client
தட்சிணாமூர்த்தி
குவைத்
திருஞானதேசிகன் சிவயோகியைக் கண்டபின்னே...

கனவில் இருப்பதை அறிந்தேன்

கடவுள் எதுவென அறிந்தேன்!


அன்பே சிவமென அறிந்தேன்

அன்னையும் பிதாவும் முன்அறி

தெய்வமென அறிந்தேன்!


கடவுள்-தெய்வம் வேறென அறிந்தேன்

கோவில்களில் இருப்பது

தெய்வசிலையென அறிந்தேன்!


மனிதம் எதுவென அறிந்தேன்

மனிதபிறவி ஏனென அறிந்தேன்!


யானும் ஓர் அவதாரம்

யானும் ஓர் சித்தர்

யானும் ஓர் அற்புத

மானிடப்பிறவியென அறிந்தேன்!


ஒன்றிலிருந்து ஆறான

பரிணாமம் அறிந்தேன்

பெண்மையைப் போற்றும்

வழிமுறை அறிந்தேன்!


சைவம் அசைவம் அறிந்தேன்

சாதல் சமாதி அறிந்தேன்!


காதலின் உண்மை அறிந்தேன்

காமத்தின் உண்மை அறிந்தேன்!


உபதேசம் பெற்றேன்

உடம்பின் மகத்துவம் அறிந்தேன்!


பிறப்பின் நோக்கம் அறிந்தேன்

பிறப்பறுக்கும் வித்தையறிந்தேன்!


மெய்ப்பொருள் அறிந்தேன்

மறைபொருள் அறிந்தேன்!


மூலக்கனல் எழுப்ப அறிந்தேன்

மூன்றாம்கண் விழிப்படைந்தேன்!


ஐந்து பயிற்சி பெற்றேன்

ஐயனை உணரும் பாதை அறிந்தேன்!


மனம் கொண்டு

மனிதம் உணர்ந்து ஏழு

மலைமேல் கடந்து

மகேசனை அடையும்

மகிமை அறிந்தேன்!