு தன்னையே சுற்றி சுழிபட்டு நின்ற ஓர் தூய்மை தொடங்கும். தேவையற்ற குழியில் நின்றவர் குறிப்புகளை அறியார். பாவம் கழித்தவர்க்கு அன்றி கான ஒண்ணாதே. பின்குறிப்பு – வழிபட்டு வினை தீர்த்தவன் இறையை காண்கிறார். #திருமந்திரம் |
ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே.திரு - 2511 தீட்டு என்பது இல்லை அருமையான நியமத்தருக்கு. தீட்டு இல்லை பாதுகாவலனை அர்ச்சிப்பவர்க்கு, தீட்டு இல்லை உள் சூட்டை வளர்பவர்க்கு. தீட்டு இல்லை அருமையான மறை அறிந்த ஞானிக்கே. பின்குறிப்பு – உண்மை. #திருமந்திரம் |
ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார் ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின் ஆசூச மானிடம் ஆசூச மாமே.திரு - 2510 தூமை என்ற தீட்டு தீட்டு என்பார்கள் அறிவற்றவர்கள் தீட்டு ஆகும் இடம் எது என யாரும் அறிவதில்லை. தீட்டு ஆகும் இடம் யாரும் அறிந்தபின் தீட்டு மானிடம் தீட்டு என உணர்வர். பின்குறிப்பு – ஆசூசத்தில் இருந்தே மானிடம் வளர்கிறது. #திருமந்திரம் |
மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக் கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில் ஆழ அடைந்தங் கனலிற் புறஞ்செய்து தாழ அடைப்பது தன்வலி யாமே.திரு - 2509 மோழை என்ற வயலில் தங்கும் நுரையை பார்த்து முழுத் திறத்துடன் பள்ளம் என கருதி கோழை அடைகின்ற எளிமையான குழியை குறிப்பினில் ஆழம் குறைந்த அதை கடந்து சிறந்த கனலில் புறஞ்செய்து தாழ அடைப்பது தன் வலிமையாகும். பின்குறிப்பு – பெரிய பள்ளம் என நினைத்து அதிக ஆற்றலை வீணாகச் செய்யவேண்டாம். #திருமந்திரம் |
மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் மாயை மறைய வெளிப்படும் அப்பொருள் மாயை மறைய மறையவல் லார்கட்குக் காயமும் இல்லை கருத்தில்லை தானே.திரு - 2508 மாயை மறைப்பதால் மறைக்கப்பட்டது மறைப்பொருள். மாயை மறைந்தால் வெளிப்படும் அப்பொருள். மாயை மறந்து பிறவின் இருந்து மறைய வல்லவர்களுக்கு காயமும் இல்லை கருத்தில்லை தானே. பின்குறிப்பு – மாயை கடந்து பிறவி முப்பவர் ஆணவம் கடந்து கருத்தை கடந்து நிறைவடைகிறார். #திருமந்திரம் |
கருமங்கள் ஒன்று கருதுங் கருமத் துரிமையுங் கன்மமும் முன்னும் பிறவிப் கருவினை யாவது கண்டகன் றன்பின் புரிவன கன்மக் கயத்துட் புகுமே.திரு - 2507 செயல்களில் இருந்து செயலை கருதும் உரிமையம் கன்மமும் முன்னும் பிறவிக்கு கருவினை என்று கண்டு அதை அகன்றபின் புரிவன கனமக் கயத்துட் புகுமே. பின்குறிப்பு – செயல்களின் பலனை எதிர்பார்ப்பதும் பிறவிக்கு வித்து என புரிந்து செயல்படுவது சிறந்தது. #திருமந்திரம் |
நாசி நுனியினின் நான்குமூ விரலிடை ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் பேசி யிருக்கும் பெருமறை யம்மறை கூசி யிருக்குங் குணமது வாமே.திரு - 2506 மூக்கின் நுனியில் இருந்து சுமார் பன்னிரண்டு விரல்அங்குள அளவில் ஈசன் இருப்பிடம் இருப்பதை யாரும் அறியவில்லை. இதை பேசி இருக்கும் பெரிய மறை நூல்களும் மறைத்தபடியே இருப்பது அதன் குணம் ஆகும். பின்குறிப்பு – ஈசன் இருப்பிடமான இருதயத்தை மறைத்து உள்ளன மறை நுல்கள். #திருமந்திரம் |
ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி நன்பாற் பயிலு நவதத் துவமாதி ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச் செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே.திரு - 2505 ஒன்பது அவத்தையும் அடைபவர் ஒன்பதின் அபிமானிகள் நல்லபடி முயன்று பயில நவமும் தத்துவமாகி ஒன்பதிலும் நிற்கும் முதிரும் துரியத்தில் செம்மைபட்டு சிவமாதல் சித்தாந்த சித்தியே. பின்குறிப்பு – எதையும் ஆராய்ந்து அதையும் கடந்த உண்மை உணர்வது சித்தாந்த சித்தி. #திருமந்திரம் |
தேராத சிந்தை தெளியத் தெளிவித்து வேறாத நரக சுவர்க்கமும் மேதினி ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான் வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே. திரு - 2504 தேர்ச்சி பெறாத சிந்தை தெளியத் தெளியச் செய்து வேறான நரக சொர்கம் மற்றும் உலகில் முடிவற்ற பிறப்பும் உயிருக்கு அருளுடன் வைத்தான் வேறுபாடு இன்றி தெளிவு பெறாதவர் உயிர் வினைகளால் சுழப்பட்டதே. பின்குறிப்பு – தெளிவுக்கு வினை அழிவே அவசியம். #திருமந்திரம் |
ஆதி பராபர மாகும் பராபரை சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம் ஓதுங் கமைமாயே யோரிரண் டோ ரமுத்தி நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே.திரு - 2503 ஆதியாகிய பராபரம் பராபறை என்ற சப்தமாகி சோதி பரமுயிர் என சொல்லும் நல்ல தத்துவமாகி ஓதும் கலை மாயை என்பதுடன் ஒர் இரண்டு என மூர்த்தி நீதி என்பதாம் பேதம் ஒன்பானுடன் ஆதியே. பின்குறிப்பு – பிரிவுகளை பிரித்துக் கொண்டவர்கள் ஒன்பதற்குள் அடங்கப் படும் அது ஆதிக்குள் அடக்கம். #திருமந்திரம் |
நலம்பல காலந் தொகுத்தன நீளங் குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும் பலம்பல பன்னிரு கால நினையும் நிலம்பல வாறின் நீர்மையன் றானே. திரு - 2502 நலமான பலவற்றை காலந்தோறும் நடப்பிக்க தொகுத்தான் நீளும் குலங்கள் மற்றும் பலவண்ண குறிப்புகள் கூடும் பலம் பல வகுத்து பன்னிரு கால நினையும் நிலம் பல என்றாலும் நீர்மை என்றானே. பின்குறிப்பு – தொண்டர் என்ற அடியார்க்கே அனைத்தையும் வகுத்து அளித்தான் ஏகன். #திருமந்திரம் |
உகந்த ஒன்பதும் ஐந்தும் உலகம் பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி அகந்தெம் பிரானென்பன் அல்லும் பகலும் இகந்தன வல்வினை யோடறுத் தானே.திரு - 2501 ஏற்புடைய ஒன்பதும் நிலைத்த ஐந்தும் உலகத்தில் பகர்ந்த நாயகன் என்ற தலைமைப் பண்பை நாடி அகத்தே என் தலைவன் என்பான் அல்லும் பகலும். அப்படியான அடியார்களுக்கு இகழச் செய்யும் வல்லவினைகளை அடியோடு அறுத்தானே. பின்குறிப்பு – இயற்கை அருளியதை எண்ணி உள்ளம் மகிழ்ந்து கொண்டாடுபவனின் வல்வினை அறுபடும். #திருமந்திரம் |
முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந் தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுள பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத் தன்செயத வாண்டவன் றான்சிறந் தானே.திரு - 2500 மேலே சொல்லப்பட்ட ஒன்பது அபிமானிகள் பற்பல தத்துங்கள் சொல்லியிருப்பினும் அவைகள் எண்ணத்தாகாதவை என்பான் வேறு ஒருவரை பின்பற்றுதல் வீரம் இல்லை என்பான் திட்டமிட்டு தானாக செயல்புரிந்து கண்டவன் சிறந்தானே. பின்குறிப்பு – தத்துவ விளக்கம் கடந்து தானாக அனுபவத்தை தேடுபவரே சிறந்தவர். #திருமந்திரம் |
சிவமான சிந்தையிற் சீவன் சிதைய பவமான மும்மலம் பாறிப் பறிய நவமான அந்தத்தின் நற்சிவ போதந் தவமான மவையாகித் தானல்ல வாகுமே.திரு - 2499 சிவமான சிந்தையில் சீவன் சிதைந்தால் குற்றமான மூன்று மலங்கள் அழிந்து ஒழியும் ஒன்பது வகை முடிவில் நல்ல சிவ போதந் தவமாக அமைந்தால் நான் அல்ல எல்லாம் அவனே என ஆகும். பின்குறிப்பு – சிவ சிந்தை உள்ளவர் நான் என்ற ஆணவம் அழிக்கிறார். #திருமந்திரம் |
நவமாம் அவத்தை நன்வாதி பற்றிற் பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத் தவமான சத்திய ஞானப் பொதுவிற் றுவமார் துரியஞ் சொருபம தாமே.திரு - 2498 ஒன்பதாகும் அவத்தை நன்கு உணர்ந்திட குற்றமான மலங்குணத்தின் பற்றை விட்டு பற்ற அரிதான தவத்தை சத்திய ஞான பொதுவில் பற்றுபவர் துரியஞ் சொருபத்தை அடையலாம். பின்குறிப்பு – குற்றம் கலைந்து தவத்தை பற்றினால் ஏகனை அடையலாம். #திருமந்திரம் |
தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன் நற்பத விராட்டன்பொன் கர்ப்பனவ் யாகிர்தன் பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன் பொற்புவி சாந்தன் பொருதபி மானியே.திரு - 2497 தொன்மையான பதம் 1.விசுவன், 2. தைசதன், 3.பிராஞ்ஞன், நல்ல பதம் 4. விராட்டன், 5. பொன்கருப்பன், 6. விகிர்தன், அடுத்த பதம் 7.இதையன், 8. பிரசாபத்தியன் புவியை சார்ந்த 9. சாந்தன் என பொருந்துவது அவரவர் அபிமானத்தாலே. பின்குறிப்பு – அபிமானத்தால் பெற்ற பெயர்கள் ஒன்பது. #திருமந்திரம் |
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும் வென்று மிருந்து விகிர்தனை நாடுவர் சென்றும் இருந்தும் திருவடை யோரே.திரு - 2496 ஒன்றாகவே இருந்ததும் இரண்டாகவும் ஆனாதும் ஒருங்கிய காலத்து நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும் வென்று இருந்து விகிர்தனே நாடுவர். சென்றாலும் இருந்தாலும் திரு உள்ளவர்களே. பின்குறிப்பு – எந்நிலையிலும் இறை தேடல் உள்ளவர் உணர்வார் இறையை. #திருமந்திரம் |
ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல் ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப் பூவின்றிச் சூடான் புரிசடை யோனே. திரு - 2495 ஊற்றாக இருப்பதற்கு மாற்றாகவும் மாறி உயர்ந்த உச்சியின் மேலும் ஆறுபோல் இல்லாமல் பாயும் அருங்குளம் ஒன்று உண்டு. சேற் இன்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப் பூவின்றிச் சூடான் புரிசடையோனே. பின்குறிப்பு – உபதேசப் பொருள் இல்லாமல் அவனை அறியமுடியாது. #திருமந்திரம் |
புரியும் உலகினிற் பூண்டவெட் டானை திரியுங் களிற்றொடு தேவர் குழாமும் எரியு மழையும் இயங்கும் வெளியும் பரியுமா காசத்திற் பற்றது தானே. திரு - 2494 ஆட்சி புரியும் உலகினில் அறிந்து பூண இயலாதவனை திரியும் யானைகளுடன் தேவர் கூட்டம் எல்லாம் தேடுகின்றன. வெப்பமும் மழையுமாய் வெளியில் இயங்கும் வெளிப்பட்ட ஆகாசத்திற்கு பற்று அதுவே. பின்குறிப்பு – அறியமுடியாமல் இருப்பினும் அவனே எல்லாமாய் வெளிப்படுகிறான். #திருமந்திரம் |
பல்லூழி பண்பன் பகலோன் இறையவன் நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள் செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள் அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே.திரு - 2493 பல ஊழிகள் பண்பட்டவன் பகலோன். இறையவன் நல்ல ஊழி ஐந்திலுள்ளே நின்று மேலும் செல்லும் ஊழிகள் ஊடே உச்சியாய் ஒன்றாய் நிற்பவன் பகவனே. பின்குறிப்பு – ஊழிகள் பல ஆயினும் ஒன்றாக நிலைப்பவன் இறையே. #திருமந்திரம் |
ஏழுஞ் சகளம் இயம்பு கடந்தெட்டில் வாழும் பரமென் றதுகடந் தொன்பதில் ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில் தாழ்வது வான தனித்தன்மை தானே.திரு - 2492 ஏழு சக்கரம் முழுவதும் செயல்படும் எட்டவதாகிய உடலில் வாழும் பரம் என்பது உடலின் ஒன்பதாவது இடத்தில் ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில் தாழ்வதுவான தனித்தன்மை தானே. பின்குறிப்பு – உடலில் வெளிப்பட்டாலும் எளிமையதாகவே பரம் இருக்கிறது. #திருமந்திரம் |
திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும் வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே.திரு - 2491 திசைகள் எட்டும் சென்றடையும் தேர் எட்டும் துணையாகும் தேவதை எட்டும் என வகை எட்டுமாய் நின்ற ஆதிப்பிரானை வகை எட்டுடன் நான்கும் என அங்கே நிறைந்து முழுவதுமாய் உள்ளே நின்று உதிப்பதற்கே. பின்குறிப்பு – எத்திசையில் தேடினும் உள் நின்ற இயங்குவதால் ஆதிபிரானை அடையலாம். #திருமந்திரம் |
ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவிமுலைக் கொண்பனை யாளொடும் வேறே யிருக்கும் விழுபொருள் தானே. திரு - 2490 ஆறு அருவி குளம் என வழுங்கும் ஒன்று நம்மிடத்தில் உண்டு ஒரு நூறு அளவு சிவகதி நுண்ணியதின் வண்ணம் கூறே பிரிந்து உண்மை விளங்கும் குவந்த முலைக் கொண்பனையாள் உடன் வேறே இருக்கும் விழுப் பொருள் தானே. பின்குறிப்பு – உபதேசப் பொருளை சிவகதியால் அடைய ஈசனை உணரலாம். #திருமந்திரம் |
மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும் விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர் எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற் பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே.திரு - 2489 மொட்டாக இருந்தபடி அலரும் தாமரை மூன்று உள்ளன. அந்த மூன்றில் விட்டத்தில் அலர்கின்ற சோதி விரிசுடர் எட்டு அலருள்ளே இரண்டு அலர் உள்ளுறிற் பட்டு அலர்கின்ற ஓர் பண்டங் கனாவே. பின்குறிப்பு – உபதேசப் பொருளின் உள்வட்டத்தின் கவனத்தால் உண்மையை அறியலாம். #திருமந்திரம் |
ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும் மருங்கிய மாயா புரியத னுள்ளே சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே. திரு - 2488 ஒட்டு மொத்தமாக இருக்கும் பூவிற்கு இதழ் எட்டாகும். மாறும் மாயா புரிந்துக் கொள்வமற்கு ஏற்ப சுருங்கிய தண்டின் சுழுனையின் ஊடே ஒருங்கிய சோதியை ஒத்திசைந்து எழம் உய்த்தே. பின்குறிப்பு – எட்டு இதழ் தாமரைப் போன்றது பூவுலகம். #திருமந்திரம் |
உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு மதிக்கும் குபேரன் வடதிசை யீசன் நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே. திரு - 2487 நடு நின்று உதிக்கும் இந்திரன் 2,அங்கி, 3, யமன், 4,போற்றும் நிறுதி, 5,வருணன், 6,நல்வாயு, 7,மதிக்கும் குபேரன், 8 வடதிசை ஈசன் என திசைகள் தோறும் நிறைந்து நின்றாரே. பின்குறிப்பு – திசைகள் எட்டிற்கு ஏற்ப ஆற்றல் மாற்றம் அடைகின்றது. #திருமந்திரம் |
சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன் சுத்தாசுக் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர் முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச் சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.திரு - 2486 சித்தர் என்பவர் சிவத்தை கண்டவர் சீருடன் சுத்தம் ஆசுத்தம் என்ற தத்துவத்தை நன்கு அறிந்து அதில் ஈடுபடாமல் முத்திக்கு முத்தரமாய் இருக்கும் மூலத்தார் மூலத்து சத்தர் சதாசிவத் தன்மை உடையவரே. பின்குறிப்பு – உண்மை அறிந்தவர் சிவத்தின் தன்மையுடன் இருப்பர். #திருமந்திரம் |
பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட் டிதமுற்ற பாச இருளைத் துரந்து மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே.திரு - 2485 வார்த்தையால் மூன்று என முத்தியை வரையறுப்பதை கைவிட்டு முற்றவிடாமல் தடுக்கும் பாச இருளைக் கடந்து மதமற்று நான் என்பதை மாற்றிவிட்டு அங்கே திடமுடன் இருப்பவர்கள் சிவசித்தர் ஆவார். பின்குறிப்பு – உள்ளதை உள்ளபடி அறிந்து மதம் கடந்தவர் சிவசித்தர். |
மாமதி யாமதி யாய்நின்ற மாதவர் தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந் தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக் காமல மற்றார் அமைவுபெற் றாரே.திரு - 2484 சிறந்த அறிவால் நிலைத்த அறிவு பெற்ற மாதவத்தவர் தூய அறிவாகும் அடுத்தவருக்கும் வழிகாட்டும் சுடர் போன்ற பரமானந்தம் தாமதிக்காமல் யாவருக்கும் அமைதி உண்டாக்கி மலம் அற்றவர் அமைதி பெற்றாரே. பின்குறிப்பு – யோகி தானும் அமைதி பெற்று அடுத்தவருக்கும் அமைதி வழங்கி பரமானந்தம் என்ற அறிவை பெற்றவர் ஆவார். #திருமந்திரம் |
ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந் தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுடண் டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு வானகஞ் செய்யு மறவனு மாமே.திரு - 2483 உண்டாகும் புகழும் வாய்த்த ஞானமும் சேர்த்த அனுபவமும் இருக்கும் சின்ன அறை உண்டு அதில் ஒன்றி உணர்வு செய்பவர்க்கு வானகம் செய்யும் மறவன் என்று ஆகுமே. பின்குறிப்பு – திருவடி உணர்வால் வானவர் மறவன் ஆகலாம். #திருமந்திரம் |
நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண் மூடிக்கண் டேனுல கேழுங்க்ண் டேனே.:இரு - 2482 நேசிக்கின்றேன் என்தன் உள்ளே நேராக இருக்கும் நந்தியை. உள்ளே புகுந்த ஆற்றல் பெற்றவர்கள் கூட உணரவில்லை. தனக்குள் கண்டவன் கோலங்கன். எனக்குள் மூடிக் கண்டேன் உலகம் எழவதைக் கண்டேனே. பின்குறிப்பு – தனக்குள் மட்டுமே தலைவனை அறிய முடியும். #திருமந்திரம் |
போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி ஏற்றியே தென்றும் எறிமணி தான்அகக் காற்றின் விளக்கது காயம் மயக்குறும் அற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.திரு - 2481 போற்றி என்றேன் எனது தந்தையின் பொன்னான சேவடி ஏற்றியபடியே என்றும் எறிமணிதான் உள் எழும் அகக்காற்றின் விளக்கது உடல் மயக்கத்தில் விழும் பொழுது அதை இல்லாதபடி செய்து மாறுவதை கண்டேனே. பின்குறிப்பு – யோக பயிற்ச்சியால் மயக்கம் அறுபடும். #திருமந்திரம் |
ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன் பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன் கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன் பொன்றாத போது புனைபுக ழானே.திரு - 2480 ஆதாரமான ஒன்றாய் உலகுடன் வளர்வதற்கு எல்லாம் பரந்தவன் அதன்பின் அதற்கு அருள் செய்து பேரருள் உடன் ஆள்பவன். அழுக்கற்ற மனம் கொண்டவர் கல்வியில் நல்லவன். போற்ற மறுத்தாலும் பெய்யற்ற புகழ் உடையவனே. பின்குறிப்பு – இறை என்றும் புகழின் உச்சியில் இருப்பதே. #திருமந்திரம் |
விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக் கண்ணற வுள்ளே கருதிடின் காலையில் எண்உற வாசமுப் போதும் இயற்றிநீ பண்ணிடில் தன்மை பராபர னாமே.திரு - 2479 வேற்று கிரகத்தாரும் அறிவு கொண்டு அறியமுடியாதவனை கண்ணறவுள்ள கருத்தை காலையில் எண்ணிக்கையுடன் உறவாக முன்று பொழுதும் வகைப்படுத்தி நீ பயின்றால் பராபரனாகும் தன்மை பொறுவாய். பின்குறிப்பு – நற்பயிற்சியால் இறைத்தன்மை அடையலாம். #திருமந்திரம் |
நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும் எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப் பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை விண்அறி வாளர் விரும்புகின் றாரே. திரு - 2478 நுட்பமான அறிவாகவும் உலகமாகவும் உலகமாய் எழுவதற்கும் எண்ணத் தகுந்தபடி நின்ற என் தந்தை தலைவன் தன்னைப் பண்புடன் அறிபவனை பற்றும் மனிதரை விண் அறிவாளர் விரும்புகின்றாரே. பின்குறிப்பு – இறை உணரும் ஒருவரை தேவர்களும் விரும்புவார்கள். #திருமந்திரம் |
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும் வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுவந்து ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே.திரு - 2477 நின்றபடியும் இருந்தபடியும் கிடந்தபடியும் அழுக்கற்றவனை ஒன்றும் பொருள்கள் பற்றி உரைப்பவர்கள் பலராக இருப்பினும் ஐம்புலன்களை வென்று விரைந்து பிணக்கறுத்து ஒன்றே என உணரும் ஒருவர் சிறந்தவர் ஆவார். பின்குறிப்பு – பேசுபவர்கள் பலர் உணர்பவர்கள் மட்டுமே சிறந்தவர்கள். #திருமந்திரம் |
என்னிலும் என்னுயி ராய இறைவனைப் பொன்னிலும் மாமணி யாய புனிதனை மின்னிய எவ்வுய ராய விகிர் தனை உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே.திரு - 2476 என்னை கடந்தும் என் உயிராகவும் இருக்கும் இறைவனை பொன்னிலும் மாமணியாகிய புனிதனை வெளிப்பட்ட எல்லா உயிர்களாக விரிந்த விகிர்தனை உணர்ந்திட உணர்த்தும் உணரும் வகையாலே. பின்குறிப்பு – உணரும் வகை அறிந்தால் இறையை உணரலாம். #திருமந்திரம் |
பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும் இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில் கணம்பதி னெட்டும் கழலடி காண வணங்ககெழு நாடி அங்கு அன்புற லாமே. திரு - 2475 மறுக்க வேண்டாம் வாழும் பெருமை கொண்ட பூமி முழுவதும் இணக்கமுடன் எம் ஈசனே ஈசன் என்று உணர்ந்து கணம் பொருந்து பதியை எட்டும் கழலடி காண அதை வணக்கமுடன் தொழுது நாடி அன்புறலாமே. பின்குறிப்பு – இறை மறுக்க வேண்டாம். உணர்த்த ஒரு வழியே திருவடி. #திருமந்திரம் |
கருதலர் மாளக் கருவாயில் நின்ற பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால் தருவலர் கேட்ட தனியும்ப ராமே. திரு - 2474 கருத்து முரண்பட்டவரை அழிக்க கருவாயில் உளவு செய்வது மடமையான செயலே மருவு செய்து சரியற்ற தவம் புரிவது தனிப்பட்ட தன்மையை ஒழிக்கும் தனி தேவர் ஆவர். பின்குறிப்பு – திரித்து செய்யும் தவம் தனிமைபடுத்தி பெருமையானவர் போல் மாயத் தோற்றம் தரும். #திருமந்திரம் |
கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக் கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே அருந்தர அலைகடல் ஆறசென் றாலே. திரு - 2473 கடுமையான தாள் கொண்ட கருடன் தன் விருப்பத்தில் பறக்க கடுமையான பயத்தில் கரும்பாம்பு பயந்து நீங்க பெருந்தன்மே பேசும் முட்டாள்களை நீ ஒழி நெஞ்சே அருமையான கடலில் ஆறுகள் சேருவது எவ்வளவு உறுதியோ அவ்வளவு உறுதி உன்னைப் போல் அவரும் உண்மை உணர்வது. பின்குறிப்பு – முட்டாள்கள் உண்மையானவனை கண்டு அஞ்சுவது நிச்சயம். அவரும் உண்மையை ஒருநாள் சந்திப்பார்கள். #திருமந்திரம் |
பிறையுள் கிடந்த முயலை எறிவான் அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக் கறைமணி கண்டனக் காண்குற மாட்டார் நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே.திரு - 2472 பிறை நிலவால் நிழலாக உண்டாகும் முயலை வெட்ட தன் இடுப்பு வாளை உருவுபவர் போல் கறைமணி கண்டனக் காண்டு உணர மாட்டாதவர்கள் நிறை அறிந்தவராக காட்டிக் கொள்வார்கள் நெஞ்சம் தூய்மை இல்லாதவர்கள். பின்குறிப்பு – திருவடி உபதேசம் அறிந்து உண்மை உணராமல் உலறுபவர் நெஞ்சம் வஞ்சனை மிகுந்தது. #திருமந்திரம் |
பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த் திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன் கரைகண் டானுரை அற்ற கணக்கிலே.திரு - 2471 ஓசையான பரையின் விரிவால் பரத்துடன் ஏகமாய் திரையின் நின்ற தெளிந்த நீர் போல் உற்று உரை உணர்ந்து ஆரமுது ஒப்ப உணர்ந்தேன் கரை கண்டவர் உரை சொல்லாத கணக்கிலே. பின்குறிப்பு – உணர்ந்தவர் உரைகடந்த உண்மையை அனுபவிக்கிறார். #திருமந்திரம் |
வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப் போய் ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத் தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே.திரு - 2470 கைவரப்பட்ட உபசாந்த வாதனை உள்ளே போய் ஏய்த்த சிவமாக ஆதலின் சினாந்தம் அனுபவித்து மோனச் சுகானுபவத்துடன் ஆராய்ந்து தீர்க்கமாக ஆனது பத்துமே. பின்குறிப்பு – உபசாந்தம் பத்து அவத்தையை அழிக்கும். #திருமந்திரம் |
ஆறாதுஅமைந்துஆண வத்தையுள் நீக்குதல் பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி கூறாத சாக்கிரா தீதம் குருபரன் பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே.திரு - 2469 அமைநியடையாமல் இருக்கும் ஆணவ அவத்தையுள் நீக்குதல் பேறான தன்னை அறிதல் அதன்பின் தீர்கமான சுத்தி. சொல்லமுடியா சாக்கிர அதீதம் குருபரன் பறாம் வியாத்தம் தருவது உபசாந்தம். பின்குறிப்பு – ஆணவம் அழித்து தன்னை அறிந்து சுத்தமாக்க வல்லது உபசாந்தம். #திருமந்திரம் |
அன்ன துரியமே ஆத்தும சுத்தியும் முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத் தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே. திரு - 2468 உணர்ந்த துரியமே ஆத்தும சுத்தி முன்னம் உணர்ந்த சாக்கிர அதீதத்தில் புரியும் பரங்காட்சி ஆவது உடன் இணைந்து தன்னில் வியாத்திதனில் உபசாந்தம். பின்குறிப்பு – சாக்கிர அதீதத்திலும் துரியத்திலும் பெற்ற அனுபவமே உபசாந்தம். #திருமந்திரம் |
காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள் காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி காரிய காரண வாதனைப் பற்றறப் பாரண வும் உப சாந்தப் பரிசிதே. திரு - 2467 காரியங்கள் உண்டாகும் மாயையின் செயல்பாட்டால். காரணம் உண்டாகும் கடுவெளி செயல்பாட்டால் காரிய காரண வாதனைப் பற்றை அறுத்திட பார் என விளக்குவது உபசாந்தப் பரிசு. பின்குறிப்பு – உபசாந்தம் இறை உணர வாய்ப்பளிக்கும். #திருமந்திரம் |
முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல் சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே. திரு - 2466 முத்திக்கு ஆதாரம் முதலான ஒன்னின் ஞானமே. பத்திக்கு ஆதாரம் பணிந்து உகந்து பற்றுவதே. சித்திக்கு ஆதாரம் சிவபரம் தானாக ஆதல். சத்திக்கு வித்து தனது உபசாந்தமே. பின்குறிப்பு – நிதானமே நிறைவுக்கு வழி. #திருமந்திரம் |
காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு காரணம் ஏழில் கலக்கும் பரசிவன் காரிய காரணம் கற்பனை சொற்பதப் பாரறும் பாழில் பராபரத் தானே.திரு - 2465 காரியம் உண்டானால் கலக்கும் கடும்பசு காரணம் உண்டானால் கலக்கும் பரசிவன் காரிய காரணம் கற்பனை சொல்பதம் என்ற உலக வழுக்குகள் பாழாகினால் பராபரத் தானே. பின்குறிப்பு – உலக வழுக்கு என்ற அர்தமற்றதை விலக்கினால் பராபரத்தானாகலாம். #திருமந்திரம் |
உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று அயிர்ப்புஅறும் காரணோ பாதி விதிரேகத்து உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே.திரு - 2464 உயிர்க்கு உயிராகி ஒழிவற்று அழிவற்று அயிர்ப்பும் அறும் காரண உபாதி செயல் அறிய உயிராகும் ஈசன் உபமித்தால் அன்றி வியக்கத்தக்க ஆணவம் விடுவது இயலாது. பின்குறிப்பு – ஈசன் அருள் இன்றி ஆணவம் அழியாது. #திருமந்திரம் |
ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு வேறாய் நனவு மிகுந்த கனாநனா ஆறாறு அகன்ற கழுத்தி அதில் எய்தாப் பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.திரு - 2463 முப்பத்தாறு தத்துவ காரியத்தால் வரும் உபாதி அகன்றிட வேறாய் இருக்கும் நனவு மிகுந்த அறியாத நனவு முப்பத்தாறு அகன்ற சுழுத்தி அதில் அடையமுடியாத நிலையில் நிலைக்கும் உயிர் தொன்மை பதம் பேசிட அருளும். பின்குறிப்பு – தொன்மையான பதத்தால் உபாதிகள் அகற்றலாம். #திருமந்திரம் |
செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும் பற்றும் பரோபதி ஏழும் பகருரை உற்றிடும் காரிய காரணத் தோடற அற்றிட அச்சிவ மாகும் அணுவனே. திரு - 2462 மாறிடச் செய்யும் சீவ உபாதியால் திறன் வளரும் பற்று கொடுக்கும் பரோ உபாதியால் வளரும் பகருரை நிலைத்திடும் காரிய காரணத்தோடு அறவே அற்றிட அச்சிவமாகும் அணுவான ஒன்றே. பின்குறிப்பு – சீவ உபாதி பரோபதி என்ற இரண்டால் வரும் காரிய காரணம் அகற்றிட சிவமாகலாம். #திருமந்திரம் |
உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும் உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப் பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை உள்ளமும் இல்லை உருவில்லை தானே. திரு - 2461 உள்ளமே உருவம் என்றும் உருவமே உள்ளம் என்றும் உள்ள பரிசை அறிந்தவர்களுக்கு பள்ளமும் இல்லை இடர்பாடுகள் இல்லை உள்ளமும் இல்லை உருவமும் இல்லை தானே. பின்குறிப்பு – உணர்ந்தவர் உள்ளம் உண்மையின் இல்லம். #திருமந்திரம் |
ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு வேறா கயபரை யாவென்று மெய்ப்பரன் ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ தேறாச் சிவாய நமவெனத் தேறிலே. திரு - 2460 முப்த்தாறு தத்துவங்களை நீக்கி நம என்ற வாதத்தை அகற்றி வேறாக இல்லாத பரையா என்று மெய்பரன் உணர இரண்டு கூறாக இருக்கும் வாசியில் கூட்டும் அதுவன்றோ தேறாதவர்களும் சிவாயநம எனத் தேறலாம். பின்குறிப்பு – வாசியில் சிவாயநம என கூறி தேர்ச்சி பெறலாம். #திருமந்திரம் |
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர் அரிய பரம்பரம் என்றே துதிக்கும் அருநிலம் என்பதை யார்அறி வாரே. திரு - 2459 துரியத்தில் அடங்கிவிடும் சொல்களால் அறுபடும் பாழை அரிதான பரம்பரம் என்பர்கள் ஆகாமாட்டாதவர்கள். அரிய பரம்பரம் என்றே துதிக்கும் அருநிலம் என்பதை யார் அறிவார்களோ. பின்குறிப்பு – பரம்பரத்தை யார் அறிய வல்லவர்களோ. #திருமந்திரம் |
எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும் பதியெனும் நந்தி பதமது கூடக் கதியெனப் பாழை கடந்து அந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.திரு - 2458 எதிர்ப்பு இன்றி இயல்பாய் அறத்துடன் நாளும் எருதையும் மனம் உவந்து மதிக்கும் பதி என்று நந்தி என பதமாக்கியதை அறிந்து சுவாசம் போல் பாழை கடந்து அந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே. பின்குறிப்பு – எருதை நந்தி என அழைப்பதின் நோக்கம் அறிந்து என் கற்பனை கடந்து உண்மையில் ஒடுங்கினேன். #திருமந்திரம் |
மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன் சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன் ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத் தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.திரு - 2457 மாயப்பாழ் சீவன் என்றும் வியோமப்பாழ் பரன் என்றும் பிறக்கும் முப்பாழ் சிவசத்தியில் சீவன் என ஆராய வியாப்தம் என்னும் முப்பாழும் தூய சொரூபத்தில் முடிவாகுமே. பின்குறிப்பு – மாய வியோம வியாப்த என்ற முப்பாழும் தூய சொரூபத்தில் முடிவுக்கு வரும். #திருமந்திரம் |
காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக் காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக் காரிய காரண வாதனை கண்டறும் சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே. திரு - 2456. செயல்களால் ஏழவது கண்டவுடன் அறுபடும் மாயப்பாழ் என்பதை விட. கரணங்களால் எழுவது கண்டவுடன் அறுபடும் போதப்பாழ் விட. செயல்கள் மற்றும் காரணங்களால் உண்டாகும் வேதனை கண்டவுடன் அறுபடும் சீர் உபசாந்தம் என்ற முப்பாழ் விட தீர்வுகள் எற்படும். பின்குறிப்பு – அர்தமற்றதை விட்டிட துன்பங்கள் தொலையும். #திருமந்திரம் |
தாமதம் காமியம் ஆசித் தகுணம் மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடு ஆம்அறும் மவ்வும் அவ் வாய்உடல் மூன்றில் தாமாம் துரியமும் தொந்தத் தசியதே.திரு - 2455 தாமதித்தல் ஆசைப்படல் அலட்சியம் செய்தல் மாமலம் மூன்றும் அகார உகாரத்துடன் மவ்வும் என உடல் மூன்றில் உண்டாகும் துரியமும் தொந்தத் தசியதே. பின்குறிப்பு – தேவையும் தேவையற்றதும் தொந்தத் தசியால் உண்டாகும். #திருமந்திரம் |
ஆகிய அச்சோயம் தேவதத் தன்இடத்து ஆகிய வைவிட்டால் காயம் உபாதானம் ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறிவு ஆகிய சீவன் பரசிவன் ஆமே. :இரு - 2454 வாசியாகிய அச்சோயம் தேவதத்தன் என்ற காற்றாக மாறி செயல்பட காயம் உபாதானமாகும். இப்படி ஏகும் தொந்தத்தசி என்ற மெய்யறிவு பெற்ற சீவன் பரசிவன் ஆமே. பின்குறிப்பு – தச வாயுவில் தேவதத்தனாக வாசியில் மாற்றியவர் பரசிவன் ஆவார். #திருமந்திரம் |
தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம் அம்புரை தன்னில் உதிக்கும் அசிபதம் நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம் உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே. திரு - 2453 தொன்மையான பதத்தின் மாயையுள் தானாகவே தோன்றும் தற்பதம் அதற்கு புரையாக உதிக்கும் அசிபதம் நம்பிக்கையினால் உண்டாகும் அமைதியில் உணரும் அந்த வாக்கியம் தேவர்கள் உரைத்த தொந்தத்தசி என்ற வாசியாமே. பின்குறிப்பு – மன அமைதிக்கும் வாசிக்கும் உகந்த பதமே தொந்தத்தசி. #திருமந்திரம் |
வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து அதற்கு அடிமை அடைந்து நின் றானே. திரு - 2452 வார்த்தையை சிவத்திடை வைத்து மதி சொருப ஆனந்தத்தில் கூட்டி பிரணவமாம் உபதேசத்தை நிருபித்த இதயத்து வீட்டிடை மெய்யுணர்ந்து அதற்கு அடிமையாக அடைந்து நின்றானே. பின்குறிப்பு – பிரம்ப உபதேசம் அறிந்தவர் அதற்கு அடிமையாக நிற்பார்கள். #திருமந்திரம் |
தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே. திரு - 2451 பழைமையான பதத்தை வாசிக்காக மாற்றிட முறையாக இரண்டு ஐந்தாக மதிப்பிட்டு முடிவில்லாத அந்த வாக்கியத்தை உந்து முறையில் சிவன் முன் வைத்து ஓதிடே. பின்குறிப்பு – வாசிக்கு வார்த்தையாக தொன்மையாத பதத்தை பாவிக்கலாம். #திருமந்திரம் |
தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி தொந்தத் தசிமூன்றில் தொல்கா மதமாதி வந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின் இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே. :இரு 2450 தொன்மையான வார்த்தைகள் மூன்றில் காமியம் என்ற ஆசைப்படல், ஆணவம் என்ற மதம், மாயை என்ற வந்த மலம் ஆகியவற்றின் குணம் குறைய சிவம் தோன்றின் நிலவின் முன் இருள் ஏகுதல் போல் ஆகும். பின்குறிப்பு – வார்த்தையை மட்டுமே அறிந்து மூன்றுவித மலத்தால் செயல்படாது ஒழிய அனுபவம் வேண்டும். #திருமந்திரம் |
தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம் தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றலே நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின் சொற்பத மாகும் தொந்தத் தசியே. :இரு - 2449 தற்கால வார்த்தை பழைமையான வார்த்தை தானாகவே உண்டான அசிபதம் என்ற தொன்மையான மூன்றும் துரியத்தில் தோன்றுவதே. உயிர் பரன் நிகழ்சிவ என மூன்றின் சொற்பதமாகும் தொந்தத் தசியே. பின்குறிப்பு – நானே அவன், அவனே நான், நானே நான் என மூன்றாக வார்த்தைப் படுத்தலாம். #திருமந்திரம் |
முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக் கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக ஒக்குமது உன்மணி ஓதுஉள் சமாதியே. திரு - 2448 மூன்று காரணங்களால் உண்டாகும் சுவாசத்தை தீர்க்கமாக அறிந்து அதன் காரணம் என்ன என தந்தவன் நந்தி. அதன் மிகுதியான மனோன்பணி வேறே தனித்து ஏகமாக ஒக்கும் அதை உன்மணி என ஓதுவதால் உள்ளே சமாதி ஆகிறது. பின்குறிப்பு – சுவாச கதிகள் அறிந்து திருவடி ஓதுவதே உள்சமாதி. #திருமந்திரம் |
ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பி வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத் தெளியத் தெளியும் சிவபதம் தானே. திரு - 2447 வெளிச்சமாவதை வெளிச்சமாக செய்து ஓம் என்று எழுப்பி காற்றாவதை கற்றாக செய்து அதன் அனுபவத்தை வாங்கி வெளியாவதை வெளியாக்கிடச் செய்து மேல் எழ வைத்துத் தெளிவதற்கு தெளியும் சிவபதம் தானே. பின்குறிப்பு – விசாலப் பார்வையும் விரிந்த காற்றுமாக வாய்க்கச் செய்து பெறும் அனுபவமே சிவ பதம் உணர்த்தும். #திருமந்திரம் |
இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன் கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும் திடமது போலச் சிவபர சீவர் உடனுரை பேதமும் ஒன்றென லாமே.திரு - 2446 இடப்பக்க இருக்கும் ஒரு மூன்றில் இயைந்த ஒருவன் பெற்ற உறுக்களை வேறாகக் காணும் திடம் போலவே சிவபர சீவர் உடனுரை பேதமும் ஒன்றேனலாமே. பின்குறிப்பு – காட்சிகள் நின்று திரிவதைப் போலவே சிவபர சீவர்களுக்கும் பேதம் உண்டாகிறது. #திருமந்திரம் |
உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால் அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ் விடம்தரு வாசலை மேல்திற வீரே. திரு - 2445 விரிந்த செந்தாமரையின் உள்ளே ஊறும் சோதி மலர்ந்த செந்தாமரை நாதம் உண்டானால் அடையும் பயோதரி மூடி அடைத்த அவ்விடம் தரும் வாசலை மேல் திறவீரே. பின்குறிப்பு – ஆயிரம் தாமரை மலர் விரித்து நாத அனுபவம் பெற மேலை வாசலை திறக்க வேண்டும். #திருமந்திரம் |
உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால் அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ் விடம்தரு வாசலை மேல்திற வீரே. திரு - 2445 விரிந்த செந்தாமரையின் உள்ளே ஊறும் சோதி மலர்ந்த செந்தாமரை நாதம் உண்டானால் அடையும் பயோதரி மூடி அடைத்த அவ்விடம் தரும் வாசலை மேல் திறவீரே. பின்குறிப்பு – ஆயிரம் தாமரை மலர் விரித்து நாத அனுபவம் பெற மேலை வாசலை திறக்க வேண்டும். #திருமந்திரம் |
கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்ட நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதும் சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே. திரு - 2444 கல்லொளி மாநிறம் என வடிவங்கள் கதிரால் உருவாகும் நல்ல மணி ஒன்றில் நாடி ஒண்றிட முப்பதும் என்ற சொல் அறுபடும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து அல்லல் அறுக்கும் முத்திர அந்தந்து அனுபூதியே. பின்குறிப்பு – முன்றேன விரிந்து இருப்பது ஒன்றே என உணர்வதே அனுபூதி. #திருமந்திரம் |
மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து மணிஎன வாய்நின்ற வாறுஅது போலத் தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப் பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே. திரு - 2443 மணி ஒளி வடிவம் கொண்டு வகைப்படும் அப்படி மணி என நின்றபடி தணி முச்சொருபம் சத்தி ஆதி சார்ந்து என பணிவித்த பேர் நந்தி பாதம் பற்றாயே. பின்குறிப்பு – முச்சொருப இலக்கணம் அறிவித்த குருவை போற்றுவேன். #திருமந்திரம் |
பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து அருவாய் உருவாய் அருவுரு வாகிக் குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே. திரு - 2442 பெருவதற்கு வாசலாகிய முதல் என்ற எண்ணத் தகுந்தவற்றின் பேதமே பேதித்து அருவாய், உருவாய், அருஉருவாய் இருந்து குருவாய் வரும் சத்தி தலைமை உயிர் என்ற பன்மையுடன் உருவாய் உடனிருந்து ஒன்றாய் அன்றமே. பின்குறிப்பு – உருக் கொண்டு வந்த உயிர்களின் தலைவனாய் குருவாய் அருள்வது அரு உரு அருஉரு என மூன்றாய் உள்ளது. #திருமந்திரம் |
உலகம் புடைபெயர்ந்து ஊழியம் போன நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன் அளவும் பெருமையும் ஆரறி வாரே. திரு - 2441 உலகம் சற்று சிதைந்து தொழிற்பட சென்ற நிலா மற்றும் சுடரொளி மூன்றும் ஒன்றாக பரவும் பரிசுடன் பான்மையுள் ஈசன் அளவும் பெருமையும் யார் அறிவார்களோ. பின்குறிப்பு – பூமியின் சிதைந்த நிலா மற்றும் சூரிய நட்சத்திரங்களின் வெளிச்சம் என பலவவை அற்புதம் உண்டாக்கிய ஈசன் அருளை யார் அறியாது இருப்பார்களோ? #திருமந்திரம் |
மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம் மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக் காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.திரு - 2440 மாளிகைகள் மூன்று உள்ளன முறைய அதை மூவர் இருப்பிடம் எனலாம். அந்த மூன்றினில் முப்பத்தாறும் உதிக்கும். மூன்றினில் உள்ளே முளைத்தெழும் சோதியை காண்டு அறிந்ததும் உடல்கள் கணக்கற்று அடைந்ததை அறியலாம். பின்குறிப்பு – திருவடியின் பெருமை இது. #திருமந்திரம் |
ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்து ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்கு ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே.திரு - 2439 ஒன்றிலிருந்து பிற ஒன்றாய் ஏறியபடியே மலம் ஐந்தையும் அடைந்து தெளிந்த ஞானச் சிவோகம் அடைந்திட்டு மாறும் முச்சொரூமத்து வீடுற்று அங்கு நிலைப்பதில் முன்னே வைத்தவை உண்மை செய்யுமே. பின்குறிப்பு – முன் செய்த தவத்தால் அனுபவம் கடந்த ஞானம் அருளப்படும். #திருமந்திரம் |
சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும் பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.திரு - 2438 செயல்களின் நேர்த்தியான சித்தியும் அமைதியின் உச்சமான முத்தியும் திண்சிவமாகிய சுத்தியும் மூன்று வித கருமங்களான முத்தீ தொலைக்கும் சுகானந்த சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும். எத்தனை துன்பம் என இல்லாமல் அத்தனையும் அறுத்த பெரும் பெருமானே. பின்குறிப்பு – சமாதியில் அத்தனை துன்பங்கள் அறுபட்டு போகும். #திருமந்திரம் |
சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத் தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத் துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச் சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.திரு - 2437 சிவம் என ஆகி மூன்று அழுக்குகளையும் மூன்று குணங்களையும் கடந்து சென்று தவமான மும்முத்தி என்ற தத்துவத்தில் ஐக்கியம் ஆகிய நெறி சோகம் என்பவர்க்கு சிவமான தேவர்களின் தலைவன் சிறந்தவன் தானே. பின்குறிப்பு – முத்தி பெற்றவர் சிவத்தை தலைமையாக ஏற்கிறார். #திருமந்திரம் |
ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும் ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும் ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்று ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே. திரு - 2436 அடுத்து என்ன ஆகும் என்பதை அறியாதவர்கள் உயிர் மேலும் பிறப்பை சந்திக்கும். அறியும் உயிர் அருளுடன் இருக்கும். அடுத்து ஆவது ஒன்றும் இல்லை உள்ளே வெளியே என எல்லாவற்றையும் கடந்து ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே. பின்குறிப்பு – முக்தி அடைந்தவர் பிறப்பை கடக்கவும், நிலைக்கவும், சிவனுடன் கலக்கவும் வாய்ப்பு பெறுகிறார். #திருமந்திரம் |
சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி ஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம் மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய் ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே. திரு - 2435 சீவன் தான் முழுமை அடையும் முக்தி, அதீதம் என்ற எல்லாம் கடந்த நிலை பரமுக்தி, ஒய்தபடி இருக்கும் துணைநிலை அமைதி சிவமுக்தி, ஆனந்தம் மூன்று என ஆனால் முத்தியும் மூன்றுவகை எனலாம். ஒருங்கிணைக்கும் ஒன்றானது தான் உள்ளும் நாத அந்தமே. பின்குறிப்பு – உயிர் அடங்கப் பெற்ற முக்தி, அதீத அனுபவ முக்தி, சாந்தம் அடைந்த முக்தி என மூன்றிலும் நாத அனுபவம் இருக்கும். #திருமந்திரம் |
தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்போல் நம்பிய மூன்றாம் துரியத்து நல்நாமம் அம்புலி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. திரு - 2434 பழைமையான வார்த்தை தனது வார்த்தை சொல்லப்பட்ட மூன்று துரியம் போலவே நம்பிய மூன்றாம் துரியத்து நற்பெயரை நிலவு மறையும் அதிசூக்கம் என்ற அடுத்த உண்மையை செம்பொருள் ஆண்டு அருள் புரியும் சீர்நந்தி அனுபவமாக்கினார். பின்குறிப்பு – துரியம் மூன்றை கடந்த செம்பொருளை அனுபவமாக்கினார் நந்தி. #திருமந்திரம் |
நனவின் நனவாகி நாலாம் துரியம் தனதுயிர் தெம்பதம் ஆமாறு போல வினையறு சீவன் நனவாதி யாகத் தனைய பரதுரி யந்தற் பதமே. திரு - 2433 நனவில் நனவாக இருக்கும் நான்காம் நிலையான துரியம் தனது உயர் பழைமியானது என்பதை உணர்வதைப் போல் வனைகளை அறிக்கும் சீவன் நனவில் நிற்க தான் உணரும் பரதுரியம் தன் பதமாகும். பின்குறிப்பு – நடைமுறை வாழ்வில் சரியான விழிப்பு நிலையே பரதுரியத்து அனுபவம் ஆகும். #திருமந்திரம் |
அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று செறிவாய மாயை சிதைத்துஅரு ளாலே பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலையறிந் தாரே. திரு - 2432 அறிவால் உண்டான அசத்து என்ற முப்பத்தாறு தத்துவங்களும் அகன்று செறிவுடன் இருக்கும் மாயை சிதைந்து அருளால் பிரியாத பேரருள் பெற்றவர் நெறியான அன்பர் அவர் நிலைத்திருந்தாரே. பின்குறிப்பு – அனுபவத்தால் நெறி மாறா நிலையுடன் நிலைத்திருக்கலாம். #திருமந்திரம் |
தொட்டே இருமின் துரிய நிலத்தினை எட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப் பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள் தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே. திரு - 2431 உணர்ந்து தொட்டபடி இருங்கள் துரியம் என்ற இடத்தினை. எட்டாதபடி இருக்கிறது என்று நின்று எட்டும் இறைவனை பட்டமாக அறிந்துக் கொள்வதால் பக்தியில் உதடுகள் அசைவது இல்லை. தட்டாது ஒழியும் தத்துவம் தானே. பின்குறிப்பு – உணரும் இறைமையை உணராது தத்துவம் செய்து படிப்பதால் பயன் இல்லை. #திருமந்திரம் |
ஈர்ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள் நேர்அந்த மாகநெறிவழி யேசென்று பார்அந்த மான பராபத்து அயிக்கியத்து ஓர்அந்த மாம்இரு பாதியைச் சேர்த்திடே.திரு - 2430 இரண்டு வகையில் பத்தாக இசையும் அவத்தையில் மூன்று துரியத்தில் நேரான முடிவாகும் நெறி வழியே சென்று முடிந்த முடிவான பராபத்து ஐக்கியத்தில் ஒரே முடிவாகும் இரு பாதியை சேர்த்திடச் செய்க. பின்குறிப்பு – விழுப்பு சொப்பனம் என இரண்டும் ஒர் அந்தமானதாகவே இருக்கிறது. #திருமந்திரம் |
அணுவின் துரியத்து நான்கும துஆகிப் பணியும் பரதுரி யம்பயில் நான்கும் தணிவில் பரமாகிச் சாரமுந் துரியக் கணுவில் இந் நான்கும் கலந்தார் ஐந்தே.திரு - 2429 அடையும் துரியத்தில் நனவு கனவு உறக்கம் பேருறக்கம் என்ற நான்கும் அதுவாகவே ஆகி பணியும் பரதுரியம்.பரதுரியம் பயில நான்கும் தணிந்து பரமாகிச் சார்ந்திட துரியம் அணுவில் இந்நான்கும் கலந்தார் ஐந்தே. பின்குறிப்பு – நான்கில் பரதுரியம் பயில்வதால் ஐந்தாம் நிலை அடைந்தவராகிறார். #திருமந்திரம் |
தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம் தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில் ஆனாப் பரபதம் அற்றது அருநனா வானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே.திரு - 2428 நான் என்பது விழித்த தானாம் நனவில் துரியமே தொம்பதம். தானாம் துரியம் நனவில் உண்டாகும் மூன்றில் பரபதம் அற்றது. அருமையாகும் நான் அவனான மேல் மூன்றில் துரியம் அணுகுமே. பின்குறிப்பு – நடைமுறை விழிப்பு நிலையில் துரியம் தான் அவனாதல் அணுகும். #திருமந்திரம் |
நனவாதி மூன்றினில் சீவ துரியம் தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான் நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம் இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே. திரு - 2427 நனவில் முதல் மூன்றானவற்றில் சீவ துரியம் தன் நனவு கடந்த ஆதி மூன்றினில் பரதுரியந்தான் நனவில் விழிப்பு நிலை மூன்றில் சிவதுரியம் எனப்படும். இது தொன்மைக்கும் அசி பதத்திற்கும் ஈடானதே. பின்குறிப்பு – நனவு கனவு உறக்கம் மூன்றில் சாக்கிரதை துரியம் துரியாதீதம் அனுபவத்தில் சிவதுரியம் என்ற தான் அவனாதல் விளக்குவது. #திருமந்திரம் |
மேருவி னோடே விரிகதிர் மண்டலம் ஆர நினையும் அருந்தவ யோகிக்குச் சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும் பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே. திரு - 2426 மேரு என்ற இடப்பக்க நாடிகளும் விரிகதிர் என்ற வலப்பக்க நாடிகளும் வாசியால் முழுமையாக நினையும் அருந்தவ யோகிக்குச் அவர் வழி நடப்பவர் செயல்கள் செய்ய சிவனருள் உண்டாகும் விலகுதல் வேண்டாம் மாறுபாடு இல்லைதானே. பின்குறிப்பு – உடலை கோயிலாக மாற்றிக் கொண்ட ஒருவற்கு உதவி அவர் வழி செல்வது நல்வழிப் படுத்தும். #திருமந்திரம் |
வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற தனியா இயதற் பரங்காண் அவன்தான் வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற வெளியாய சத்தி அவன்வடி வாமே. திரு - 2425 வெளி என்ற பரவெளி, கால் என்ற காற்று, கனல் என்ற நெருப்பு, அப்பு என்ற நீர், இதை தாங்கும் மண் என நின்று தனித்து இயங்கும் இவைகள் அதிலிருந்து வெளிப்படும் சத்தி அவன் வடிவமே. பின்குறிப்பு – பூதங்கள் இறை அம்சமே. #திருமந்திரம் |
பண்டை மறைகள் பரவான் உடலென்னும் துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக் கண்டு பரனும்அக் காரணோ பாதிக்கே மிண்டின் அவன்சுத்தம் ஆகான் வினவிலே. திரு - 2424 பழங்காலத்து வேத நூல்கள் விளக்கும் உடல் என்ற அறிவாளி உணர்த்தும் துரியாதீதத்தால் கண்டு பரனும் அந்த காரணமான அனுபவத்தானுக்கே. அதை படிப்பதால் படிப்பவன் சுத்தம் ஆகான் ஆழ்ந்து பார்த்தால். பின்குறிப்பு – வேத விளக்கம் சுய அனுபவம் இன்றி பயன்படாது. #திருமந்திரம் |
தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி சிற்பரம் தானே செகமுண்ணும் போதமும் தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்கு அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே. திரு - 2423 தானாகவே அருளும் தனிமையுடன் இருக்கும் பேரொளி சிறுமையுடன் உலகை வழிநடத்தும் போதமும் தொழில்படும் வார்த்தை தீர்பாக அமைந்து அழுகு பொருந்தும் சோதியில் புக அடுத்து ஒன்று இங்கு ஒப்பானது இல்லை தானே. பின்குறிப்பு – ஏகமானதை உணர்ந்தால் அதற்கு நிகரானது இல்லை என விளங்கும். #திருமந்திரம் |
வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில் ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம் பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய் ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே. திரு - 2422 சத்தியின் தன்மை வேறுபட்டதைப் போல் உணரும் இந்த உடலில் ஆறாவதின் உதவியால் அனைத்தையும் தத்துவமாக பார்க்கும். நிலைத்த பரவொளி தூண்டிட பிரகாசமாய் கூறுபட்டு உயிரைத் தூண்டிட உறகங்கும் மாயையே. பின்குறிப்பு – பேராற்றலால் உயிர் தூண்டப்பட்டு மாயையை உறக்கச் செய்யும். #திருமந்திரம் |
மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள் பாலிய விந்து பரையுள் பரையாகக் கோலிய நான்சுவை ஞானம் கொணர் விந்து சீலமி லாஅணுச் செய்திய தாமே. திரு - 2421 மேல் கீழ் சுற்றம் உடல் வாய் கண் நாக்கு மூக்கு என மாறிய விந்து சத்தி என்ற பரையுள் பரையாகக் வேண்டப்பட்ட நான் சுவை ஞானம் என கொடுக்கும் விந்து சீலமிலா அணுச் செயலாகிறது. பின்குறிப்பு – சிறபுடன் இருக்கும் யாவும் சத்தியின் சத்தியே. #திருமந்திரம் |
சத்தின் நிலையினில் தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல் உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய் நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே. திரு - 2420 வெளிப்பட்டு நிற்கும் சத்தின் நிலையில் நான் என பிரிந்து நிற்கும் சத்தியும் அதன் வெளிப்பாடாகவே நிற்கும் . தான் என ஆகும் உடல் செயல்பட முனைவதும் ஞானாதி பேதமாய் நித்தம் நடத்தும் நடகத் தன்மை வாய்ந்த நேயத்தே. பின்குறிப்பு – நான் என்பதும் நாடாக தனமைக் கொண்ட சத்தியின் வெளிப்பாடே. #திருமந்திரம் |
பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு நிரந்தர வளியொடு ஞாயிறு திங்கள் அரந்த அறநெறி யாயது வாகித் தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.திரு - 2419 ஒளியாகிய தற்பரன் பரந்தும் சுருங்கியும் உலகம் நீர் காற்று நிரந்தமான அழுத்த மண்டலத்துடன் ஞாயிறு திங்கள் என அற நெறியாகி தரந்த விசும்பொன்று தாங்கி நின்றானே. பின்குறிப்பு – எங்கும் வியாபித்து எல்லாவற்றையும் தாங்கி நிற்கிறான். #திருமந்திரம் |
என்னை அறிய இசைவித்த என்நந்தி என்னை அறிந்து அறி யாத இடத்துய்த்துப் பின்னை ஒளியிற் சொரூபம் புறப்பட்டுத் தன்னை அளித்தான் தற்பர மாகவே.திரு - 2418 நான் என்ற என்னை அறிய இசைந்த நந்தி என்னை அறிந்து நான் முன்னம் அறியாத இடத்தை அடையச் செய்து பிறகு ஒளி வடிவில் புறப்பட்டு தன்னை அளித்தான் தானே பரம் என ஆகவே. பின்குறிப்பு – என்னை நான் அறிய ஒளி வடிவில் உதவினார் நந்தி. #திருமந்திரம் |
வைச்ச கலாதி வருதத்து வங்கெட வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே அச்சம் அறுத்தென்னை ஆண்டவன் நந்தியே. -2417 உண்டாக்கிய கால மாற்றத்தால் வரும் கருத்து உருவாக்கங்கள் அழிந்து வைத்த இருமாயை வேறாக வேர் அறித்து உச்ச பரசிவமாம் உண்மை எனக்குள் ஒன்றவே அச்சம் அறுத்து என்னை ஆண்டவன் நந்தியே. பின்குறிப்பு – கசடு நீக்கி அச்சம் அழித்தவர் என் குரு. #திருமந்திரம் |
செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல் அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப் பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில் செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.திரு - 2416 செம்மை நிறம் முன் நின்ற மற்றவைகள் திரிந்து விடுவது போல் அந்த மெய் பரத்துடன் அணுவன் உள்ளிட பொய்மை உலகம் ஊழில் அழிந்து வெறுமையாகும். செம்மை சிவமேரு சேர்க்கும் கொடி ஆகும். பின்குறிப்பு – செம்மை நிறம் ஏனையவற்றை அழித்து வெற்றயை நிலை நிறுத்தும். #திருமந்திரம் |
அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம் பதியிற் பதியும் பரவுயிர் தானே.திரு - 2413 அதீதம் என்ற மனநிலைக்கு உட்பட்டு விடுபட்டவர் நந்தி. அதீதத்துக்கு உள்ளாகி அறிவில்லாதவர் ஆன்மா அறிவு பெற்று இருளை விட்ட மன்னுயிர் போன்றது பதியுடன் பதியும் பரவுயிர் ஆகும். பின்குறிப்பு – உச்சகட்ட அனுபவம் பெற்றவர் பதியுடன் பதிந்துவிடுகிறார். #திருமந்திரம் |
தற்கண்ட தூயமும் தன்னில் விசாலமும் பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத் தற்பரன் கால பரமும் கலந்தற்ற நற்பரா தீதமும் நாடுஅக ராதியே.திரு - 2412 தான் கண்ட தூய்மையும் தன்னில் விசாலமும் அடுத்து காணும் தூடணம் மற்றும் பிறழ்வு அடைந்து தற்பரன் கால பரமும் கலந்தற்ற நல்ல பர அதீதம் நாடுவதே விளக்கமாகும் அகராதி. பின்குறிப்பு – தூய்மை கண்டவர் தானே அகராதியாக விளக்கமடைகிறார். #திருமந்திரம் |
நனவில் கலாதியாம் நாலொன்று அகன்று தனியுற்ற கேவலம் தன்னில் தானாகி நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந் தனையுற்று இடத்தானே தற்பர மாமே.திரு - 2411 நடப்பு நிலை என்ற நனவில் ஐந்தையும் கலாதியால் அகற்றி தனிமை பட்ட கேவலம் தன்னில் தானாகி நினைவுகள் தூண்ட அகன்ற அதீதத்துள் நேயந் தன்னை அறிந்த இடமே தற்பரமாகும். பின்குறிப்பு – உள்ள யாவற்றையும் கடந்து உள்ளே நினைவு நிற்பது தற்பரமாகும். #திருமந்திரம் |
பற்றறப் பற்றில் பரம்பதி யாவது பற்றறப் பற்றில் பரனறி வேபரம் பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே பற்றறப் பற்றில் பரம்பர மாமே.திரு - 2409 தனது உடமை என எண்ணாமல் உடமையாக கொண்டால் பரம் பதியாவதை உணரலாம். பற்று இல்லாமல் பற்றினால் பரன் அறிவே பரம். பற்று இல்லாமல் பற்ற வல்லவருக்கு பரம் பரமாக இருக்கும். பின்குறிப்பு – வெறுமையான பரத்தை உணர வெறுமையான எண்ணங்கள் அற்ற மனம் வேண்டும். #திருமந்திரம் |
ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்புரம் கூறா உபதேசம் கூறில் சிவபரம் வேறாய் வெளிப்பட்ட வேதப் பசுவனார் பேறாக ஆனந்தம் பேறும் பெருகவே.திரு - 2408 முப்பத்து ஆறு தத்துவத்தையும் கடந்த அப்புறத்திற்கு அப்பரம் இருக்கிறது. விளக்க முடிய உபதேசம் விளக்கிடு என்றால் சிவபரம் வேறாக வெளிப்பட்ட வேதத்தை பசுவாக கொண்டனர். அளவற்ற ஆனந்தம் பேறும் பெருகவே சிவபரம் செய்யும். பின்குறிப்பு – சிவபரம் தத்துவத்திற்கு அப்பாற்பட்டு இருக்கிறது. #திருமந்திரம் |
மன்று நிறைந்தது மாபர மாயது நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும் கன்று நினைந்தெழு தாயென வந்தபின் குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே. திரு - 2407 இருக்கும் இடமெல்லாம் நிறைந்து இருப்பது மாபர மாயம். அதில் நின்று நிறைந்தது நேர்தரு நந்தி. கன்று நினைத்த உடன் வரும் தாயாக வந்தபின் குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே. பின்குறிப்பு – பரமே எங்கும் வியாபித்து இருக்க தன்னில் நிறைந்த நந்தியால் நாமும் நிறைந்தால் குணவிளக்காகலாம். #திருமந்திரம் |
தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர் மூன்று படிமண் டலத்து முதல்வனை ஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி நான்று நலம்செய் நலந்தரு மாறே.திரு - 2406 தோன்றம் பெற்று என் உடலுக்குள்ளே சுழன்று எழும் ஒன்றான மூன்று படி மண்டலத்து முதல்வனை ஏன் என்று கேள்வி கேட்டு பதிலாக இன்பத்தை அடைந்துபடியே இருக்கும் இளங்கொடி நான்று நலம் செய் நலந்தருவதற்கே. பின்குறிப்பு - கீழ் நடு மேல் என்ற மூன்று மண்டலம் ஆளும் ஒன்று நலமுடன் நன்மை செய்யவே நமக்குள் இருக்கிறது. #திருவாசகம் |
பரதுரி யத்து நனவு படியுண்ட விரிவிற் கனவும் இதன்உப சாந்தத்து துரிய கழுமுனையும் ஓவும் சிவன்பால் அரிய துரியம் அசிபதம் ஆமே. திரு - 2405 பர துரியத்தால் நனவுகளால் விரியும் கனவும் இதன் துணையாக நிற்க துரிய சுழுமுனையும் உணர்த்தும் சிவன்பால் அரிய துரியம் அசிபதம் ஆகும். பின்குறிப்பு – எல்லை கடந்த துரிய அனுபவத்தால் அரிய வார்த்தைகள் உண்டாகும். #திருமந்திரம் |
நந்தி அறிவும் நழுவில் அதீதமாம் இந்தியும் சத்தாதி விடவிய னாகும் நந்திய மூன்றுஇரண்டு ஒன்று நலம்ஐந்து நந்தி நனவாதி மூட்டும் அனாதியே. திரு - 2404 நந்தி அறிவும் புரியாது போனால் அதீதமாம் இந்திரியங்களும் சப்தத்தால் கட்டுப்படக் கூடும் , நாடிடும் நல் முயற்ச்சியால் முன்று இரண்டு ஒன்று என அடங்கி நலம் தரும் ஐந்து புலன்களும் நனவில் மூட்டும் இடம் அனாதியே. பின்குறிப்பு – நாத அனுபவத்தால் புலன்கள் கட்டுப்பட்டு அனாதியை அடையும். #திருமந்திரம் |
ஐம்பது அறியா தவரும் அவர்சிலர் உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச் செம்பர மாகிய வாசி செலுத்திடத் தம்பரயோகமாய்த் தான்அவன் ஆகுமே. திரு - 2403 ஐம்பதை அறியாதவர்களும் அவர்களில் சிலர் தேவர் தலைவனை நாடி உரைத்த முன்று பதத்தின் இடையே செம்பரமாகிய வாசி செலுத்திடத் தனக்குள் பர யோகமாய் தான் அவன் ஆகுமே. பின்குறிப்பு – பதம் கடந்த வாசியால் தான்அவன் ஆகலாம். #திருமந்திரம் |
தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம் நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும் அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. திரு - 2402 பழைமையான வார்த்தை தற்பொழுதைய வார்த்தை தோன்றும் உடன் வார்த்தை நம்பிய சீவன் பரன் சிவனாய் நிற்கும் அந்த வார்த்தைகள் வடிவம் கண்ட வாக்கியம் அதன் செழுமையான பொருளை ஆண்டு அருள் செய்தவன் சீர் நந்தி ஆவார். பின்குறிப்பு – நந்தி இறை வார்த்தையின் பொருள் அருளினார். #திருமந்திரம் |
அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்த கணுஒன் றிலாத சிவமும் கலந்தால் இணையறு பால்தேன் அமுதென இன்பத் துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே. திரு - 2401 அணுவும் விரிந்த பரமும் அசிபதத்து விளக்கிட கணு ஒன்றிலாத சிவமும் கலந்தால் இணை இல்லா பால் தேன் அமுது என இன்பத் துணையாக வாய் வார்த்தைகள் பொழிந்திட தோன்றுமே. பின்குறிப்பு – பெருள் தரும் வார்த்தைகள் சிவன் கலப்பதால் அதிகதிகமாய் வரும். #திருமந்திரம் |
தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும் நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம் சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன் கற்பனை யின்றிக் கலந்துநின் றானே. திரு - 2400 தன் வார்த்தை என்றும் இரண்டுபட்ட வார்த்தை என்றும் நிற்பது அசியத்துள் நேரியையாள் வார்த்தை. பொருள் தரும் வார்த்தையால் தொடர ஒண்ணாச்சிவன் கற்பனை இன்றி கலந்து நின்றானே. பின்குறிப்பு – பொருள் தரும் வார்த்தை கடந்தே சிவன் கலந்தே நிற்கிறான். #திருமந்திரம் |
போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும் ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு பேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டு வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே. திரு - 2399 போதப்பதை கவனித்து பூதங்களில் பேதங்களை ஓதும் கருவி தொண்ணுற்று ஆறு பேதமும் நாதாந்த அனுபவத்தில் பூர்த்தி ஆகி நிற்க வேதம் சொல்லும் தொம்பதமாகுதல் மெய்ம்மையே. பின்குறிப்பு – தத்துவங்களை கடந்த நாத அனுபவம் பிறப்பற என்ற வேத வாக்கை மெய்மையாக்கும். #திருமந்திரம் |
தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தனோன் ஆகின்ற பராபர மாகும் பிறப்பற ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே. திரு - 2398 உன்டான பழைமையான வார்த்தை புதிய வார்த்தை சூழ்ந்திட ஏற்ற வார்த்தை என இம்மூன்றோடு செயல்படுபவர் ஆகின்ற பராபரமாகும் பிறப்பு அற என்றனன் இதனால் அளவு பெற்ற சிவமாய் இருக்குமே. பின்குறிப்பு – பிறப்பற என்ற வார்த்தை முதல் நடு முடிவு உணர்த்தி நிற்கிறது. #திருமந்திரம் |
காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து ஏமம் பிடித்திருந் தேனுக்கு எறிமணி ஓமெனும் ஓசையின் உள்ளே உறைவதோர் தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே. திரு - 2397 காமம் வெகுளி மயக்கம் இவைகளை கடிந்து உண்மை என்ற ஒன்றை பிடித்திருந்தவனுக்கு எறிமணியும் ஓம் என்ற நாதமும் அதன் உள்ளே உரைவதோர் தாமம் அனுபவமாகும் தலைபட்டவாறே. பின்குறிப்பு – முக்குற்றம் கடந்தால் இறை அனுபவம் உண்டாகும். #திருமந்திரம் |
மூன்றுள குற்றம் முழுதும் நலிவன மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே .திரு - 2396 குற்றங்கள் மூன்று உள்ளன அவைகள் தானாக நலிந்துவிடும். அவை ஆழ்மனதில் உறக்கத்துடன் மயங்கி கிடக்கின்றன. மூன்றையும் நிக்கியவர்கள் பிறவியில் இருந்து நீக்கிப்பட்டனர். நீங்காதவர்கள் மூன்றினுள் பட்டு உழல்கின்றார்கள். பின்குறிப்பு – இயல்பான குற்றங்கள் நலியும் தன்மையுடன் இருக்கின்றன. #திருமந்திரம் |
பெற்ற புதல்வர்பால் பேணிய நாற்றமும் குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர் பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச் செற்றமி லாச் செய்கைக்கு எய்தின செய்யுமே. திரு - 2396 தான் பெற்ற பிள்ளைகள் வீசும் நாற்றமும் குற்றமும் கண்டு பெரிதாக கடிந்து கொள்ளாத பெற்றோர் போல் பற்றும் உயிரை ஈசன் செற்றமிலாச் செய்கைக்கு எய்தின செய்யுமே. பின்குறிப்பு – பெற்றோர் போல் தன் குற்றத்தை கடந்து நேசிப்பது இறை. #திருமந்திரம் |
கால்கொண்டுஎன் சென்னியிற் கட்டறக் கட்டற மால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கறப் பால்கொண்ட என்ணைப் பரன்கொள்ள நாடினான் மேல்கொண்டென் செம்மை விளம்ப ஒண்ணாதே. திரு - 2394 சுவாசத்தை கொண்டு என் சென்னியில் பற்றுக்கள் அறுபட அறுத்து அளவு கொண்டு நெஞ்சில் மயக்குவதை அறுத்து ஆண் பெண் என்ற பால் கொண்ட என்னை பரன் கொள்ள நாடினான் அதை மேலாக கொண்டேன் அத்த செம்மையை விளம்ப முடியாது. பின்குறிப்பு – சுவாசத்தின் சிறப்பு கதியால் இறைவனை அடைந்தேன் அதன் சிறப்பை சொல்லி முடியாது. #திருமந்திரம் |
ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள தன்தாதை தாளும் இரண்டுள காயத்துள் நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய வல்லார்கட்கு இன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே. திரு - 2393 தாமரை ஒன்று நமக்கென இருக்கிறது சிறந்த மலர் மூன்று உள்ளது. தன்காக உதவும் தாளும் இரண்டு உள்ளது இந்த உடலில். நன்றாக காய்ச்சி பதப்படுத்த வல்லவருக்கு இன்றே சென்று ஈசனை எய்தலும் ஆகும். பின்குறிப்பு – முயலும் நுட்பமுடன் தீவிரமாக முயன்றால் இன்றே ஈசனை அடையலாம். #திருமந்திரம் |
தரித்துநின்றானடி தன்னிட நெஞ்சில் தரித்து நின்றான் அமராபதி நாதன் கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே. திரு - 2392 பலவித உடல்களை தரித்து நின்றான் தனது நெஞ்சில் தரித்து நின்றான் தேவர்களின் தலைவன். மறைந்து நின்றான் தன்னை கருதாதவருக்கு சிந்தையும் செயல்படாதபடி பரித்து நின்றான் அப் பரிபாகத்தான். பின்குறிப்பு – எல்லவற்றையும் தரித்து நின்று கருதாதவர்களுக்கு மறைந்தும் நிற்கிறான் ஏகமான இறை. #திருமந்திரம் |
பதியது தோற்றும் பதமது வைம்மின் மதியது செய்து மலர்ப்பதம் ஓதும் நதிபொதி யும்சடை நாரியோர் பாகன் கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே. திரு - 2391 பதியின் தோற்றத்தை வார்த்தை படுத்த வேண்டும் என்றால் அறிவுடன் மலர் பாதத்தை கவனம் செய்து ஓதும் நதி உருவாகும் பொதியும் சடை கொண்டதை ஒரு பாகமும் உள்ளதை கதி செய்யும் காலங்கள் எது என்று கண்டு கொள்ளுங்கள். பின்குறிப்பு – இறை உணர தலை அடி உணர்ந்து கதி செய்யும் காலம் அறியவேண்டும். #திருமந்திரம் |
பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால் என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம் உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம் சொன்னான்கழலினை சூடிநின் றேனே. திரு - 2390 எதையும் ஆதாரமாக கொள்ளாத பார் ஒளிக்கு அப்புறத்தில் என் நாயாகனார் இசை எழுப்பி இருந்திடும். அடையாளம் காட்ட முடிய ஒளியும் விளக்கம் செய்ய முடிய மந்திரத்தையும் சொன்னான் கழலினை சூடி நின்றேன். பின்குறிப்பு – உள்ளதை உள்ளபடி அறியச் செய்தான் கழலினை சூடினேன். #திருமந்திரம் |
சிந்தையின் உள்ளே எந்தை திருவடி சிந்தையின் எந்தை திருவடிக் கீழது எந்தையும் என்னை அறியகி லான்ஆகில் எந்தையை யானும் அறியகி லேனே. திரு - 2389. என் எண்ணத்தின் உள்ளே என் தந்தையின் திருவடி. எண்ணத்தில் என் தந்தை திருவடியின் கிழே. என் தந்தை என்னை அறியாவிட்டால் என் தந்தையை நானும் அறியமுடியாதே. பின்குறிப்பு – அவன் அருளால் அவன் தாள் பணிந்தேன். #திருமந்திரம் |
நின்றான் நிலமுழுது அண்டமும் மேலுற வன்தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப் பின்தான் உலகம் படைத்தவன் பேர்நந்தி தன்தாள் இணைஎன் தலைமிசை ஆனதே. திரு - 2388 நிலமும் அதை கடந்த அண்டமும் கடந்தே நின்றான் வன்மையான தாள் கொண்ட அசுரரும் அமரரும் பிழைத்திட அதன் பிறகே உயர்ந்தோர்களால் உலகத்தை படைத்தவன் பேர் நந்தி. என் தாள் இணை என எனது தலை மேல் ஆனதே. பின்குறிப்பு – என் தலையில் அவன் அடி பதித்து நிற்கிறான். #திருமந்திரம் |
தலைஅடி யாவது அறியார் காயத்தில் தலைஅடி உச்சியில் உள்ளது மூலம் தலைஅடி யான அறிவை அறிந்தோர் தலைஅடி யாகவே தான்இருந் தாரே. திரு - 2387 தலை அடி எது என்பதை இந்த காயத்தில் அறிபவர்கள் இல்லை. தலை அடி உச்சியில் உள்ளது மூலம். தலை அடி ஆன அறிவை அறிந்தவர்கள் தலை அடியாகவே தன்னை அர்பனித்து இருப்பார்கள். பின்குறிப்பு – தலைக்கு அடி அறிந்தவர் தலைக்கு அடி போல் ஆணவமற்று இருப்பார்கள். #திருமந்திரம் |
காலும் தலையும் அறியார் கலதிகள் கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம் பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர் கால்அந்த ஞானத்கைக் காட்டவீ டாகுமே.திரு - 2386 காலும் தலையும் மூடர்கள் அறியமாட்டார்கள். கால் அந்த சத்தியின் அருள் என்பர் காரணம் பாலோடு ஒன்றுவது ஞானமே. இரு பால் இருப்பதால் கால் என்று சத்தியை குறிக்கின்றார்கள். பண்புள்ளவர்கள் தலை உயிர் என்பர். கால் அந்த ஞானத்தைக் காட்ட வீடாகும். பின்குறிப்பு – கால் என்ற ஞான சத்தி தலை என்ற உயிர் விட்டை அடையும். #திருமந்திரம் |
அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர் அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும் அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே. திரு - 2385 அருந்தவத்தால் தூண் போல் அர்த்தம் விளங்க கேட்டவர்கள் அருத்தவத்தவர்கள். ஆனால், அருள்மேனியே அர்தமான உத்திரமாகிறது. கருத்திலே நிலைத்து இருந்தாலும் தம்மை அடைந்திருக்கலாம். பின்குறிப்பு – உடல் தரும் அனுபவமே சரியான அர்தத்தை விளக்கச் செய்யும். #திருமந்திரம் |
பாசம் பயிலுயிர் தானே பரமுதல் பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப பாசம் பயிலப் பதிபர மாதலால் பாசம் பயிலப் பதிபசு வாகுமே. திரு - 2384 பாசத்துடன் இயங்கும் உயிர் பரத்தை முதலாக கொண்டதே. பாசத்துடன் இயங்கும் உயிர் தான் பசு என்பதும். பாசத்துடன் இயங்க பதி என்றே ஆகும் பரமாக இருப்பதால். பாசத்துடன் இயங்க பதி பசு என ஆகும். பின்குறிப்பு – பாசமும் பதியை அறியும் உபாயமாகும். #திருமந்திரம் |
ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று மோசு மறச்சுத்தன் ஆதற்கு மூலமே ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல் ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே. திரு - 2383 உபாயமாவதை கடந்தும் அழுக்கற்று இருக்க புதிதாக பட்ட அழுக்குடன் சேர்ந்து முழு சுத்தமாவதற்கு அதுவே மூலம் ஆகும். அழுக்குள்ள இடத்தில் தனியாக சோப்பு போட்டு நீக்குவது போல் நடப்பது எல்லாம் அருட்பாசத்தால் நடக்கிறது. பின்குறிப்பு – புதிய அழுக்குடன் சேர்ந்து பழைய அழுக்கும் அழிக்கப்படுவதால் அழுக்கும் அருட்பாசமே. #திருமந்திரம் |
நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம் பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன் கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள் அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே. திரு - 2382 அருளப்பட்ட பாசத்தால் நான் என்று சொல்வது ஆணவம். உண்டாக்கப்பட்ட மாயையில் வளர்ப்பதை பரித்துரை செய்கிறான். கண்ணியமான பாழ்படுத்துபவன் கண் வந்த பேரருள் முதன்மையானவன் அடி சேர உபாயம் ஆகுமே. பின்குறிப்பு – பாசத்தால் ஆணவமும் மாயையால் கருமமும் சூழதிருக்க திருவடியே உபாயமாகும். #திருமந்திரம் |
வீட்கும் பதிபசு பாசமும் மீதுற ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்து ஆட்கு நரசு சுவர்க்கத்தில் தானிட்டு நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே.திரு - 2381 விலகும் பதி பசு பாசத்தின் மேல் நிற்க ஆட்படுத்தும் இருவினை அவற்றால் உணர்ந்து ஆளும் நரக சுர்கத்தின் தானிட்டு நன்கு நான் தங்க நற்பாசம் நண்ணும். பின்குறிப்பு – பாசத்தால் நன்மை தீமை சுவர்க நரக தோன்றுவதை உணர்ந்தால் இறைப் பற்று வளரும். #திருமந்திரம் |
ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு வேறாகு மாயையில் முப்பால் மிகுத்திட்டுஅங்கு ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே. திரு - 2380 முப்பத்தாறு என ஆகும் தத்துவங்களை குண்டலி தன்னில் அகத்தில் இட்டு வேறாக நிற்கும் மாயையில் முப்பால் மிகுத்திட்டு அங்கு இரண்டாக இருக்கும் கருவியால் வகுத்திட்டால் வேறாகும் பதி பசு பாசம் கடந்து வீடாகும். பின்குறிப்பு – குண்டலியால் தத்துவங்கள் அழிந்து மாயை கடந்து வீடு பெறு அடையலாம். #திருமந்திரம் |
படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும் துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும் சடத்தை விடுத்த அருளும் சகலத்து அடைத்த அனாதியை ஐந்தென லாமே. திரு - 2379 படைப்பதும் காப்பதும் இளைப்பாறுதல் என பயில்வதும் துடைப்பதும் மறைப்பதும் முன் தோன்ற அருளும் சடத்தை விட்டுவிட அருளும் சகலத்தையும் அடைத்த அனாதியே ஐந்து எனலாம். பின்குறிப்பு – படைத்து காத்து இளைப்பற்றி துடைத்து மறைக்கும் ஐந்தும் அனாதியே. #திருமந்திரம் |
மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும் மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன் மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி ஆகும் படிபடைப் போன்அர னாமே. திரு - 2378 எல்லாவற்றின் மேலும் ஆதிக்கம் செலுத்தும் பரசிவம் மேலான சத்தி நாதமும் இணையும் பரவிந்து ஐம்முகன் என்பது வேறு ஈசன் வேறு. ஒன்றுபடும் உருத்திரன் மால் வேதா மேதினி என ஆகும்படி படைப்போன் அரனாமே. பின்குறிப்பு – அரனே யாவற்றையும் படைத்து தலைமை செய்துள்ளான். #திருமந்திரம் |
ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும் ஆகிய சத்தி சிவபர மேம்ஐந்தால் ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன் ஆகிய தூயஈ சானனும் ஆமே. திரு - 2377 சூக்கும்மாய் ஆகிய விந்து நாதமும் சத்தி ஆகிய சிவபரமாகும் ஐந்தால் ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன் தூய ஈசனும் ஆமே. பின்குறிப்பு – எதிலும் செயல்படுவதே ஈசன். #திருமந்திரம் |
படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்தி இடைப்பால உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல் படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்ய படைப்பாதி தூய மலம்அப் பரத்திலே. திரு - 2376 படைப்பிற்கு துவக்கமாக இருப்பது பரம் ஆகிய சிவம் அதில் வெளிப்பட்ட சத்தி, இடைப்படும் பலவகை உயிர்களுக்கு தன்னை அடைத்து தூங்கல் என்ற நடனம் புரிவது படைப்பிற்கு துவக்கமாகும் சூக்குமமான தற்பரன் செய்ய படைப்பாதி தூய மலம் அப்பரத்திலே. பின்குறிப்பு – சூக்குமாமாய் சிவம் நின்று சத்தியை பலவகை பிரிவாக்குகிறது. #திருமந்திரம் |
அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆகும் அறிந்தணு மூன்றுமெ யாங்கணும் ஆக அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன் அறிந்த பதிபடைப் பான்அங்கு அவற்றையே. திரு - 2375 அறிந்த அணுவாகும் மூன்றும் எங்கும் இருக்கும். அறிந்த அணு மூன்றுமே எங்கும் அற்றும் போகும். அறிந்த அனாதி வியாத்தனஃ என்ற எங்கும் நிறைத்தவன் ஆவன். அறிந்த பதி படைப்பான் அங்கு அவற்றையே. பின்குறிப்பு – பதி பசு பாசம் அறிய இருப்பதும் இல்லாமல் போவதுமாய் இருக்கும். #திருமந்திரம் |
பதியும் பசுவொடு பாசமும் மேலைக் கதியும் பசுபாச நீக்கமும் காட்டி மதிதந்த ஆனந்த மாநந்தி காணும் துதிதந்து வைத்தனன் சத்தசை வத்திலே. திரு - 2374 பதியாகிய இறையும் பசுவொடு பாசமும் மேல் நின்று சுவாச கதியும் அதனால் பசு பாச நீக்கமும் காட்டி நல்லறிவு புகட்டிய மாநந்தி காணும் துதியைத் தந்து வைத்துள்ளான் சுத்த சைவத்திலே. பின்குறிப்பு – சுவாச கதியால் பசு பாசம் நீங்கி பதியை காணலாம். #திருமந்திரம் |
பதிபசு பாசம் பயில்வியா நித்தம் பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப் பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும் பதிபசு பாசம் பயில நிலாவே. திரு - 2373 பதி பசு பாசம் என நித்தம் பயில்வோர்க்கு செய்து பதி பசு பாசம் என பகர்வோர்க்கு தொடராக்கி பதி பசு பாசம் என்பதை பற்று இல்லாமல் நீக்கும் பதி பசு பாசம் என பயில நிற்காதே. பின்குறிப்பு – பதி பசு பாசம் பயில உண்மை அறிந்து பொய் நில்லாமல் விலகும். #திருமந்திரம் |
ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம் ஆய பசுவும் அடலே றெனநிற்கும் ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம் ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே. திரு - 2372 ஆராய பதியை அருட் சிவ லிங்கமாக உணரலாம். ஆராய பசுவும் சிறந்த காளையாய் நிற்கும். ஆராய பலிபீடம் பாசம் என விளங்கும். ஆராய அரன் நிலை அடையலாம் ஆய்ந்துக் கொள்பவர்களுக்கே. பின்குறிப்பு – லிங்கம் காளை பலிபீடம் முறையே பதி பசு பாசம் என உருவகம் செய்யப்பட்டுள்ளது. #திருமந்திரம் |
நாடும் பதியுடன் நற்பசு பாசமும் நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை நீடிய நித்தம் பசுபாச நீக்கமும் நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே. திரு - 2371 நாடி அடைய விரும்பும் பதியுடன் நல்ல பசு பாசமும் நிண்டு வளரும் என்றும் நிலைக்கும் நித்தன் நிலையை அறிபவர் இல்லை. நித்தம் நீளும் பசுபாச நீக்கமும் நாடிய சைவருக்கு நந்தி அளித்ததே. பின்குறிப்பு – சைவருக்கு நந்தி அருள்வதே பசு பாச நீக்கம். #திருமந்திரம் |
விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி விட்ட பசுபாசம் மெய்கண்டோ ன் மேவுறான் சுட்டிய கேவலம் காணும் சகலத்தைச் சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே. திரு - 2370 தனிந்து விட்ட விடம் மேலும் ஏறாதபடி வேறாகி கடந்து விட்ட பசுபாசம் மெய்கண்டவன் தங்க மாட்டன். கற்றுத் தந்த கேவலத்தை அறியும் சகலத்தை சுட்டும் நனவில் அதீதத்துள் தோன்றும். பின்குறிப்பு – விடம் முறிந்துவிட்டதைப் போல் மெய்கண்டால் பசுபாசம் கடக்கலாம். #திருமந்திரம் |
பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும் கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம் வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே. திரு - 2369 பாசமுடன் செயல்படுபவனை படர்சடை கொண்ட நந்தியை நேசம் செய்து ஆங்கே நினைப்பவர் நினைத்தாலும் அச்சமுடன் கவனம் பெருக குறிப்பறிவது எவ்வண்ணம் என்றால் வாசமுடன் செய்யும் பாசத்தில் வைப்பதும் போல் வைக்கவேண்டும். பின்குறிப்பு – உபதேசப் பொருள் மேல் கவனம் பசமுடன் வைக்க வேண்டும். #திருமந்திரம் |
கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று நடக்கின்ற ஞானத்தை நாடோ றும் நோக்கித் தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால் குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே. திரு - 2368 இருக்கும் இருப்பில் உண்டாகும் பயன் மூன்று. அப்படி நடக்கும் காலத்தில் ஞானத்தை நாடோறும் நோக்கி அடுத்து அடுத்து தொடக்கம் வேண்டும் என்பதை துறந்து தொழுமின் தொழுதால் மலைக் குன்றில் இட்ட விளக்கபோல் வெளிச்சம் ஆகும். பின்குறிப்பு – ஆசைகளை வளர்க்காமல் வாழ்ந்தால் இறையை உணரலாம். #திருமந்திரம் |
பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப் பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. திரு - 2367 பதியின் அருளால் பிரிந்த பசுக்கள் பலகோடி. படைப்புகளை முதலாக கொண்டு பசுக்களை கட்டிய பாசம் மூன்று உண்டு. பசுத் தன்மை நீக்கி பாசத்தை அறுத்தால் பசுக்கள் பதியை பற்றி விடாமல் இருக்கும். பின்குறிப்பு – பாசம் அறுக்க பசுத் தன்மை அறுபடும். #திருமந்திரம் |
அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி அறிவினைக் கட்டிய பாசம் அனாதி அறிவு பதியில் பிறப்பறுந் தானே. திரு - 2366 அறிவு அறிவு எனப்படும் அறிவும் ஆதாரமற்ற அனாதியே. அறிவுக்கு அறிவாகும் பதியும் அனாதியே. அறிவினைக் கட்டிய பாசம் அனாதியே. அறிவு பதியை அறிந்து பிறப்பறுக்கும். பின்குறிப்பு – அறிவைக் கொண்டு பதியை அறிந்தால் பிறப்பு அறுபடும். #திருமந்திரம் |
முதலாகும் வேத முழுதுஆ கமம்அகப் பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே.திரு - 2365 முதலாகும் வேதம், முழுமையான ஆகமம் என இரண்டையும் அகத்தின் பதியாகிய ஈசன் பகர்ந்தது. முழுமை பகர்ந்த வேதத்தை அமர்ந்து முறைமுறையாக அதிகாதியாக விளக்கியது வேதாந்த சிந்தாந்தம் ஆகவே. பின்குறிப்பு – விளக்கமாக எழுதப்பட்டதே ஆகமம். #திருமந்திரம் |
மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம் சென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள் துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே. திரு - 2364 சூழ்ந்த சோகமாய் மாமறையாளர்களுக்கு தமது சென்னி அது தான் சிவயோகமா இது எப்படி என வினவுகின்றார்கள். அது சித்தாந்த மாமறையாய் பொருள் உணர்த்த நுட்பமான நூலெனத் தோன்றுமே. பின்குறிப்பு – சிவயோகம் பற்றி அறியாதவர்கள் சோகமாகிப் போகின்றார்கள் மாமறை படித்துவிட்ட ஆணவத்தால். #திருமந்திரம் |
உயிரைப் பரனை உயிர்சிவன் தன்னை அயர்வற்று அறிதொந் தத்தசி அதனால் செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கி அயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே. திரு - 2363 உயிரை பரனை உயிராகிய சிவன் தன்னை சோர்வு இல்லாமல் அறிந்து துவம் தத் மசி என்பதால் செயலற்று அறிவாகி உம் சென்று அடங்கி சோர்வில்லாமல் வேதாந்த சிந்தாந்தம் ஆகும். பின்குறிப்பு – துவம் தத் மசி என்ற உயிர் பரன் உயிர்சிவன் உணர்வதே வேதாந்த சித்தாந்தம் ஆகும். #திருமந்திரம் |
அனாதி சீவன்ஐம் மலமற்றுஅப் பாலாய் அனாதி அடக்கித் தனைக்கண்டு அரனாய்த் தன்ஆதி மலம்கெடத் தத்துவா தீதம் வினாவுநீர் பாலாதல் வேதாந்த உண்மையே. திரு - 2362 ஆதாரமற்ற சீவன் அழுக்குகள் இல்லாமல் அடுத்தபடியாக ஆதாரத்தை அடக்கி தன்னையே கண்டு அரனாய் தனது துவக்க அழுக்கு அழிய தத்துவாதீதம் இது எப்படி என வினாவினால் பாலோடு நீர் கலந்த்து போல் இதுவே வேதாந்த உண்மை. பின்குறிப்பு – அழுக்குகள் அழிய சீவனாக வழலாம். #திருமந்திரம் |
அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் அன்னை ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால் மன்றாடி பாதம் மருவலும் ஆமே. திரு - 2361 அன்று சொன்ன ஐவகை அந்தம் என்ன அது என்றால் பிறப்பிடம் ஒன்றாக வேதாந்த சித்தாந்த இணைத்து இருக்க செய்தால் யோகந்தம் நேர்படும் அப்படி நேர்பட்டால் மன்றாடு இறை பாதத்தை பற்றுவது கூடும். பின்குறிப்பு – ஐந்து வகையும் ஒரு தாயை பிறப்பிடமாக கொண்டதே. #திருமந்திரம் |
ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம் ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில் ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே. திரு - 2360 சொல்லப்படும் கலாந்தம் இரண்டு முடிவென்ற நாதந்தம் என ஆகும் பொழுதில் கலை ஐந்தாம் எனவே இதை வழங்கும் அரனே பஞ்சாந்தகன் என்ற ஐந்து முடிவை கொண்டவன் என மறைநூல்களும் ஆகமங்களும் மொழிந்தன அன்றே. பின்குறிப்பு – நாத அனுபவத்தை அருள்பவன் ஐந்து முடிவுடைய நாதனே. #திருமந்திரம் |
பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம் பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம் விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம் பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.திரு - 2359 விரிந்த நற்சிந்தை அறியும் சிவானந்தம் எல்லாம். பரானந்தம் மேல் மூன்று அவை பாழ்படாத ஆனந்தம், விராமுத்திரானந்தம், மெய்நடன ஆனந்தம் இவை விலகாமல் நின்று உள்ளம் பூரிப்பில் திளைக்கும். பின்குறிப்பு – ஆனந்தம் முன்று தன்மையாக உள்ளது. #திருமந்திரம் |
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல் ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன நாதன் உரையவை நாடில் இரண்டந்தம் பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே. திரு - 2358 வேதமுடன் ஆகமங்களும் மெய்யான இறைவனை உணர்த்தும் நூல்களே. ஓதவும் பொதுவாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன. நாதன் உரை எவை என்று நாடில் இரண்டின் முடிவும் அது. இருப்பினும் பேதம் தரும் என்று பெரியவர்கள் உரைப்பர் காரணம் அவர்கள் உணர்ந்துவிட்டதால் அந்த பேதம் ஏற்படுகிறது. பின்குறிப்பு – வேதமும் ஆகமமும் இறையை உணர்த்தும். #திருமந்திரம் |
தத்துவம் ஆகும் சகள அகளங்கள் தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம் தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம் தத்துவ மாம்சிவ சாயுச் சியமே. திரு - 2357 தத்துவம் ஆகும் அசைவற்றதும் அசைவுள்ளதும். தத்துவம் ஆகும் விந்து, நாதம், சதாசிவம். தத்துவம் ஆகும் சீவன் தனது இருப்பிடம். தத்துவம் ஆகும் சிவ சாயுச்சியமே. பின்குறிப்பு – உள்ளதை தத்துவமாக விளக்கப்பட்டுள்ளது. #திருமந்திரம் |
சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும் அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால் நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம் தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே.திரு - 2356 சிவனான இறையை பரமான இந்த அண்டத்தில் உயிரான சீவனுள் காட்டும் மாறுபடாத வேதாந்த சித்தாந்தம் ஆனால் புதிதான அவத்தையில் ஞானம் சிவமாம் பொறுப்புடன் ஆராய்ந்து உணர்ந்தவர் தத்துவத்தாரே. பின்குறிப்பு – உணர்ந்தவர் உணர்த்துவதே தத்துவம். #திருமந்திரம் |
சித்தாந்த தேசீவன் முத்திசித் தித்திலால் சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்திவர் சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால் சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே. திரு - 2355 சித்தாந்தத்தின் பொருட்டு சீவனுக்கு முக்தி சித்திப்பதால் சித்தாந்தத்தில் நிற்போர் முக்தி சித்தித்தவர். சித்தாந்தம் வேதாந்தம் செம்பொருள் என்பதால் இவைகள் சிவனையே காட்டும். பின்குறிப்பு – சித்தாந்தம் சிவனை வெளிப்படுத்தும். #திருமந்திரம் |
சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும் அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும் சிவமாம் சதாசிவன் செய்துஒன்றான் ஆனால் நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே.திரு - 2354 சிவமாக ஆகுதலே வேதாந்தமும் சிந்தாதமும் ஆகும். அவம் அவமாக ஆகும் அந்த இரண்டும் உணர்ந்தால். சிவமாகும் சதாசிவன் செய்து ஒன்றினால் புதிதான வேதாந்தம் ஞானசித்தாந்தமே. பின்குறிப்பு – அனுபவத்தால் வேதமும் சிந்தாந்தமும் புதியதாக இருக்கும். #திருமந்திரம் |
வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்ப நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி போதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம் சாதா ரணம்சிவ சாயுச் சிய மாமே. திரு - 2353 வேதங்களின் முடிவாக உரைக்கும் பதம் பசு என்ப நாத முடிவால் பாசம் விட்டு நிற்பது நன்பதி என்ப. போதாந்த தற்பதம் கடந்து போய் இரண்டும் ஐக்கியப்படும் சாதாரணம் சிவ சாயுச்சியம் ஆகும். பின்குறிப்பு – வீட்பெறு அடைதலை பசு, பதி, சிவசாயுச்சியம் என்பார்கள். #திருமந்திரம் |
ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார் இருவினை உன்னார் இருமாயை உன்னார் ஒருவனு மேயுள் உணர்ந்திநின் றூட்டி அருவனு மாகிய ஆதரத் தானே. திரு - 2351 ஒருவனை உணர மறுப்பவர்களே உயிரை உணர மறுப்பவர்கள். இருவினை உள்ளது என ஏற்காதவர்களே இருமாயையில் சிக்குவது இல்லை. ஒருவனே என உள்ளே உணர்த்தி நின்று ஊட்டி அருவமாக ஆதாரமாக இருக்கிறது. பின்குறிப்பு – தன்னை மறுப்பவர்களே தலைவனை மறுக்கிறார்கள். #திருமந்திரம் |
கோஉணர்ந் தும்சத்தி யாலே குறிவைத்துத் தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப ஓஅனைத் துண்டுஒழி யாத ஒருவனே. திரு - 2350 தலைமை உணர்த்தும் சக்தியின் மீது குறிவைத்துத் தேவர் உணர்த்தும் கருமஞ் செய்வதை செய்வதால் பாவம் அனைத்தும் துடைக்கப்பட்டு தன்னை பக்தியும் பாரிக்க ஓ என அனைக்க துண்டப்படுவோம் ஒழியாத ஒருவனை. பின்குறிப்பு – சக்தியின் வழிபாடும் சிறந்த வாழ்வும் இறையை உணரத் துண்டும். #திருமந்திரம் |
அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும் உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உளஒளி பண்டுறு நின்ற பராசக்தி என்னவே கொண்டவன் அன்றிநின் றான்தங்கள் கோவே. திரு - 2349 அண்டங்கள் ஏழையும் கடந்து அதற்கு அப்பாலும் அகன்று உண்டேன்று இருக்கும் பேரொளிக் உள்ளே ஒளி திடமாக நின்ற பராசத்தி என அறிந்து கொண்டவன் அன்றி நின்றான் தங்களத் தலைவனை. பின்குறிப்பு – அண்ட சராசரத்தையும் கடந்த பராசக்தி உள்ளது என உணர்ந்தவன் தலைவனை பற்றி இருக்கிறான். #திருமந்திரம் |
வேதாந்தம் தன்னில் உபாதிமே வேழ்விட நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம் மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன் போதாந்த தற்பதம் போமசி என்பவே. திரு - 2347 வேதங்களை படித்திருக்கிறேன் என்ற உபாதியை மேலே எழ விடாமல் இருக்க வேண்டும். நாதாந்தம் பெற்றதால் கொண்ட பாசத்தை விட நல்லதாம் என்ற மீதமுள்ள காரணமும் கழிய மெய்பரனை அடைய போதாந்த தற்பதங்கள் அழியும். பின்குறிப்பு – அறிந்தேன் என்ற ஆணவம் தவிர்க்க வேண்டும். #திருமந்திரம் |
வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும் மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே.திரு - 2345 வேத முடிவு, சித்தாந்த முடிவு, வேறுபாடு இல்லாத முத்திரை, போதனை கடந்த ஞானம், யோக முடிவு, பொதுஞேயமான நாதாந்த முடிவு கொண்டு வரும் ஆனந்தம் தலைமேல் வைத்து உரிமை கொண்டாட முடியும் முழுமையான முடிவை தரும் முத்திரை என ஆகும் மோனத்தில் மூழ்கவே. பின்குறிப்பு – அமைதியே நிலையான ஆனந்தம் தரும். #திருமந்திரம் |
கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில் வருசமயப் புற மாயைமா மாயை உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே. திரு - 2344 யார் எப்படி எண்ணுகின்றார்களோ அவர்களுக்கு அப்படியே என்பதைப் போல் அரன் அருளுடன் செய்த ஆகமந் தன்னில் வருகின்ற சமயம் புற தோன்றிய மாயை. அதில் மாமாயை உருவிய சிந்தாந்தம் உண்மையே. பின்குறிப்பு – உண்மையை விளக்கும் நூலில் இருந்து பொய் தோன்றலாம் என்பதை கடந்து உணர வேண்டும். #திருமந்திரம் |
ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின் தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக் கூளி யருளிய கோனைக் கருதுமே. திரு - 2343 சொத்து உள்ளவனை தர்மம் வந்து கொண்டபின் தேவர் போன்ற எங்கள் சீர்நந்தி தாள்தந்து குற்றம் இல்லாமல் வேதாந்த சித்தாந்த மேன்மையை உணர்த்தி அருளிய தலைமையை கருதுமே. பின்குறிப்பு – முடிவாக முக்தி ஏய்திட சீர் நந்தி தாள் தந்து அருளினார். #திருமந்திரம் |
உண்மைக் கலைஆறுஓர் ஐந்தான் அடங்கிடும் உண்மைக் கலாந்தம் இரண்டுஐந்தோடு ஏழ்அந்தம் உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்து உண்மைக் கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே. திரு - 2342 உண்மையில் கலை ஆறும் ஐந்தாக அடக்கலாம். உண்மையில் காலந்தம் இரண்டு அது ஐந்துடன் ஏழாக முடிகிறது. உண்மைக்கலை ஒன்றில் இரண்டு ஆறாகும் பனிரென்டில் நாதாந்தமாகும். உண்மையில் கலை சொல்ல ஒரே முடிவுதான். பின்குறிப்பு – தென்கலையே காலந்தமாகவும் முடிவான ஒன்றாகவும் இருக்கிறது. #திருமந்திரம் |
ஆறந்த மும்சென்று அடங்கும்அந் நேயத்தே ஆறந்த ஞேயம் அடங்கிடும் ஞாதுரு கூறிய ஞானக் குறியுடன் வீடவே தேறிய மோனம் சிவானந்த மாமே. திரு - 2341 ஆறு முடிவுகளும் அடங்கும் அந்த நேயத்தில் ஆறு முடிவுகளுக்கான ஞேயம் அடங்கிவிடும். ஞாதுரு கூறிய ஞானக் குறிகளுடன் வீட்டை அடைந்த மோனம் சிவானந்தம் ஆகும். பின்குறிப்பு - நேசமுடன் ஞேயம் ஓருங்கே அடங்குவதால் அடையும் மோனம் சிவானந்தம் ஆகும். #திருமந்திரம் |
தான்அவ னாகும் சமாதி தலைப்படில் ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும் ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது ஞான மென்ஞேய ஞாதுரு வாகுமே. திரு - 2340 நான் அழிந்து அவனாக ஆதல் சமாதி தலைப்பட்டால் ஆகும். ஆன கலாந்தம் நாதாந்தம் யோகாந்தம் மற்றும் போதாந்தம் சிந்தாந்தம் என்பது ஞானம் என்னும் ஞேய ஞாதுருவாகுமே. பின்குறிப்பு – ஞேயமுடன் ஞான வடிவம் அடைவதே ஆறாந்த முடிவு ஆகும். #திருமந்திரம் |
தேசார் சிவமாகும் தன்ஞானத் தின்கலை ஆசார நேய மறையும் கலாந்தத்துப் பேசா உரையுணர் வற்ற பெருந்தகை வாசா மகோசர மாநந்தி தானே. திரு - 2339 உலக மனிதர் சிவமாகும் ஞானக் கலை ஆசாரத்தின் மேல் கொண்ட பற்று மறையும் கலாந்தத்துப் பேசாது உணர்வால் உணர்த்தும் பெருந்தகை வாசா மகேசர மாநந்தி தானே. பின்குறிப்பு – தன்னை உணர்ந்து பேசாது உணர்த்தும் நந்தி கலாந்தத்தை ஞானமுடன் அடைந்தார். #திருமந்திரம் |
ஆகும் அனாதி கலைஆ கமவேதம் ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல் ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம் ஆகும் சிவபோ தகம்உப தேசமே. திரு - 2338 யாரால் படைக்கப்பட்டது என அறிய முடியா அனாதி கலை ஆகம வேதமாகும் மந்திரம். அதன் வழி நிற்பது தந்திரம், அப்படி அனாதி முதல் உடல் அற்ற மந்திரமாகும் சிவ போதகம் உபதேசமே. பின்குறிப்பு – ஆகம வேத வரிகள் மந்திரம், அதன்படி நடத்தல் தந்திரம், புரிந்து கொள்வது தெளிவு, விளக்கச் செய்வது உபதேசம். #திருமந்திரம் |
தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறு ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு அளியவ னாகிய மந்திரம் தந்திரம் தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே.திரு - 2337 இப்படி தெளிவதை ஐந்து கலையாக வெளிச்சமுடன் வேறுபடுத்தப் பட்டுள்ளது. இறையை உணர வல்லவனுக்கு அளிப்பவனாகிய மந்திரம், தந்திரம், தெளிவு, உபதேசம், ஞானம் என ஐந்தாமே. பின்குறிப்பு – கலாந்தத்தை ஐந்து கலையாக வேறுபடுத்தலாம். #திருமந்திரம் |
கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில் விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு உள்ளன வாம்விந்து உள்ளே ஓடுங்கலும் தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே. திரு - 2336 கொள்கைகையாக இருக்கும் ஆறு முடிவுகளில் கலாந்த்ம பற்றி குறிக்க வேண்டின் வென்று நிவிர்த்தியாகும் மேதாதிக்கு உள்ளனவாம் விந்து உள்ளே ஒடுங்குவதும் தெளிவுடன் அதனை தெரிந்து நடப்பதும் ஆகும். பின்குறிப்பு – முடிவை காலத்தின்படி அடைய விந்தில் ஒடுங்குவது கலாந்தம் ஆகும். #திருமந்திரம் |
தேடும் இயம நியமாதி சென்றகன்று ஊடும் சமாதியில் உற்றுப் படர்சிவன் பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக் கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே. திரு - 2335 தேடப்படும் இயல்பு நிலையும் நியாய உணர்வையும் அடைந்து அதை கடந்து ஊடும் சமாதியில் உற்று படர சிவன் பாடுறச் சீவன் பரமாக பற்ற அற்றபடி கூடும் துணையாகும் சாந்தம் என்ற யோகந்த கொள்கையே. பின்குறிப்பு – சமாதியில் சிவன் பாட சீவன் பரமாக சாந்தம் நிலவும். #திருமந்திரம் |
உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியைத் தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல் உள்ள இருள்நீங்க ஓர்iஉணர் வாகுமேல் எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே. திரு - 2334 இருக்கும் உயிர் அடையும் உபாதி ஆறாறதாகும். தெளிவாய் அதை விட்டு அகன்று நாதந்தத்தை அடைந்து மேல் உள்ள இருள் நீங்க ஒர் உணர்வாகும் மேல் எள்ளிட முடிய நாத முடிவை எய்திடும் மாறுபாடுகள். பின்குறிப்பு – தனக்கு உண்டாகும் உபாதிகளை கடந்த நாத அந்தம் அடைந்தால் மாறுபாடுகள் கலையும். #திருமந்திரம் |
மேவும் பிரமனே விண்டு உருத்திரன் மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால் மேவும் பரவிந்து நாதம் விடாஆறாறு ஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள தாமே. திரு - 2333 இங்கே மேவும் எல்லாம் பிரமனே அறிந்தவன் உருத்திரன் அதையும் நடத்துபவன் ஈசன் அடுத்தவன் சதாசிவன் அதை கடந்து காரணமாவது பரவிந்து நாதம் இந்த ஆறை கடந்து ஓவும் பொழுது அணு ஒன்று உளதாமே. பின்குறிப்பு – எல்லா மேம்பட்டவற்றிற்கும் அப்பால் அணு ஒன்று உள்ளதாமே. #திருமந்திரம் |
நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம் சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கச் சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே. திரு - 2332 என்றேன்றும் பரனோடு உயிர் பெற்ற மனம் நீள்கிறது. சத்தம் முதல் ஐந்து தத்துவங்கள் நீங்கி சுத்தம் அசுத்தம் தொடராத வகை அறிந்து அத்தன் பரன்பால் நினப்பை வைத்திருக்க அடைவது சித்தாந்தமே. பின்குறிப்பு – உயிரின் தன்மை உணர்ந்து பரனோடு மனம் ஒன்றுதல் சித்தாந்தம். #திருமந்திரம் |
தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம் ஆனாத் துரியத்து அணுவன் தனைக்கண்டு தேனார் பராபரம் சேர்சிவ யோகமாய் ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே. திரு - 2331 தான் என்றே ஆன வேதாந்தம் தன்னை விளக்கும் சித்தாந்தம் துரியமான அணுவன் தன்னைக் கண்டு தேறினார் பராபரம் சேர்க்கும் சிவயோகமாய் உண்டான மலம் அழிந்து அருமையான சித்தி ஆதலே. பின்குறிப்பு – வேதாந்தமும் சித்தாந்தமும் ஆவது துரியம் அடைந்த சிவயோகத்தால் சித்திப்பதே. #திருமந்திரம் |
அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர் அந்தம்ஒர் ஆறும் அறிவார் அமலத்தர் அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு அந்தமோடு ஆதி அறியஒண் ணாதே.திரு - 2330 முடிவுகள் ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர். முடிவுகள் ஓர் ஆறும் அறிவார் தேவர்கள். முடிவுகள் ஓர் ஆறும் அறியாதவர்களுக்கு முடிவுடன் ஆதியை அறியமுடியாதே. பின்குறிப்பு – ஆறுவகை முடிவை அறியாதவர் ஆதியை அறிய முடியாது. #திருமந்திரம் |
வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும் நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும் ஓதத் தகும்எட்டு யோகாநந்த அந்தமும் ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே. திரு - 2329 வேதத்தின் முடிவும், நிறைவான சித்தத்தின் முடிவும், நாதத்தின் முடிவும், நல்லபோதத்தின் முடிவும், ஓதத் தகுந்த எட்டு யோக ஆனந்த முடிவும், ஆதி காலத்தின் முடிவும் என முடிவுகள் ஆறும் ஆனந்தமானதே. பின்குறிப்பு – ஆனந்தம் அருளும் முடிவுகள் ஆறு உள்ளன. #திருமந்திரம் |
முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர் பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத் தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தன் மன்னிச் சிவமாக வாரா பிறப்பே. திரு - 2328 முன்னர் முதல் விளையாட்டில் முதலாக வந்தவர்கள் அடுத்த வந்தவர் பெற்ற அழுக்குகளை களைத்து தன்னை தெரிந்து தனது பண்டையத் தலைவனை மன்னி சிவமாக மாறினால் பிறப்பு வாராது. பின்குறிப்பு – தன்னை அறிந்தவர் பிறவிக் கடலை கடக்கிறார். #திருமந்திரம் |
தேடுகின் றேன்திசை எட்டோடு இரண்டையும் நாடுகின் றேன்நல மேஉடை யானடி பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக் கூடுகின் றேன்குறை யாமனைத் தாலே. திரு - 2327 தேடுகின்றேன் திசைகள் எட்டுடன் இரண்டையும் நாடுகின்றேன் நலத்தை உடைமையாக கொண்டவன் அடி. பாடிகின்றேன் பரமே துணை எனக்கு என்று. கூடுகின்றேன் குறைகளை களைக்கும் அனைத்திலும். பின்குறிப்பு – உண்மை என அறியபடுபனவற்றிடம் கூடுகிறேன். #திருமந்திரம் |
மாய விளக்கது நின்று மறைந்திடும் தூய விளக்கது நின்று சுடர்விடும் காய விளக்கது நின்று கனன்றிடும் சேய விளக்கினைத் தேடுகின் றேனை. திரு - 2326 மாயமான விளக்கு அது நின்று மறைந்திடும், தூய்மையான விளக்கது நின்று சுடர்விடும், காயத்தில் இருக்கும் விளக்கது நின்று கனல் விடும். நெருக்கமான விளக்கை தேடுகின்றேனே. பின்குறிப்பு – உபதேசப் பொருள். #திருமந்திரம் |
என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன் என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது என்னையிட்டு என்னை உசாவுகின் றானே. திரு - 2325 என்னை அறியவில்லை இத்தனை காலமும் என்னை அறிந்த பின்பு ஏதும் அறியமுற்படவில்லை. என்னை அறிந்து இருத்தலும் கைவிடாது என்னை எனக்கே ஆனையிட்டு செயல்பட துண்டுகின்றானே. பின்குறிப்பு – ஆட்டி வைத்து ஆட்பட வைப்பதும் இறையே. #திருமந்திரம் |
மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க் காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன் சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும் பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே. திரு - 2324 மாயவன் என்று ஆகி மலரோனும் இறையுமாய் உடல் என்ற காய நல்ல நாட்டிற்கு கரு என்ற முதலாக ஆனவன். மகவு என்றானவன் எடுத்து அணிந்துக் கொள்ள வேண்டியவன் தீத்திக்கும் நல்ல தீங்கரும்பாகவும் அமுதாகவும் நின்று அண்ணிக்கின்றானே. பின்குறிப்பு – ஏகமே அநேகமாக நின்று அருள்கின்றது. #திருமந்திரம் |
அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது அறிவுடை யார்நெஞ்ச அருந்தவம் ஆவது அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும் அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே. திரு - 2323 அறிவுடைவர்களின் நெஞ்சமே இறையின் அகலிடமாக ஆகின்றது. அறிவுடையார் நெஞ்சே அருந்தவம் செய்கின்றது. அறிவுடையார் நெஞ்சொடு ஆதிப்பிரனும் நின்று செயல்படுகிறான். பின்குறிப்பு – அறிவுடைவர் நெஞ்சமே இறை நிலைக்கும் இடம். #திருமந்திரம் |
அறிவுஅறி யாமையை நீவி யவனே பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின் செறிவாகி நின்றவன் சிவனும் ஆமே. திரு - 2322 அறிவு என்ற அறியாமையை நீந்தி கடந்தவனே பொறிகளின் தன்மைகளை கடந்து தானான் என ஆனபொழுது அறிவாக யாவற்றின் உள்ளும் தானாய் அறிவின் செறிவாகி நின்றவன் சிவன் என ஆகுமே. பின்குறிப்பு – எதிலும் அறிவாய் இருப்பது சிவமே. #திருமந்திரம் |
அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம் அறிவுஅறி யாமை யாரும் அறியார் அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால் அறிவுஅறி யாமை அழகிய வாறே. திரு - 2321 அறிவு அறிவு என்று ஒரு கூட்டம் உலகில் உயர்த்தி பேசும். அறிவு அறியாமையுடனும் இருப்பதை யாரும் அறிவதில்லை. அறிவு அறியாமை கடந்த அறிவானால் அறிவுடன் அறியாமையில் இருக்கும் அழுகு என்பதை விளங்கும். பின்குறிப்பு – அறிவும் அறியாமையின் ஒன்றாக இருப்பதை உணர்வதும் அறிவே. #திருமந்திரம் |
அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின் அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம் அறிவுஅறி வாக அணிமாதி சித்தி அறிவுஅறி வாக அறிந்தணன் நந்தியே. திரு - 2320 அறிவு என்பதை அறிவால் அறிந்து அன்பை முன்னிலைப் படுத்துங்கள். அறிவு அறிவாக அறியும் இத்தன்மையால் அறிவு அறிவாக அணிமாதி சித்திகள் செய்யப்படுகின்றன. அறிவு அறிவாக இருப்பதை அறிந்தஅணன் நந்தியே. பின்குறிப்பு – அறிவை கடந்து அன்பால் உறவாடுங்கள். #திருமந்திரம் |
மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து முன்னிநின் றாமை மொழிந்தேன் முதல்வனும் பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப் பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே.திரு - 2319 வேண்டி நின்றவர்களின் இடையே வந்து அருளும் மாயத்தில் முன்னே நின்று அமைந்ததை மொழிந்தேன். முதல்வனும் பொன்னில் இருந்து பொன்வந்தது போல் புகழ்திரு மேனியைப் பின்னி நின்றேன் நீ பெரியவன் என்றான். பின்குறிப்பு – தங்கத்தில் தங்கம் பின்னியது போல் உடலில் உடலாய் பின்னியதை உணரலாம். #திருமந்திரம் |
அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு அறைகின் றனமறை ஈறுகள் தாமே. திரு - 2318 அறிவுக்கு அழிவில்லை என்பதால் ஆக்கப்படும் பொருள்கள் மற்றும் கோட்பாடுகள் நிலைக்கின்றன. ஆனால் அறிவு செய்யப்பட்டது இல்லை. அறிவை அறிவதற்கு அறிவே ஆதாரம் மற்றொரு ஆதாரம் இல்லை. அறிவே அறிவை அறிகின்றது என மறைநூல்கள் முடிவு பகர்கின்றன. பின்குறிப்பு – அறிவை அறிவால் மட்டுமே அறியமுடியும். #திருமந்திரம் |
அறிவு வடிவென்று அறியாத என்னை அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி அறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே அறிவு வடிவென்று அருந்திருந் தானே. திரு - 2317 அறிவு என்பது வடிவம் என்று அறியாத என்னை அறிவு வடிவென்று அருளுடன் உணரச் செய்தான் நந்தி. அறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே அறிவு வடிவென்று அறிய இருந்தேன். பின்குறிப்பு – அறிவு வடிவம் கொண்டு செயல்படுகிறது. #திருமந்திரம் |
அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச் சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப் பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே. திரு - 2316 தன்னை அறிந்தவர் இருக்கும் இடம் எங்கேயோ அங்கே பலமான தேவர்கள் எல்லாம் தொழுதிட சிங்காசனத்தே சிவன் இருந்தானேன்று சங்கு கோர்த்த வளையமும் சிலம்பும் சரேலெனப் பொங்கும் குழலியும் போற்றி என போற்றினார்கள். பின்குறிப்பு – தன்னை அறிந்தவரை யாவரும் போற்றுவார்கள். #திருமந்திரம் |
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே. திரு - 2315 தன்னை அறிந்தால் தனக்கு ஒரு கெடுதல் இல்லாமல் போகும். தன்னை அறியாமல் தானே கெடுகின்றான். தன்னை அறியும் அறிவை அறிந்த பின்னர் தன்னை தான் வாழ்த்தவும் போற்றும் செய்ய இருக்கிறான். பின்குறிப்பு – தன்னை அறிந்தவர் கேடு அற்றவர். #திருமந்திரம் |
குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார் குறிஅறி யார்கடம் கூடல் பெரிது குறிஅறி யாவகை கூடுமின் கூடி அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே. திரு - 2313 குறிப்பை அறிய தகுதியற்றவர்கள் குறிப்பை காணமாட்டார்கள். குறிப்பை அறிய தகுதியற்றவர்கள் தன் உடலுடன் இருப்பதை கூடுவது பெரிது. குறிப்பை பிறர் அறியாதபடி கூடிடும் வகையில் கூடி அறிவை அறியாதபடி இருந்து அன்னம் போல் தேவையை எடுத்துக்கொள்ளுங்கள். பின்குறிப்பு – கூட தகுதியற்றவர் குறிப்பை அறியமாட்டார். #திருமந்திரம் |
மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும் உள்கின்ற யோனிகட்டு எல்லாம் ஒருவனே கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே. திரு - 2312 ஒரே வகை மண்ணில் பலவகை பாத்திரங்கள் என செய்யலாம். பலதரபட்ட யோனிகளுக்கு ஒருவனே தலைவன். கண் ஒன்று பல காட்சிகள் கண்டாலும் தன்னை காண இயலாது. அண்ணலும் அப்படியே இருக்கிறான். பின்குறிப்பு – உனக்குள்ளே உரைபவனே எல்லாமாய் இருக்கிறான். #திருமந்திரம் |
அறியகி லேன்என்று அரற்றாதே நீயும் நெறிவழி யேசென்ற நேர்பட்ட பின்னை இருசுட ராகி இயற்றவல் லானும் ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே. திரு - 2311 அறிய இயலவில்லை என்று அரற்றாதே நீயும் நெறியான வழியில் சென்று நேர்பட்ட பின்பு இருசுடராகி இருக்க வல்லவனும் ஒரு சுடராக வந்து உள்ளத்தை ஆளுமே. பின்குறிப்பு – இயலாது என விலகாமல் நேர்பட நிற்க உள்ளத்தே இறை உணரலாம். #திருமந்திரம் |
தன்னினில் தன்னை அறியும் தலைமகன் தன்னினில் தன்னை அறியத் தலைப்படும் தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில் தன்னினில் தன்ஐயும் சார்தற்கு அரியவே. திரு - 2310 தனக்குள்ளே தன்னை அறிய தலைப்படும் ஒருவர் தன்னில் தன்னை அறிய தலைப்பட்டு தன்னில் தன்னை சார்ந்திடவில்லை என்றால் தன்னில் தன்னை சார்ந்திட முடியாது. பின்குறிப்பு – தனக்குள் உண்மை இருக்கிறது என்று தன்னை சார்ந்தால் இன்றி தலைவனை அறிய முடியாது. #திருமந்திரம் |
தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம் தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையத் தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர் தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே. திரு - 2309 உணரும் நான் உணரப்படும் ஒன்றான அவன் என இரண்டு என்பார்கள் தத்துவமாக. அப்படி இரண்டு இல்லை என்ற தன்மையை கேவலத்தார் உணர்வது இல்லை. தான் என்ற ஒன்று இல்லாமல் தத்துவ சுத்தத்தை உணரலாம். பின்குறிப்பு – ஒன்றும் செயல்களால் தன்னை மறக்கலாம். #திருமந்திரம் |
சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர் சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர் சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட ஆனந்தர் சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே. திரு - 2308 அப்படி சிவனை சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர் என்றும், அப்படி சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர் என்றும், அப்படி சார்ந்தவர் விரும்பு ஏற்ற ஆனந்தர் என்றும் அழைக்கப்படுவர். அப்படி சார்ந்தவர் சத்தமான அருள் தன்மை உணர்ந்தவரே. பின்குறிப்பு – சிவனை சார்ந்தவர் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் சத்தம் என்ற நாத அனுபவம் உள்ளவரே. #திருமந்திரம் |
தீண்டற்கு அரிய திருவடி நேயத்தை மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித் தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே. திரு - 2307 தீண்டுவதற்கு அரிதான திருவடியில் அன்புடன் கவனம் வைத்து மற்ற கவனத்தில் இருந்து மீண்டு அருளால் விதிவழியே சென்று தூண்டிச் சிவஞானத்துடன் வினைகளைக் கடந்து முன்னேறி சிவனுடன் சாரலும் ஆகும். பின்குறிப்பு – உபதேசப் பொருள் மேல் கவனம் வைத்து சிவனுடன் பற்றலாம். #திருமந்திரம் |
ஆறாது அகன்று தனையறிந் தானவன் ஈறாகி யாவினும் இயலாவும் தனில்எய்த வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள் தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே. திரு - 2306 முப்பத்து ஆறையும் கடந்து தன்னை அறிந்தவன் இரண்டுபட்டதில் இருந்த இயல்பாகவும் தன்னை வழிநடத்த எல்லாவற்றிற்கும் வேறாகி வெளியே சென்று வீடுபெறு அடைந்தான். அந்த அருள் தேறமுடியாம தெளிவுபெற்ற தீண்டாச் சீவமாகும். பின்குறிப்பு – தத்துவ குப்பைகளை கடந்தவரே தீண்டச் சீவத்தை அடைகிறார். #திருமந்திரம் |
மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப் பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள் ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே. திரு - 2305 பொம்மை யானைக்குள் புகுந்து செய்யும் செயல் போல் படைத்த பூதங்களைக் கொண்டு படைத்த ஆதி இந்த பூவியில் பலவகை போதமுடன் கூட்டத்தை உண்டாக்கி ஆவியை நாட்டியது அரனது அருளாகும். பின்குறிப்பு – உடல்கள் பலவாக உருவம் கொண்டு இறையருளால் வாழ்கிறோம். #திருமந்திரம் |
பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும் போதம் புணர்போதம் போதமும் நாதமும் நாத முடன்நாக நாதாதி நாதமும் ஆதன் அருளின் அருள்இச்சை யாமே. திரு - 2304 பலவகை மாற்றங்கள் அடைபவை, மாற்றம் அற்றவை, அடுத்ததால் மாற்றம் அடைபவை, உணர்பவை, கூடி உணர்பவை உணர்வும் ஓசையுமாய் இருக்கிறது. ஓசையுடன் ஓசையின் ஆதாரமும் ஓசையும் துவக்கியவனின் அருளின் அருள் இச்சை ஆகும். பின்குறிப்பு – எல்லாம் நாதத்தில் ஒடுக்கமடைகிறது. #திருமந்திரம் |
ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள் பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப் பேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே. திரு - 2303 சூரிய உதயத்தால் வரும் பலவகை மாற்றங்கள் அதனதன் தன்மையால் வினைபுரிகிறது. அப்படி நிகழ ஆதவன் தன் கதியால் அவை வழி நடத்த அதனதன் தன்மைக்கு ஏற்ப அருள் பேதம் உண்டாகிறது. பின்குறிப்பு – ஒர் இறை பலவகை படைப்புகளுக்கு ஆதாரம். #திருமந்திரம் |
அருளான சத்தி அனல் வெம்மை போல பொருள் அவனாகத்தான் போதம் புணரும் இருள் ஒளியாய் மீண்டு மும்மல மாகும் திருவருள் ஆனந்தி செம்பொருளாமே. திரு - 2302 அருளான சத்தி சூட்டின் வெப்பம் போன்றது பொருள் அவனாக இருப்பதால் போதம் புணரும். இருள் ஒளியாய் மீண்டு மும்மலமாய் ஆகும். திருவருளால் ஆனந்திக்க செம்மையான பொருளாகுமே. பின்குறிப்பு – இறையருள் திருவருளாகி ஆனந்தம் அருள்கிறது. #திருமந்திரம் |
அவமும் சிவமும் அறியார் அறியார் அவமும் சிவமும் அறிவார் அறிவார் அவமும் சிவமும் அருளால் அறிந்தால் அவமும் சிவமும் அவனரு ளாமே. திரு - 2301 அவம் என்ற தேவையற்றதும் சிவம் என்ற அத்தியாவசியத்தையும் அறியாதவர்களே அறியாதவர்கள். அவம் என்ற தேவையற்றதும் சிவம் என்ற அத்தியாவசியத்தையும் அறிந்தவர்களே அறிந்தவர்கள். இதை அருளால் அறிந்தால் இரண்டுமே அவன் அருள் ஆகும். பின்குறிப்பு – தேவையை தேவையற்றதை அவன் அருளால் அறியலாம். #திருமந்திரம் |
திருந்தினர் விட்டார் திருவில் நரகம் திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம் திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம் திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே. திரு - 2300 மனம் திருந்தியவர்கள் விட்டார்கள் திரு அற்ற நரகத்தை. திருந்தியவர் விட்டார் திருவுடையவர்கள் சுவர்கத்தை. திருந்தியவர்கள் விட்டார் செழுமையான மலர்களின் கூட்டத்தை. திருந்தியவர் விட்டார் சிவமாக இருந்தபடி அவமானதை. பின்குறிப்பு – திருந்தியவர் இன்பதுன்ப என்ற இருமையை விட்டோழித்தார்கள். #திருமந்திரம் |
எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின் எய்தினர் செய்யும் இருஞான சத்தியின் எய்தினர் செய்யும் இருஞால சத்தியின் எய்தினர் செய்யும் இறையருள் தானே. திரு - 2299 அடைந்தவர் செய்யும் இருமையான மாயா சத்தியின் அடைத்தவர் செய்யும் இருமையான ஞான சத்தியின் அடைந்தவர் செய்யும் இருமையான உலக சத்தியின் அடைந்தவர் செய்யும் இறையருள் தானே. பின்குறிப்பு – இறையருளாளே இரண்டுபட்டதை சமமாக செய்யலாம். #திருமந்திரம் |
சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர் ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர் பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர் ஆருங்கண் டோ ரார் அவையருள் என்றே. திரு - 2298 சிவத்துடன் சேர்பவர் ஐம்மலம் தீர்ந்தவர். ஒன்றிட உணராதவர் ஐம்மல இருள் உற்றவர். உலகத்தின் பார்வைக்கு விண் நிற்கும் நரகம் புகும் தன்மையர். யார் கண்டு உணர்வார்களோ அவை அருள் என்று. பின்குறிப்பு – இறை அருளே எதையும் தீர்மானிக்கிறது. #திருமந்திரம் |
உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம் உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே. திரு - 2297 உயிருக்கு இச்சையை ஊட்டி பிறவிகள் தரும் சக்தி உயிர் மேல் இச்சை வாட்டி ஞானத்தை ஒழித்திடும். உயிருக்கு இச்சை ஊட்டி உடன்படுவதாலே உயிர் இச்சையை வாட்டி உயர்ந்த பதவியை அடையுமே. பின்குறிப்பு – உயிரை உணரும் இச்சை உயர்ந்த ஞானம் தரும். #திருமந்திரம் |
இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி இல்லதம் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச் சொல்வது சொல்லிடில் தூராகி தூரமென்று ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே. திரு - 2296 இல்லா தன்மையில் உள்ளதாகவும் எல்லாமாகவும் தானாகி இருப்பிடம் அன்று உள்ளதுமாய் இருக்கும் அண்ணலைச் சொல்வது சொல்லிடின் தூரத்திலும் தூரம் என்று ஒல்லை உணர்ந்தால் உயிருக்கு உயிர் ஆகும். பின்குறிப்பு – இறை இருப்பு உயிர் இருப்புக்கு உயிர் போன்றது. #திருமந்திரம் |
தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர் கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும் பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே. திரு - 2295 தொழில்படுதல் இச்சை அடைதல் ஞானத்துடன் இருப்பது சிவத்தின் தொடர் உண்மையே. கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும். பழிக்கப்படாத காரண காரியம் தவிர்த்து அழிவற்ற சாந்தாதீதத்தை அடைந்தவன் சிவனாமே. பின்குறிப்பு – பழியற்று அதீதம் அடைபவரே சிவனாகிறார். #திருமந்திரம் |
உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம் உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம் உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே உயிர்ச்சொல் அன்றி அவ்வுளத்து ளானே. திரு - 2294 உயிருக்கு அறியும் தன்மையானது உண்மையானது. உயிரின் இச்சை மானம். உயிருக்கு கிரியை உயிர்மாயையின் சூக்கம். உயிருக்கு இவைகளை ஊட்டுவோன் ஊட்டும் அவனே. உயிர் என்ற சொல் அன்றி அவ்வுள்ளத்தில் உள்ளானே. பின்குறிப்பு – உயிரின் இயல்பை ஊட்டியவன் உயிரான இறையே. #திருமந்திரம் |
ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம் தானுறும் இச்சை உயிராகத் தற்பரன் மேனிகொண்டு ஐங்கரு மத்தவித் தாதலான் மோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே. திரு - 2293 ஞானம் என்பது தனது மேனியான உடல். கிரியை என்ற செயல்களே நடு அங்கம். அதில் உண்டாகும் இச்சைக்கு காரணம் உயிர். அப்படி உயிராக இருக்கும் தனது தலைவன் உடலைக் கொண்டு ஐந்து தொழில்படும் கருவிகளால் செயல்படுவதால் மோனிகள் ஞானத்து முத்திரை பெற்றார்கள். பின்குறிப்பு – அமைதியடைந்தவர்கள் தனிச்சிறப்பு பெற்றார்கள். #திருமந்திரம் |
