• +91 97102 30097
  • reach@yogakudil.org

வேல்முருகன்

Awesome Image

 குருநாதர் சிவயோகி நல்ல பாதங்களுக்கு பணிவன்பான வணக்கம்

 அனைவருக்கும் அன்பான வணக்கம்

எனது பெயர் வேல்முருகன் த/பெ தங்கவேல், இடைச்சித்தூர் கிராமம், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம். தமிழ்நாடு - 606104.

கைபேசி எண்- +91 9943118361.

வயது- 33, பிறந்த தேதி:- (28-11-1984)

 

சிவயோகி ஐயாவிடம் கடவுள் அல்லது தன்னை உணர்வதற்கான உபதேசப் பயிற்சியை நேரடியாக யோகக்குடில் (28-12-2015) அன்று இறைவன் அருளால் பெற்றேன்.

 

மனதில் ஏதோ ஒன்று குறைவது போலவும், திருப்தி இல்லாததுபோல் பலமுறை இருந்தது உண்டு.  மூத்தமகள்(தமிழருவி) உடல்நிலை சரியில்லாமல் பல இன்னல்களுக்கு பிறகு இறந்து போனாள், அந்த சம்பவத்திற்கு பிறகுதான் மனவலியும் வேதனையும் ஏன் என்ற கேள்வியும், தேடல்களும் குழப்பங்களும், சமுகத்தின் மீதும் மதத்தின் மீதும் கோபமும் வருத்தமும் உண்டானது, யூடியூபில் பல சொற்பொழிவு கேட்ட பிறகும் மனம் அமைதி பெறவில்லை, கேள்விகள் மேலும் அதிகமானது.

 

எல்லாம் வல்ல இறையருளால் சிவயோகி ஐயாவின் திருக்குறளின் கடவுள் வாழ்த்து காணொளியை கண்டேன்., அதன் பிறகு ஐயாவின் காணொளிகளை இரவு பகல் என்று பாராமல் ஓரளவு அனைத்து காணொளிகளையும் கண்டுவிட்டேன். ஐயா சற்று கரடு முரடாக பேசினாலும் அவரின் பேச்சு தெளிவையும், முடிவையையும் கொடுத்தது. எனது கேள்விகளுக்கெல்லாம் பதிலானார். பிறகு உபதேசம் பெற்று, ஆனந்தவாழ்வு வகுப்பு சென்று, அவரின் வாட்ஸ்அப் குழு வரையிலும் வந்து விட்டேன்.

 

ஐயாவின் யூடியூப் மூலமும், வாட்ஸ்அப் குழுவின் மூலமும் தமிழ் மொழியின் வளம் ஓர் அளவிற்கு தெளிவாக புரிகிறது, உபதேசத்தின் மூலம் பல நற்றமிழ் நூல்கள் புரிந்தது, கோவில்களில் உள்ள சிலைகளின் தத்துவ விளக்கமும், மதங்கள் கூறவரும் விபரத்தையும் அனுபவமாக பெற்றேன்.

 

பக்தியுடன் கூடிய உபதேச பயிற்சிகளால் ஒரு மாதத்திற்குள் நெற்றிக்கண் அல்லது மூன்றாவது கண் விழிப்படைந்தது. அந்த அனுபவத்தினால்  மகிழ்ந்து ஆர்வம் தூண்டப்பட்டு தொடர்ந்து பயிற்சி செய்தேன், இரண்டு மாதத்திற்குள் நாதம் அல்லது ஓங்கார இசையை அனுபவமானது. முதலில் இரண்டு காதிலும் மாறிமாறி கேட்டது, சில நாட்களுக்கு பிறகு இடது காதில் அதிகமாகவும், வலது காதில் குறைவாகவும் கேட்கிறது. மதிய நேரத்திலும், தனிமையாக இருக்கும் பொழுதும், மெய்பொருளையும் மறைபொருளையும் கவனிக்கும்போதும் நாதம் அதிகமாக கேட்கும். பிறகு பொருளில் சுவாசம் சென்று வருவதையும், மலர் விரிவதையும் அமுதம் சுரந்து ஞானக்குளியல் தானக நடப்பதையும், தக்கன் வேள்வி தானாக நடப்பதையும், மறைபொருளில் சுவாசம் தானாக மேலேறுவதையும், உடல் லேசாக மாறுவதையும், சில நேரங்களில் உடல் காற்றில் ஆடுவதை போலவும் உணர்ந்தேன். புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் மிக உயர்வாக கூறும் அனுபவங்களையெல்லாம் மிக எளிமையாக ஐயாவின் பயிற்சியின் மூலம்  கிடைத்தது. இது உடல் சார்ந்த அனுபவங்கள் ஆகும்.

 

ஆனந்தவாழ்வு வகுப்பில் ஒரு மனிதன் ஆனந்தமாக வாழத் தேவையான அனைத்தையும் பாடமாக சொல்லி கொடுத்து, கடவுள், பிறப்பு, வாழ்க்கை, இறப்பு, சமாதி, மதங்கள், வேதங்கள் கூறும் விபரங்கள் எல்லாம் புரிய வைத்தார்.

 

இயற்கை ஒழுக்கம், சமுக ஒழுக்கம், மனித ஒழுக்கம் என்பதை எல்லாம் புரிய வைத்து, சாதி, மதம், மொழி, நாடு எல்லாம் கடந்து குற்றவுணர்விலிருந்து நீக்கி மனிதத்துடன் எல்லையற்று இன்பமாக வாழ வழிவகை செய்தார். என்னை எனக்கு மீட்டு கொடுத்தவர்., எல்லையற்ற ஒன்றை புரிய வைத்தவர், வாட்ஸ்அப் குழு அமைத்து பல சத்தேகங்களைத் தீர்த்து, என்னை போன்ற பலர் வளர அருள் செய்கிறார்.  யோகக்குடில் வருபவர் ஆனந்தமாக வாழ்ந்து இறைவனை அடைவது உறுதி உண்மையை மதித்து போற்றினால். 

 

குருவே, திருவே, யாதுமாகி நிற்கும் பரம்பொருளே, சிவயோகியே நின்னை கண்டதால் மனித பிறவியின் மகத்துவத்தை உணர்ந்தேன், இப்பிறப்பு முழுமை பெற வழி கிடைத்தது, உன்னை காணவில்லை என்றால் சமுக சாயத்தில் தொலைந்து போயிருப்பேன், ஒரே பார்வையில் என்னை மீட்ட ஏகமே உம் பாதம் வாழ்க, உம் புகழ் வாழ்க, 

 

என்னை போன்று பிறரும் இறையனுபவம் பெற்று ஆனந்தமாக  வாழ வாய்ப்பாக அமையும் என்று சிவயோகி ஐயாவின் உபதேசத்தின் மூலம் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, குருவடிவாகி நிற்கும் இறையருளை நன்றியுடன் வணங்குகிறேன்.

 

நன்றி ஐயா

- வேல்முருகன்