அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஆணவம், திமிர், அகங்காரத்தின் மொத்த உருவமாகத் திரிந்து கொண்டிருந்தேன். எனக்குள் ஆன்மீகத் தேடல் உள்ளது என்பதையே ஆணவமாக சொல்லித்திரிந்த ஜந்துவாகிய என்னையும் ஒரு மனுஷியாக மாற்றிய குருவிற்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள். குருவின் பாதகமலங்களுக்கு அன்பு முத்தங்கள்.
07/01/2018ல் உபதேசம் பெற்று, மூன்று நாட்களில் மூன்றாவது கண் விழிப்பு ஏற்பட்டு இன்றுவரை பயிற்சியை பல்வேறு விதமான அனுபவங்களோடு தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். அனைவரின் அனுபவங்களை படிக்கும்போது குருவின் கருணையை எண்ணி கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. குருவின் கருணையையும் ஆசீர்வாதத்தையும் என்றென்றும் வேண்டும்
- சரளா