தன்னை அறிந்து சிவனுடன் தானாக மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும் பின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே. திரு - 2292 தன்னை அறிந்து சிவனுடன் தானாக இருப்பதை உணர அழுக்கு எண்ணங்களும் தீய குணமும் அழிந்திடும் தொடரும் பிறப்பும் அறுபடும் அடுத்து ஆறுவகை முத்தியும் ஆறு வழி பேரோளியும் நல்ல ஞான முத்திரையும் வாய்க்கும். பின்குறிப்பு – இறை உணர ஞானம் வளர்ந்து மேன்மை அடையலாம். #திருமந்திரம் |
தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கே தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும் தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே. திரு - 2291 தத்துவ ஞானம் அறிய தலைபட்டவர்க்கே தத்துவ ஞானம் தலைப்படலாய் விளங்கும். தத்துவ ஞானத்தால் தான் அவன் என்ற தத்துவ ஞானத்துடனே தொடங்குமே. பின்குறிப்பு – தத்துவத்தை அறிய தலைப்பட்டால் தானே அவன் என்ற தத்துவம் புரியத் தொடங்கும். #திருமந்திரம் |
தானே அறியான் அறிவிலோன் தானல்லன் தானே அறிவான் அறிவு சதசத்தென்று ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத் தானே அறிந்து சிவத்துடன் தங்குமே. திரு - 2290 தானாகவே அறியமாட்டார் அறிவற்றவர். தானாக இல்லாதவர் தானே அறிவார் அறிவு எங்கும் விரவியது என்று. ஆனால் இரண்டும் அரனது அருளாய் நிற்கத் தானே அறிந்து சிவத்துடன் தங்குமே. பின்குறிப்பு – அவன் அருளாலே அவனை அடையலாம். #திருமந்திரம் |
சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச் சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும் சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச் சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே. திரு - 2289 உள்ளதும் மாற்றம் கண்டதும் பலவானதும் சித்தும் அசித்தும் சிவசித்தாய் நிற்கும். சுத்தம் அசுத்தம் என அறியாத துரியத்தில் சுந்தர மூன்றுடன் சொல் அற்று இருப்பார்களே. பின்குறிப்பு – துரியம் அடைந்தவர் எதனுடனும் இசைவு கொள்கிறார். #திருமந்திரம் |
அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும் அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும் அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே. திரு - 2288 அறிவிக்க வேண்டாம் அறிவற்றவற்கும் சோர்வானவற்கும். அறிவிக்க வேண்டாம் அறிவில் சிறந்தவராக நினைப்பவற்கு. அறிவால் தன் அறியாமை உணர்ந்து கேட்பவற்கே அறிவிக்க தானாக அறிவார் அறியவேண்டியவர். பின்குறிப்பு – ஏற்க தகுதி அற்றவற்கு அறிவிக்க வேண்டாம். #திருமந்திரம் |
ஆனந்த மாகும் அரனருட் சத்தியில் தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து ஊன்அந்த மாய் உணர் வாய்உள் உணர்வுறில் கோன்அந்தம் வாய்க்கும் மகாவா கியமாமே.திரு - 2287 ஆனந்தமே ஆகும் அரன் அருள் சத்தியால். தானே தன்னை முடிவுக்கு வரச்செய்து உயிரை தானாக சமாதி செய்து உடலை முடிவாகக் கொண்டு உணர்வை உள் உணர்வில் வைக்க சிறந்த முடிவு வாய்க்கும் இது மகாவாக்கியமே. பின்குறிப்பு – ஆனந்தம் அடைந்தவரே சமாதி சாதிக்க வல்லவராகிறார். #திருமந்திரம் |
தான்அவ னாகிய ஞானத் தலைவனை வானவ ராதியை மாமணிச் சோதியை ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை ஊனமிலாள்தன்னை ஊனிடைக் கண்டதே. திரு - 2285 தானே அவன் என்ற ஞானத் தலைவனை வானவர்களுக்கும் மூலமானவனை மாமணிச் சோதியை குறைவற்ற ஞானத்தின் இனிமையான அருள் சத்தியை ஊனமில்லாதவளை உடமடையும் உடலிடத்தே கண்டதே. பின்குறிப்பு – உடல் கொண்டு இறையை உணரலாம். #திருமந்திரம் |
அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியா திருந்தேன் அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே. திரு - 2284 அறிகின்ற முப்பத்தாறும் அறிகின்ற என்னை அறியாமல் இருந்தேன் அறிபவனே நீ என்று அருள் செய்தார் நந்தி. அறிகின்றதே நான் என்று அறிந்துக் கொண்டேனே. பின்குறிப்பு – அறிவதற்கு ஆதாரமானதே நான். #திருமந்திரம் |
தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை தான்தரு ஞானம் தன் சத்திக்குச் சாதனாம் ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கு ஒளி யாமே. திரு - 2283 உணர்ந்த பழைமையும் முக்தியும் சூழும் சத்தியும் திரண்டு உயிர் பெறும். மற்றவை பெற்ற ஞானத்தால் தன் சத்திக்கு சாதகமாகும். ஊனமற்ற ஒளி உடலுக்கு நல்லொளியாமே. பின்குறிப்பு – ஞானத்திற்கு ஏற்ப வாழ்தல் அமையும். #திருமந்திரம் |
தொலையா அரனடி தோன்றும் அம் சத்தி தொலையா இருளொளி தோற்ற அணுவும் தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித் தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே. திரு - 2282 மறைந்திடாத அரன் அடி தோன்றும் அதுவே சத்தி. மறைந்திடா அடர் இருளில் தோற்ற அணுவும் மறைந்திடாத பழகிய ஞானத்தின் தொன்மையால் விரும்பமுடன் மறைந்திடாத முழுமையும் முக்கியால் தோயும். பின்குறிப்பு – சமாதியின் முக்தியால் சகலமும் விடுபடும். #திருமந்திரம் |
தான்அவ னாகும் சமாதிகை கூடினால் ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம் ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே. திரு - 2281 சமாதி கைகூடினால் தான் அவனாதல் நிகழும். உண்டான அழுக்குகள் அறுபடும், எனது என்ற பசுத் தன்மை போகும். ஈனமற்ற காயம் இருக்கும் இரு நிலத்து ஊனங்கள் எட்டும் ஒழித்து ஒன்றுபடுபவற்கே. பின்குறிப்பு – சமாதி அடைந்தவர் சிவமாகிறார். #திருமந்திரம் |
செயலற் றிருக்கச் சிவானந்த மாகும் செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார் செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார் செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே. திரு - 2280 எச்செயலும் செய்யாமல் இருக்க சிவானந்தம் உண்டாகும். அப்படி செயலற்று இருப்பவர் சிவயோகம் தேடமாட்டார். செயலற்று இருப்பவர் உலகத்துடன் கூடமாட்டார். செயலற்று இருப்பவருக்கே செய்தி உண்டாகும். பின்குறிப்பு – சும்மா இருப்பவற்கே சுகச் செய்தி உண்டு. #திருமந்திரம் |
முன்னை அறிவினில் செய்த முதுதவம் பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம் தன்னை அறிவது அறிவாம் அஃ தன்றிப் பின்னை அறிவது பேயறி வாகுமே. திரு - 2279 முன்பு இருந்த அறிவைக் கொண்டு செய்த தவத்தின் முழுமையே மீண்டும் அறிவை பெற்றால் அறியலாம். தன்னை அறிவதே அறிவாம். அப்படி இன்றி மற்றதை அறிவது பேயறிவாமே. பின்குறிப்பு – பிறவி தோறும் அறிவு வளர்வதை தன்னை அறியும் தவத்தால் அறியலாம் மற்றவை அறிவது தேவையற்றாகும். #திருமந்திரம் |
ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும் தாடித் தெழுந்த தமருக ஓசையும் பாடி எழுகின்ற வேதாக மங்களும் நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே. திரு - 2278 ஆடிய பாதத்தில் வந்து போவதால் அசைகின்ற காற்றும் வளர்ந்து எழுந்த தமருகத்தின் ஓசையும் பாடி எழுகின்ற வேதாகமங்களும் நாடியின் உள்ளே நான்கண்டவாறே இருக்கிறது. பின்குறிப்பு – யோகியின் நாடிகள் தரும் அனுபவமே வேதங்களின் சாரமாக இருக்கிறது. #திருமந்திரம் |
ஆனைகள் ஐந்தம் அடங்கி அறிவென்னும் ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு வானகம் ஏற வழிஎளி தாமே. திரு - 2277 புலன்களான ஆனைகள் ஐந்தும் அடங்கி அறிவென்ற ஞானத் திரியைக் கொளுத்தி அதனில் பொருந்தி உனை இருள் நீங்கும்படி நோக்கும் ஒருவற்கு வானகம் ஏற வழி எளிதாக அமையும். பின்குறிப்பு – புலன்களை அடக்கி ஞான ஒளியால் தன்னை அறிபவர் வீடுபெறு அடைவார். #திருமந்திரம் |
நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு அருக்கனும் சோமனும் அங்கே அமரும் திருத்தக்க மாலும் திசைமுகன் தானும் உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே. திரு - 2276 நெருப்பு இருக்கிறது நீர் இருக்கிறது, காற்றும் அங்கே இருக்கிறது. அருக்கன் சோமன் என்பவரும் அங்கே அமரும். உயர்வு பொருந்தும் மாலும் பிரம்மனும் உருத்திர சோதியும் உள்ளத்திலே இருக்கின்றார்களே. பின்குறிப்பு – உள்ளத்திலேயே உள்ளன பலவகை சிறப்புகள். #திருமந்திரம் |
தானே சிவமான தன்மை தலைப்பட ஆன மலமும்அப் பாச பேதமும் ஆன குணமும் பரான்மா உபாதியும் பானுவின் முன்மதி போல்பலராவே. திரு - 2275 தானே சிவன் என்ற தன்மை உணர அழுக்குகளும் பாச பேதமும் உண்டான குணமும் தூய்மையிலும் இருக்கும் துன்பங்களும் சூரியன் முன் நிலா போல் வெளிராது. பின்குறிப்பு – தானே அவன் என்பது தலைப்பட துன்பங்கள் விலகும். #திருமந்திரம் |
கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரை நிறஞ்சேர் ததிமத்தன் மலத்தே நின்றங்கு அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்த்து கிரங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே. திரு - 2274 மக்கிய ஒலை, பனைமரத்து ஆனையில் செய்த கொள்ளிவட்டம், கடலின் அலை, நிறமுடைய மத்தின் கடை என நின்று அறம் கொண்ட சுவர்க நரகம் என புவிசேர்ந்து மயங்காத உயிர் அருளால் இவை நீங்குமே. பின்குறிப்பு – புவி சேரா உயிரான இறை அருளால் எல்லா மயக்கமும் நீங்கும். #திருமந்திரம் |
வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான் வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே. திரு -2273 வேறுபாடுத்தினான் இரு பாதி என மெய்க்கூட்டை. வேறுபடுத்தினான் என்னை எங்கு வேண்டுமோ அங்கே விட்டு உய்த்தான். வேறுபடுத்தாத அருளாகும் கேவலத்தே விட்டு வேறுபடுத்தாது அத்தன் மேவி நின்றானே. பின்குறிப்பு – வேறுபடுத்தும் உடல்கள் இருந்தாலும் கேவல அவத்தையால் உடன்பட்டும் இருக்கிறான். #திருமந்திரம் |
சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில் அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச் சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்து அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே. திரு - 2272 சுத்த அதீதம் சகலத்தில் கலந்து மறைந்தாலும் இறை அருள் நீங்காது. அந்நிலையில் தானாக சித்த சுகத்தை தீண்டாமல் சமாதி செய்து அத்தனோடு ஒன்றுவதற்கு அருள் அமுதமாகும். பின்குறிப்பு – அதீதம் அடைந்தவர் உலக சுகத்தில் இருப்பினும் சமாதி அடைவர். #திருமந்திரம் |
ஆன மறையாதி யாம் உரு நந்திவந்து ஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில் ஆன வகையை விடும்அடைத் தாய்விட ஆன மாலதீதம் அப்பரந் தானே. திரு - 2271 செய்யப்பட்ட மறைகளுக்கு ஆதியானதே நந்தி உருவில் வந்து எல்லாருக்கும் அருள் செய்ய நனவாகும் அவத்தையில் ஆன வகைகளை அடைந்து விட்டுவிட அடையும் அதீதமே இந்த பரம் ஆகும். பின்குறிப்பு – அதீதமே பரத்தை காட்டும். #திருமந்திரம் |
காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல் ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத் தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே. திரு - 2270 நெருப்பில் காய்ந்த இரும்பு கனலை விட்டு எடுத்தாலும் அதன் கனல் அதில் தங்கி இருப்பதைப் போல் துரியத்தால் அடைந்த அனுபவம் அதை கடந்த பின்பும் இருந்து கருமத்து தூசு ஒட்டாமல் காக்கும். பின்குறிப்பு – துரிய அனுபவத்தால் கருமத்தை சரியாய் கையாளலாம். #திருமந்திரம் |
எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர் பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச் செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே. திரு - 2269 எல்லாவற்றை பற்றிய அறிவு தனக்குள் புகுந்திட எங்கும் நானே என்றாகி நிற்கும் நல்ல துரியம் புரிந்து கொண்ட நல்ல உயிர் பொல்லாத முப்பத்தாறில் அழிந்து போகாது எளிமையாய் விட்டு விலகாத சிவகதியை சென்று சேரும் அன்றே. பின்குறிப்பு – யாவையும் அறியும் துரியம் அடைந்தவர் சிவகதி அடைவார். #திருமந்திரம் |
உதயம் அழுங்கில் ஒடுங்கல்இம் மூன்றின் கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து அதிசுப னாய்அனந் தான் அந்தி யாகுமே. திரு - 2268 துவக்கம் வளர்தல் அடங்கல் இம்மூன்றின் கதி என நின்றவர் சாக்கிரனாகி சுழுத்தி பதிதரு சேதனன் பற்ற வேண்டிய துரியத்து அதிசுபனாய் அனந்தன் என ஆனால் நற்துவக்கம் ஆகுமே. பின்குறிப்பு – சுழுத்தி துரியம் அடைந்தவர் அதிசுபனாய் ஆகிறார். #திருமந்திரம் |
ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது தான்மா மறையறை தன்மை அறிகிலர் ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால் ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே.திரு - 2267 ஆன்மாவே குழைந்தை என்று ஆனது என்பது தன்னையும் மறையையும் அதன் தன்மையும் அறியாதவர்கள் அறிவதில்லை. ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன் என்றால் ஆன்மாவும் இல்லை இருபத்து ஐந்து தத்துவங்களும் இல்லை. பின்குறிப்பு – ஆன்மாவிற்கு தாய் உடல் தந்தை உயிர். #திருமந்திரம் |
காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம் மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன் மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக் காலனும் இல்லை கருத்தில்லை தானே.திரு - 2266 காற்று நெருப்பு நீர் மண்ணுடன் ஆகாயம் மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன் என ஐந்தையும் கடந்து நிற்க வல்லவர்களுக்கு காலன் என்ற இறப்பும் கருத்து முரனும் இல்லை. பின்குறிப்பு – பூதம் மற்றும் பூத நாதர்களை கடந்து உணர்பவர் காலம் கடந்தவராகிறார். #திருமந்திரம் |
ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர் ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல் ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே. திரு - 2265 மறைமுகமாக உள்ள கிணறு போன்ற அகத்துள்ளே ஆமைகள் உறையும் அழுவைகள் ஐந்துள்ளன. வாய்மையுடன் மாறாமல் ஒடுங்கினால் வாழ்நாள் எல்லை விரியும். பின்குறிப்பு – அமைதியாய் இருந்து ஐந்தையும் ஒடுங்க ஆயுள் கூடும். #திருமந்திரம் |
வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச் செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி யாமே. திரு - 2264 எவ்வளவு விட முடியுமோ அவ்வளவு விட்டுவிடுங்கள் சினத்தை. சிந்தை செல்லும் அளவிற்கு செல்ல விடுங்கள் சிந்தையை. அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி அடையலாம். பின்குறிப்பு – சினம் ஏற்படாதபடி புரிதல் உண்டானால் அருள் பெருகி இறையை அடையலாம். #திருமந்திரம் |
கேவலம் தன்னில் கலவச் சகலத்தின் மேவும் செலவு விடவரு நீக்கத்துப் பாவும் தனைக்கண்டால் மூன்றும் படர்வற்ற தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே. திரு - 2263 கேவல அவத்தையில் கலவு சகலம் அதில் மேவும் செலவு அசுத்தம் விடவரும் நீக்கிட பாவும் இதை அடைந்தால் மூன்றும் படர்வது தடுக்கப்பட்டு தீதற்ற சாக்கிர அதீதம் அடைந்தும் சுத்தமாகும். பின்குறிப்பு – வாழ்வின் சிக்கல்கள் கலவானால் தெளிவடைவதே அதன் செலவு இதனால் அதீதம் அடைந்து சுத்தமாகலாம். #திருமந்திரம் |
காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல் நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லை ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே. திரு - 2262. அடையாளம் காட்டும் பதினொன்றும் கைகலந்தால் உடல் முடிவு அடைந்து முற்றிவிட்டால் நந்தி என்தை தவிர வேறு அல்ல. எதற்கும் ஆடாமல் அது விதி என்றே நினைத்தால் ஈடற்ற மதி திடம் என எண்ணலும் ஆமே. பின்குறிப்பு – அவத்தைகளை கடந்து உடல் விட்டவர் நந்தி எனப்படுவர். #திருமந்திரம் |
புருட னுடனே பொருந்திய சித்தம் அருவமொ டாறும் அதீதத் துரியம் விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும் அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே. திரு - 2261 படைத்ததுடன் பொருந்திய சித்தம், அருவத்துடன் ஆறும் அதீதத் துரியம் விரியும் சுழுத்தியின் மிகுந்துள்ள எட்டும் அரிய பதினொன்றும் அவத்தையே. பின்குறிப்பு – அனுபவங்கள் அனைத்தும் கடக்க வேண்டிய அவத்தைகளே. #திருமந்திரம் |
அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம் முஞ்சில்ஓங் காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில் வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம் கிஞ்சுகக் செவ்வாய்க் கிளிமொழி கேளே. திரு - 2260. ஐந்தாவது ஆதாரத்தில் அமுதும் ஏழாவது ஆதாரத்தில் ஆனந்தமும் முடிவில் ஓங்காரமும் அடைந்து ஒன்பதில் ஓர்ந்து பதினொன்றில் வஞ்சகமாய் நின்றால் மீண்டும் உடலையே அடைவார் என கூறியதை கூறும் கிளியின் மொழி கேள். பின்குறிப்பு – அனுபவம் அற்றவர்கள் பிறரின் அனுபவத்தையே கூறுகிறார்கள். #திருமந்திரம் |
ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல் மேனிஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்க் தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை ஈனமி லா அண்டத்து எண்மடங்கு ஆமே. திரு - 2259 ஆனந்தம் என்பது அண்டத்தின் நீரால் ஆனது. உடல் ஐந்தாக விரிந்து முப்பத்தாறாக வியாபித்துள்ளது. அது முடிவற்றதாக விரிந்துள்ளது. குற்றமற்ற அண்டத்தில் எண் போல் தொடர்கிறது. பின்குறிப்பு – அண்டத்தின் தன்மைக்கு ஏற்ப உயிர்களின் அளவும் வடிவும் மாறுபடுகின்றது. #திருமந்திரம் |
பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம் எறிகடல் ஏழின் மணல்அள வாகப் பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச் செறியும் அண் டாசனத் தேவர் பிரானே. திரு - 2258 நாம் அறிந்த அண்டம் காணாத அண்டம் போர்வையான கடல் ஏழின் மணல் எவ்வளவு அளவோ அவ்வளவு போல் இருக்கிறது. பொறிகள் கொண்ட ஒளி பொன் ஒளி ஒப்பு நன்றாக விளங்கி அண்டாத்திற்கும் தேவர் தலைவன் இருக்கிறார். பின்குறிப்பு – அறிந்த அறியாத எல்லா அண்டத்திற்கும் ஒருவனே தேவர் பிரான். #திருமந்திரம் |
சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால் வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப ஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம் மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே. திரு - 2257 அமைதியை அடையும் நனவைச் சொல்வதென்றால் அமைந்த வேதியல் மாற்றம் தந்த கனவு எனலாம். இதிலிருந்து ஒய்ந்து நிதானமே அடைந்த சுழத்தி எனலாம். அழிக்கப்படும் நிற்குணமே மாசற்ற துரியம். பின்குறிப்பு – உடல் கொண்ட வேதியல் வினையே கனவு இதை கடந்த நிலையே துரியம். #திருமந்திரம் |
நின்றான் அருளும் பரமும்முன் நேயமும் ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும் சென்றான் எனைவிடுத்து ஆங்கிச் செல்லாமையும் நன்றான ஞானத்தின் நாதப் பிரானே. திரு - 2256 மனதை ஒருநிலைப்பற்றி நின்றவன் அருளும் பரமும் நேயமும் ஒன்றே என மாறும் உருவும் துணையாவதும் என்னை விலகியவனை நோக்கி தானும் விலகாத நிலையும் நன்றான ஞானத்தின் நாதப்பிரானே. பின்குறிப்பு – அறியாமையின் பின் செல்லாதவர் நாதாப்பிரான்கிறார். #திருமந்திரம் |
