திருமந்திரம் - 2737 - ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்
ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழிசை நாடகத் தேஇசைந் தானே. திரு - 2737
ஏழாகும் சக்கரத்தில் ஏழாக இறங்கி எழுந்து ஏழினில் ஒன்றாய் இறங்கி அமைந்து ஒன்றாகி ஏழினில் ஆறு வழிகள் எங்கள் பரஞ்சோதி ஏழிசை நாடகத்தில் இசைவு பெற்றானே. பின்குறிப்பு – சக்கரங்களும் சுரங்களும் ஏழாக இசைந்தது பரஞ்சோதி அருளே.