அன்புள்ள குரு சிவயோகி ஐயா அவர்களுக்கு,
சிரம் தாழ்ந்த வணக்கங்களுடன். சுந்தர் பாண்டி மதுரையில் இருந்து..
என் மனதில் மதங்களுக்கு எதிராக எழும் எண்ணங்கள் சரியா தவறா என்ற குழப்பம் நிறைந்த காலம், கடவுளை ஏற்காமல் நாத்திகம் பேசவும் இடம் தராத மனம்.. இவ்வாறு இருந்த சூழலில் இறை தேடல் என்ற பெயரில் சில சடங்குகளையும் ஏற்று இருந்தேன்.. யதார்த்தமாக வாசியோகம் காணொளியை காண நேர்ந்தது.. எனக்குள் நானே போட்டு வைத்திருந்த வேலிகளை மேலும் சில காணொளிகளின் ஊடாகவே சிவயோகி ஐயா அவர்கள் அறுத்து விட்டார்.. பார்வை விசாலமானது.. கடவுள் என்பதை புதிய கோணத்தில் பார்க்க முடிந்தது.. சில வாரங்கள் தொடர்ந்து சத்சங்கம் அதன்பிறகு 11/03/2017 அன்று உபதேசம் பெற்றேன்.. பயிற்சியின் விளைவை 18 நாட்களில் நெற்றிக்கண் விழிப்பில் உணர்ந்தேன்.. பிறகு ஆனந்த வாழ்வு வகுப்பு.. எத்தனை கொண்டாட்டமானது இந்த வாழ்க்கை.. இவ்வளவு கருணையுடனும், பழகுவதற்கு எளிமையாகவும் உள்ள குரு கிடைப்பதற்கு அருளிய இறைவனுக்கு நன்றிகள். நிச்சயம் சமாதி சாதிப்பேன் என் குரு அருளுடன்..
நன்றிகளுடன்
சுந்தர் பாண்டி
மதுரை.
8428700138
- சுந்தர் பாண்டி