யோகக்குடில் தன்னையறியும் கலையை மட்டுமே கற்றுத்தருகிறது. எந்தவிதமான கருத்துக்களையும் உங்களுக்கு திணிப்பதில்லை. மேலும் நீங்கள் அடிமையாக செயல்பட வேண்டிய அவசியம் இல்லை.
உடம்பு உண்மையை சுமந்து கொண்டு இருப்பது போல் யோகக்குடில் காத்திருக்கிறது. உடம்புடன் இருக்கும் ஒவ்வொருவரும் மறைபொருளை பாதுகாத்து கொள்ளும் தன்மையுடன் இருந்தால் யோகக்குடிலை அனுகவும்.
உங்கள் உடம்பினை அணுகி உயிரை அறியும் வித்தைகள் பல உள்ளன. அப்படி உங்களால் அடைய முடியும் என்றால் முதலில் முயற்சி செய்யுங்கள். வெற்றியடைய வாழ்த்துக்களுடன் உங்களை பாராட்டுகிறேன்..
யோகம் என்ற பெயரில் ஒழுக்க கோட்பாடுகளையும், அர்த்தமற்ற பயிற்சிகளையும் அளிக்கும் குருட்டு குருமார்களின் போலித்தனத்தில் சிக்கிக் கொண்டு உங்களை நீங்களே அவமதிக்காதீர்கள்.
எல்லாம் வல்ல இறையின் கருணையே நீங்கள் நீங்களாக இருப்பது. ஆனால் நீங்கள் நீங்களாக இல்லாமல், உங்களை அடிமையாக்கி கொண்டது நீங்கள். நீங்கள் அடிமையாக இருப்பதற்கு தொடர்ந்து எழுப்பப்படும் எண்ணங்களே அன்றி எண்ணங்களற்ற நீங்கள் அடிமையாக இருக்க முடியாது.
*தீக்குச்சி அணைவதைப்போல்*
*"உயிர் விளங்குக" என்று*
*எண்ணங்களை அகற்றினேன்.*
"திருஞானதேசிகன்" சிவயோகி
யோகக்குடில்