• +91 97102 30097
  • reach@yogakudil.org

ஹரி

Awesome Image

என் கர்தாவை பற்றி கூறுவதற்கு சந்தர்பம் கொடுத்த இறைவனுக்கு நன்றி.... என் பெயர் ஹரி. உபதேசம் பெற்ற நாள் - 17.3.2017ஆன்மீகம் என்ன என்றால் சபரிமலைக்கு போவது மலை ஏறுவது, விரதம் இருப்பது, கறி, மீன் சாப்பிடாமல் இருப்பது என்று என்னி பல வருடம் இப்படியே அறியாமையில் இருந்தேன், என் 20 வயது முதல் 35 வயது வரை மேலே குறிப்பிட்டது போல் விரதம், மலைஏறுவது என்று நாட்கள் ஓடின. எனக்குள் நிறைவு தன்மை வரவில்லை என் மனதில் ஒரு கேள்வி படைத்தவன் எப்படி இருப்பான் என்று... அப்போது யோகா செய்தால் கடவுளை அடையலாம் என்று நண்பர்கள் கூறினார்கள் ஈஷா யோகா சென்று பல பயிற்சிகள் எடுத்து கொண்டேன் ஒன்றரை ஆண்டுகள் குட்டுகரணம் அடித்தாலும் குண்டலினி எழவில்லை எந்த ஒரு மாற்றமும் இல்லை ஈஷாவில் அதே சிலை வழிபாடு மறுபடியும் விரக்தி, அங்கிருந்து மந்திரம், ஏவல் செய்வரிடம் சிக்கி கொண்டேன் அவன் என்னை குட்டிசாத்தானுடனும், ஆவிகளுடனும் கூட்டு வைக்கசொன்னான் அங்கேயும் கடவுளை தெரிந்த கொள்ளமுடியவில்லை.. இந்த ஆன்மீகம் நமக்கு தேவையில்லை என்று கடவுளை வாய்க்கு வந்தபடி திட்டி தீ்ர்த்தேன்... 5 மாதம் எந்த தேடலும் இல்லாமல் இருந்தேன்... ஒருநாள் youtube. ல் படம் பார்த்து கொண்டிருந்தபோது சிவயோகி ஐயாவின் குண்டலினி விடியோவை பார்த்தேன் அதில் அவர் கூறிய ஒரு வரி எனக்கு தூக்கி வாரி போட்டது நெற்றிக்கண் விழிப்பிற்கு உன் குருவுக்கு உயிரையே கொடுக்கலாம் அடுத்த பிறவியில் அது உனக்கு தொடரும் என்று.. மேலும் 40 நாட்களில் நெற்றி கண் விழிப்பு வரும் என்று கூறினார்... அடுத்த நாளே போனில் பேசினேன் உபதேசம் வாங்க வரசொன்னார். 17.03.2017 மாலை பல ஆன்மீக ரகசியங்களை எனக்கு கூறினார்..அடுத்த பத்து நாட்களில் நெற்றிக்கண் விழிப்பு வந்துவிட்டது எனக்கு ஆச்சர்யம் ஒன்றரை வருட பயிற்சியில் வராத நெற்றிக்கண் விழிப்பு ஐயாவின் பயிற்சியில் பத்து நாளில் வந்தது என்று.. தொடர்ந்து பயிற்சி பக்தியுடன் செய்தேன் நாத அனுபவம் ஏற்பட்டது பிறகு பார்க்கும் இடத்தில் எல்லாம் வட்ட வட்டமாக காட்சி அளித்தது, பாம்பு போன்று வளைந்த காட்சி ஒன்று என் முன்னே தோன்றியது, உள் நிலையில் ஆனந்தமான சூழ்நிலை. பிரச்சினைகள் வந்த போதும் அதை எதிர்கொள்ளும் தைரியம் வந்தது ஒன்று நன்றாக ஆழமாக புரிந்தது வாழ்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டும். ஒடமுடியாது என்று... அப்போது பயிற்சியின் விஷேயத்தை நன்றாக உணர்ந்தேன் என்னை எனக்கே காண்பித்த என் குருவிற்கு நன்றி... என் குருவின் எளிமையான பாதம் சரணடைகிறேன்...  கடவுள் தெரிந்து கொள்வதற்கு குரு சிவயோகி பயிற்சி போதுமானது...

- ஹரி