ஐஐந்து மட்டுப் பகுதியும் மாயையும் பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே. திரு - 2255 இருபத்து ஐந்து கிழ்மையானதும் மாயையும் பொய்யாக கண்ட மாமாயை தானும் புருடன் கண்டு மயக்கும் படியாய் உள்ள யாவையும் இல்லை என்றாக்கி உய்யும் பராவத்தை எண்ணுதலே சுத்தமாகும். பின்குறிப்பு – தத்துவங்கள் மற்றும் மாயையால் உண்டான பலவற்றை கடந்து எண்ணுதலே சுத்தமாக்கும். #திருமந்திரம் |
ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப் பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில் நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம் அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே. திரு - 2254 ஐந்தும் சகலத்தின் அருளால் புரியாமல் குவிந்திடும் சுத்த அவத்தை பதைப்பினில், நந்தி பராவத்தை நாடிட சுடர்முனம் அந்தி இருள் போலும் ஐம்மலம் மாறுமே. பின்குறிப்பு – அதிகாலை இருள் போல் அகலும் நந்தி என்ற குரு அருள் பெற்றால். #திருமந்திரம் |
துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி விரியப் பரையில் மிகும்நாதம் அந்தம் புரியப் பரையில் பராவத்தா போதம் திரிய பரமம் துரியம் தெரியவே.திரு - 2253 துரியத்தில் ஓர் ஐந்தும் சொல்களின் பொருளும் விரிய, பரையில் மிகுந்திடும் நாதம் அந்தமாக புரிய, பரையில் பராவத்தை போதம் திரிய, பரமம் துரியம் தெரியவே. பின்குறிப்பு – துரிய அனுபவம் அவத்தைகளை அழித்துவிடும். #திருமந்திரம் |
ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகி வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி ஈறார் பரையின் இருளற்ற தற்பரன் பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே. திரு - 2252 தத்துவங்கள் முப்பத்து ஆறும் நம்மை விட்டு அகன்று அறிவால் வேறுபடுத்தி தான் என்ற யகாரமாய் மிக ஓங்கி கிழானவர்கள் சொல்லும் இருமை பண்பற்ற தற்பரன் தகுதியானவற்கே சிவாய என அடங்கும் அதன்பின் முக்தி வாய்க்கும். பின்குறிப்பு – தத்துவம் கடந்த ஒருமை அடைந்த பின்பே முக்தி வாய்க்கும். #திருமந்திரம் |
மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே. திரு - 2251 மரத்தை மறைத்தபடி இருந்தது பெரிய மதயானை, மரத்தால் மறைக்கப்பட்டது பெரிய மதயானை, பரமாகிய இறையை மறைத்தது படைக்கப்பட்ட பூதம். பரத்தில் மறைந்தது படைக்கப்பட்ட பூதம். பின்குறிப்பு – மறைப்பதை அறிந்தால் உண்மை விளங்கும். #திருமந்திரம் |
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம் தன்னை மறைத்தது தன்கர ணங்களாம் தன்னின் மறைந்தது தன்கர ணங்களே. திரு - 2250 தங்கத்தை மறைத்தது தங்க அணிகலன்கள், தங்கத்தில் மறைந்தது தங்க அணிகலன்கள். தன்னை மறைத்தது தனது கரணங்களே, தன்னில் மறைந்தது தன் கரணங்களே. பின்குறிப்பு – வினைகளால் நாம் மறைந்து இருக்கிறோம், வினைகள் நம்மை மறைத்து விடுகிறது. #திருமந்திரம் |
பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய் தன்னை அறியில் தயாபரன் எம்இறை முன்னை அறிவு முடிகின்ற காலமும் என்னை அறியலுற்று இன்புற்ற வாறே. திரு - 2249 பின்னாளில் அனுபவமாக அறியப்படும் சிறப்புப் பெற்ற தவத்தின் உண்மை செய்யத்தூண்டி தன்னை அறியச் செய்யும் தயாபரன் எம்மிறை. முன்னே பெற்ற அறிவு முடிகின்ற காலமும் என்னை அறிந்து இன்புற்றவாறே. பின்குறிப்பு – தவத்தினைச் செய்வதாலும் அறிவு முடிவுக்கு கொண்டுவருவதாலும் இறையை அறியலாம். #திருமந்திரம் |
கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும் உலப்புஅறி யார்உட லோடுஉயிர் தன்மை அலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார் குறிப்பது கோலம் அடலது வாமே. திரு - 2248 கடலால் சுழப்பட்டுள்ள உலகம் ஏழும் கலந்திருப்பதை அறிபவர்கள் இல்லை. உடலுடன் உயிர் இருக்கும் தன்மையின் உலப்பு அறிபவர்கள் இல்லை, முடிவை அறிந்து இங்கே அரசை ஆள இயலாதவர்கள் குறிப்பது அடக்கமற்ற கோலத்தையே. பின்குறிப்பு – உண்மை அறியாதவர்களே ஆர்பாட்டம் செய்கிறார்கள். #திருமந்திரம் |
சார்வாம் பரம்சிவன் சத்தி பரநாதம் மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப் பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதி தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே. திரு - 2247 சார்ந்து இருக்க வேண்டியது பரம்சிவன் சத்தி, பரநாதம், மேலாய விந்து, சதாசிவம் கொஞ்சம் வளந்தபின் பாலாய் பிரமன் அரி அமராபதி, அடுத்து தேவாம் உருத்திரன் காணும் பொழுதில் ஈசன் எனப்படுவர். பின்குறிப்பு – மன ஒடுக்கத்தின் இறுதியில் ஈசனாகலாம். #திருமந்திரம் |
பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில் பரம்சிவன் மேலாம் பரநனவாக விரிந்த கனாவிடர் வீட்டும் கழுமுனை உரந்தரும் மாநந்தி யாம்உண்மை தானே. திரு - 2246 பரம்சிவன் இதைவிட மேலானதாம் பரமம் பரத்தில், பரம்சிவன் இதைவிட மேலானதாம் பரநனவாக, விரியும் கனாவை விடச் செய்யும் சுழுமுனை உரமாக இருக்கும் மாநந்தியாம் உண்மை தானே. பின்குறிப்பு – நல்ல குருவின் துணை உரம் போல் அமையும். #திருமந்திரம் |
சீவன் துரியம் முதலாகச் சீரான ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்தும் ஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியே மேவிய நாலேழ் விடுவித்துநின் றானே. திரு - 2245 சீவன் துரியம் முதல் சீரானதாக ஆக சிவன் துரியானந்தம் வரை அவத்தைகள் 1) சீவதுரியம், (2) சிவதுரியாதீதம், (3) பரநனவு, (4) பரகனவு, (5) பரசுழுத்தி, (6) பரதுரியம், (7) சிவநனவு, (8) சிவக்கனவு, (9) சிவசுழுத்தி, (10) சிவதுரியம் என பத்தும் கடந்த பராநந்தி உண்மைக்குள் வைத்தவன். அடுத்து மேவும் ஒன்றுடன் பதினொன்றையும் விடுவித்து நின்றானே. பின்குறிப்பு – யாவற்றையும் கடந்து நிற்கச் செய்தார் நந்தி. #திருமந்திரம் |
பரமா நனவின்பின் பால்சக முண்ட திரமார் கனவும் சிறந்த சுழுத்தி உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே தரனாம் சிவதுரி யத்தனும் ஆமே. திரு - 2244 பரத்தின் நனவால் பால்சகம் உண்டாக திரமான கனவும் சுழுத்தியும் உரமாக துணைஅமைதி அடைவதே துறவு. இத்தரமானவரே சிவதுரியத்தான். பின்குறிப்பு – நடப்பதையே கனவாக காண்பவர் தரமான சிவதுரியத்தார். #திருமந்திரம் |
பரதுரி யத்து நனவும் பரந்து விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத் தெரியும் சிவதுரி யத்தனு மாமே. திரு - 2243 பரமாகும் துரியத்தில் நனவும் பரந்து அகண்ட உலகம் அடையும் கனவும் மெய்யும் அமைதி அடையும். வடிவம் பெறும் சுழுத்தியும் கழிய தெரியும் சிவதுரியம் தானாகவே. பின்குறிப்பு – எண்ணங்கள் அழித்தவரே சிவத்தை உணர்வார். #திருமந்திரம் |
அணுவின் துரியத்தில் ஆன நனவும் அணுஅசை வின்கண் ஆனகனவும் அணுஅசை வில்பரா தீதம் கழுத்தி பணியில் பரதுரி யம்பர மாமே. திரு - 2242 அணு அளவே ஆன துரியத்தில் ஆகும் நனவும் அணு அளவே அசைவினால் ஆன கனவும் அணு அளவே அசைவில் பராதீதம் சுழுத்தி பணியில் பர துரியம் பரமாமே. பின்குறிப்பு – எண்ணமும் செயலும் இணைந்திருக்க பரமாகும். #திருமந்திரம் |
கருவரம்பு ஆகிய காயம் துரியம் இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார் குருவரம் பெற்றவர் கூடிய பின்னை இருவரும் இன்றிஒன் றாகி நின் றாரே. திரு - 2241 கருவை எல்லையாக கண்ட காயம் துரியத்தால் இருவராக கண்டால் பிறப்பு இறப்பு உண்டாகும். குருவின் வரம் பெற்றவர் ஒன்றாக இணைய இருவரும் இன்றி ஒருவராக நின்றாரே. பின்குறிப்பு – இரண்டுபட்ட மனம் குரு அருளால் ஒன்றாகிவிடும். #திருமந்திரம் |
உன்னை அறியாது உடலைமுன் நான்ஒன்றாய் உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய் தன்னை அறிந்தும் பிறவி தணவாதால் அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே. திரு - 2240 உன்னை அறியாமலேயே உடலை முன் நான் எது என அறிந்து ஒன்றவில்லை. உன்னை அறிந்து துரியத்தில் நின்று தன்னை அறிந்து தெளிவு பெற்றும் பிறவு உண்டானால் அப்படிப்பட்டவர் தேவர்கள் என்று அறிந்துகொள். பின்குறிப்பு – தன்னை அறிந்தபின் எடுக்கும் பிறவியே தெய்வீக பிறவி. #திருமந்திரம் |
விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய் இருந்த இடத்திடை ஈடான மாயை பொருந்தும் துரியம் புரியல்தா னாகும் தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே. திரு - 2239 மனம் சாக்கிரத்தில் விரிந்திடில் விளக்கு போல் தெளிவாய் செயல்படும். இருந்த இருண்ட மாயை பொருந்தும் துரியத்தால் புரிதர் உண்டாகும். துரியத்திலேயே நின்றால் தீமை அகலாது. பின்குறிப்பு – மன ஒடுக்கமே தீமைகளை அழிக்கும். #திருமந்திரம் |
நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின் மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும் மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும் அன்றே இவனும் அவன்வடி வாமே. திரு - 2238 சாக்கிரத்தில் நின்று நீள் துரியத்தில் கலந்தவன் அங்கே வாசனையால் நின்றிடம். கலந்தவன் வாசனை செய்ய மாயை மறைந்திடும். மறைந்த அன்றே இவனும் அவன் வடிவாக மாறுவார். பின்குறிப்பு – மனம் தன்வசப்பட்டவர் சிவன் வடிவம் பெறுவார். #திருமந்திரம் |
துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப் பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு உரிய வினைகள் நின்று ஓலமிட் டன்றே. திரு - 2237 துரியம் என்ற குதிரையில் இருந்த சீவனைப் பெரிய புலுக்குள்ளே புக விட்டு நரிகளை துரத்திய நாதர்க்கு உரிய வினைகள் நின்று ஓலமிட்டது. பின்குறிப்பு – துரியத்தில் சிறந்தவர் வினைகளை அழிக்கிறார். #திருமந்திரம் |
ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும் வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின் தூய அறிவு சிவானந்த மாகிப்போய் வேயும் பொருளாய் விளைந்தது தானே.திரு - 2236 ஆராயும் பொய்மை மாயை இது அகம் புறம் என இருக்கும். வாக்கும் மனமும் கடந்த அம்மயக்கத்தை அறிந்தால் தூய அறிவு சிவானந்தமாகி தேடிய பொருளாய் விளைந்தது தானே. பின்குறிப்பு – தன் செயல்களைக் கடந்தவனே இறை உணர்வான். #திருமந்திரம் |
பரமாம் அதீதமே பற்றறப் பற்றப் பரமாம் அதீதம் பயிலப் பயிலப் பரமாம் அதீதம் பயிலாத் தபோதனார் பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே. திரு - 2235 பரமாகும் அதீதத்தை பற்றிட பற்றிட. பரமாகும் அதீதத்தை பயிலப் பயில. பரமாகும் அதீதத்தை பயிலாத தபோதனார் பரமாகமாட்டார் பாசமும் பற்று என்று அறுபடாது. பின்குறிப்பு – அதீதம் பயிலாதவர் பரத்தை உணரமாட்டார். #திருமந்திரம் |
உரிய நனாத்துரி யத்தில் இவளாம் அரிய துரிய நனவாதி மூன்றில் பரிய பரதுரி யத்தில் பரனாம் திரிய வரும்துரி யத்தில் சிவமே. திரு - 2234 தனக்கே உரிய நினைவு கொண்ட துரியத்தில் இவனே இருக்கிறான். அரிய துரியத்தில் நனவாகும் முன்றில் பரிய பர துரியத்தில் பரனாம். திரிய வரும் துரியத்தில் சிவமே. பின்குறிப்பு – தானாக எழுப்பும் நினைவுகளில் இருந்து அதுவாக எழும்புவதே சிவத்தின் தன்மை. #திருமந்திரம் |
அஞ்சொடு நான்கும் கடந்துஅக மேபுக்குப் பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு நஞ்சுற நாடி நயம்செய்யு மாறே. திரு - 2233 ஐந்துடன் நான்கையும் கடந்து அகமே புகுந்திடுதல் தூரத்துணி அணியும் காலத்தில் பள்ளி துயில்கின்ற மென்னையானவளிடம் மிதமிஞ்சிய ஆசை கொண்ட வேந்தன் நஞ்சு பெற நாடி நயம் செய்வதைப் போன்றது. பின்குறிப்பு – அவசரமாய் தன்னை கவனித்தல் நஞ்சு உண்பதற்கு சமம். #திருமந்திரம் |
ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர் ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர் ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே ஆறாறுக்கு அப்பால் அரன்இனி தாமே. திரு - 2232 முப்பத்து ஆறு என்பதை கடந்தே அறிகிறார் அறியக்கூடியவர், முப்பத்து ஆறுக்கும் அடுத்தே அருளை பெறுகிறார் அருளை பெறுபவர், முப்பத்து ஆறுக்கு அடுத்து அறிபவர்க்கே முப்பத்து ஆறுக்கு அப்பால் அரன் இனிமை உண்டாக்குகிறது. பின்குறிப்பு – தத்துவக் கணக்கை கடந்தவரே உண்மையை அடைகிறார். #திருமந்திரம் |
சத்தி பராபரம் சாந்தி தனிலான சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து சத்திய மாயை தனுச்சத்தி ஐந்துடன் சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே. திரு - 2231 சத்தியாகிய பராபரம் அமைதியடைந்து சத்தி பரானந்தம் ஆகி தன்னில் சுடர்விந்து உண்டாக்கி சத்திய மாயை என்னும் சத்தி ஐந்துடன் சத்தியே உயிராகி அங்கத்தில் ஆறாக இருக்கிறது. பின்குறிப்பு – இறையே அறிவு ஆறாக அங்கத்தில் இருக்கிறது. #திருமந்திரம் |
அஞ்சும் கடந்த அனாதி பரன்தெய்வம் நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலி விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.திரு - 2230 பூதங்கள் ஐந்தையும் கடந்த அனாதி பரனே உயர்ந்தவன், நெஞ்சத்தில் ஆராய அவன் மலமற்றவன் பிறப்பற்றவன், கடந்து போகும் உயிர் உடல் என இரண்டையும் வேறுபடுத்திடவும் வஞ்சம் அற்றிடவும் வகை அறிந்தேனே. பின்குறிப்பு – ஏகனை உணர எல்லாம் சுத்தமாகிறது. #திருமந்திரம் |
மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏயும் உயிர்க்கே வலசகலத்து எய்தி ஆய்தரு சுத்தமும் தான்வந்து அடையுமே. திரு - 2229 மாயையை மாமாயை தாயாக இருந்து ஈன்றிட படைத்த பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏற்ற உயிருக்கே வலமாகி சகலத்தும் கொடுத்து படைப்பு தரும் சுத்தமும் தானாக வந்து அடையுமே. பின்குறிப்பு – மாயையும் நல்வழி அருள்வாள். #திருமந்திரம் |
அறுநான்கு அசுத்தம் அதிசுத்தா சுத்தம் உறும்ஏழு மாயை உடன்ஐந்தே சுத்தம் பெறுமாறு இவைமூன்றும் கண்டத்தால் பேதித்து உறும்மாயை மாமாயை ஆன்மாவி னோடே. திரு - 2228 அறுபத்து நான்கு அசுத்தம் முற்றிலும் சுத்தமாக சுத்தம், உள்ள ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம். பெறும் ஆறும் இவை மூன்றும் கண்டத்தால் பேதம் அடைந்து மாயையாக மாறுவது மாமாயை ஆன்மாவினோடு கூடி இருப்பதால். பின்குறிப்பு – மாயையில் சிக்கிய ஆன்மா சுத்தமடையாது. #திருமந்திரம் |
அப்பும் அனலும் அகலத்து ளேவரும் அப்பும் அனலும் அகலத்து ளேவாரா அப்பும் அனலும் அகலத்துள் ஏதெனில் அப்பும் அனலும் கலந்ததுஅவ் வாறே. திரு - 2227 நீரும் நெருப்பும் இடமளித்தால் வரும். நீரும் நெருப்பும் இடம் இருப்பதால் மட்டுமே வராது. நீரும் நெருப்பம் இடத்தில் இருப்பது ஏன் என்றால் நீரும் நெருப்பும் விரும்பிய அளவே. பின்குறிப்பு – விருப்பும் வெறுப்பும் இடமளிக்கும் அளவே இருக்கும். #திருமந்திரம் |
சாக்கிரத் தன்னில் அதீதம் தலைப்படில் ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம் நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம் வாக்கும் மனமும் மருவல்செய் யாவே. திரு - 2226 விழிப்புணர்வில் அதீதம் தலைப்பட்டால் செய்யப்பட்ட அந்த வயித்தவத்தில் ஆனந்தம் உண்டாகும். நோக்கமும் பிறப்பும் அற்றுப் போகும் முக்தியும் உண்டாகும். வாக்கும் மனமும் மாறுபாடு இல்லாது இருக்கும். பின்குறிப்பு – விழிப்புணர்வில் தீவிரம் முக்தியை அருளும். #திருமந்திரம் |
தன்னை அறியாது உடலைமுன் தான்என்றான் தன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான் உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால் பின்னையும் வந்து பிறந்திடும் தானே. திரு - 2225 தன்னை அறியாத நிலையில் உடலை தான் என்றவர் தன்னை முன்னே அறிந்தப்பின் துரியம் தனைக்கண்டார். அறிந்த துரியம் ஈசனோடு ஒன்றவில்லை என்றால் மீண்டும் வந்து பிறந்திடுவாரே. பின்குறிப்பு – உடல் கடந்த உண்மை புரிந்தாலும் இறையுணர்வில் ஒன்றாதவர் மீண்டும் பிறப்பார்கள். #திருமந்திரம் |
ஆறாறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடு ஈறாம் அதீதத் துரியத்து இவன்எய்தப் பேறான ஐவரும் போம்பிர காசத்து நீறார் பரம்சிவம் ஆதேய மாகுமே. திரு - 2224 தொடரும் முப்பத்து ஆறில் இருபத்து ஐந்து அவத்தையோடு இறுதியான அதீதத் துரியத்தை இவன் எய்திட சொல்லப்படும் ஐந்தும் போகும் பிரகாசத்தில் நீங்காத பரம்சிவம் அதுவாகவே உதயமாகும். பின்குறிப்பு – இறை உணர்தல் தானாகவே நிகழும். #திருமந்திரம் |
இருவிடை ஒத்திட இன்னருள் சத்தி மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக் குருவினைக்கொண்டருள் சத்திமுன் கூட்டிப் பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே. திரு - 2223 இரண்டு விடையும் ஒன்றே என உணர்த்தும் இனிமையான அருள் சத்தி மாறாத ஞானத்தால் ஆர்வம் கொன்டு குருவினை அடைந்து அவரது அருளால் சத்தி முன் கூடி பெற்ற பலங்கள் நீங்கி பிறவாமல் இருப்பது சுத்தமே. பின்குறிப்பு – உண்மை உணர ஆர்வமுடன் குருவை அடைந்து மலம் நீக்கி பிறவாத நிலை அடைவதே சுத்தம். #திருமந்திரம் |
சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடுஞ் சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே சாக்கிரா தீதம் தனிற்சுகா னந்தமே ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே. திரு - 2214 கவனத்தில் கவனம் கனவுடனும் கவனத்தில் சுழுத்தி துரியமும். கவனத்தில் அதீதம் சுகானந்தமும் என செய்வது ஐம்மல பாசமே. பின்குறிப்பு – அழுக்குகள் மேல் வைக்கும் பாசமே இறை அறிய தடையாகிறது. #திருமந்திரம் |
சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச் சத்துஅசத்து ஓடத் தனித்தனி பாசமும் மத்த இருள்சிவ னான கதிராலே தொத்தற விட்டிடச் சுத்தஆ வார்களே. திரு - 2206 சுத்த அவத்தையில் தேறியவர்கள் மும்மலத்தை சார்ந்த சத்து அசத்து விட்டு விலகி ஒடத் தனித்தனி பாசமும் மந்தமாக்கும் இருளை சிவனது கதிரால் முற்றிலும் விட்டிட சுத்தமாக மாறுகிறார்கள். பின்குறிப்பு – அவத்தையில் இருந்த புரிந்துக் கொள்பவர் சுத்தராகிறார். #திருமந்திரம் |
மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர் அம்மெய்ச் சகலத்தர் தேவர் சுரர்நரர் மெய்ம்மையில் வேதா விரிமிகு கீடாந்தத்து அம்முறை யோனிபுக்கு ஆர்க்கும் சகலரே. திரு - 2205 முன்று ஐந்து எனப்படும் மலத்துடன் கூடி மயங்குபவர்கள் அம்மெய்ச் சகலத்தர், தேவர், சுரர், நரர். உடல் கொண்ட மெய்ம்மையில் வேதியாமல் விரிமிகு கீழானவற்றில் கிடந்து அம்முறைக்கு யோனி புகுவது செய்யும் சகலரே. பின்குறிப்பு – சுத்தமற்றவர்கள் மீண்டும் பிறப்பார்கள். #திருமந்திரம் |
உத்தர கோச மங்கையு ளிருந்து வித்தக வேடங் காட்டிய இயல்பும் பூவண மதனிற் பொலிந்திருந் தருளித் தூவண மேனி காட்டிய தொன்மையும் வாத வூரினில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக் கருவார் சோதியிற் கரந்த கள்ளமும் பூவல மதனிற் பொலிந்தினி தருளிப் பாவ நாச மாக்கிய பரிசும் (ஒட்டும் முடி கொண்ட மங்கையுடன் இருந்து வித்தக வேடம் காட்டிய இயல்பும் பூ போல் வெளிப்படையாக பொலிவாய் இருந்து தூவண மேனி காட்டிய மகிமையும் காற்று நிறைந்த வாத ஊராகிய உடலில் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் திருவார் பெருந்துறைச் செல்வனாகி கருவாகும் சோதியில் கரந்த கள்ளமும் பூ போன்ற இடத்தில் பொலிவாய் இருந்து பாவத்தை நாசமாக்கிய பரிசும்) #திருவாசகம் |