அன்பு உள்ளமே!
சக்தி சங்கமிப்பதையே சத்சங்கம் என்று அழைக்கிறோம். இது ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6 மணி முதல் 9 மணிவரை நடைபெறும் இதில்
• கேள்வி பதில் உரையாடல்
• தியானம்
• பயனுள்ள பாடல்
• எதாவது ஒரு தலைப்பில் பேசுதல் என அமைந்திருக்கும்.
இது முற்றினும் இலவசமானது. யார்வேண்டுமானாலும் பங்கு பெறலாம்.
கடவுள் என்பது என்ன?, அதை அடைவது எப்படி?, ஆன்மிகம் என்பது எதை குறிக்கிறது?, இது போன்ற கேள்விகளுக்கு விடை காண உதவும் நோக்கில் பல தலைப்புகளில் பேசப்படுகிறது.
இது ஆன்மீக மற்றும் தன்னை அறியும் கலையாகிய யோகம் பயிலும் அன்பர்களுக்கு உதவும் பொருட்டு செய்யப்பட்டது. மேலும் மத பேதங்களைக் கடக்கவும், உண்மை அறிவதற்கும், ஆன்மீகக் கேள்விகளுக்கு விடை தேடவும் உதவுகிறது .
சத்சங்கத்தில் எந்தவித பாகுபாடும் இன்றி எல்லாரும் கலந்துக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளலாம். இது மதம், ஜாதி, இனம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கடந்தது. தமிழ் புரிந்துக் கொள்ளும் ஆற்றல் உள்ள அனைவரும் வரலாம்.
கடவுள் மறுப்பாளர்கள் தனது உள்முக ஆற்றலை வளர்த்துக் கொள்ள இதை பயன்படுத்திக் கொள்ளலாம். மதப் பற்றாளர்கள் மதம் கடந்த சிந்தனையை பெறவும், மனிதர்களுக்குள் வேறுபாடுகளைக் களைய நினைப்பவர்கள் அதற்க்கான ஆழ்ந்த புரிதலை வளர்த்துக்கொள்ளவும் சத்சங்கம் பயனுள்ளதாய் அமையும்.
காலம் : ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6 மணி முதல் 9 மணிவரை
கட்டணம் : இலவசம்
தொடர்பு : +91 97102 30097 | yogakudil@gmail.com
சத்சங்க பேச்சுக்களை காண கிழ்காணும் இணைப்பை சொடுக்கவும் …
https://www.youtube.com/user/MrSivayogi
சத்சங்கம் பன்னிரண்டு வாரம் தொடந்து வருபவர்களுக்கு உபதேசம் மற்றும் ஆன்மீக பயிற்சிகள் இலவசமாய் வழங்கப்படும் *
27 ஏப்ரல் 2025
5.00 PM to 9.00 PM
Yogakudil ChennaiView On Map
Rs Free